என் மலர்tooltip icon

    ஆப்கானிஸ்தான்

    • இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஆப்கானிஸ்தானை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனிடையே ஆப்கானிஸ்தானை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் குற்றசாட்டை ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்

    • பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
    • முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசு கவலை தெரிவித்துள்ளது.

    இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என தலிபான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • இன்று மதியம் 12.17 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் இன்று (சனிக்கிழமை) 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில்இன்று மதியம் 12.17 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. 

    • அனுமதியின்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார்
    • அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் செயல்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 இல் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கப் பெண் பாயே ஹால் என்பவரை தலிபான்கள் சிறைபிடித்தனர்.

    ஆப்கனிஸ்தான் வந்த அவர் அனுமதியின்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை விடுவிப்பதற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.

    இதற்கிடையே அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் நாட்டின் முயற்சியால் பாயே ஹால் விடுவிக்கப்பட்டார். அவர் காபூலில் உள்ள கத்தார் தூதரகத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    • தலிபான்களின் நடவடிக்கைக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்தது.
    • பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்கள் உயர்கல்வி பயில தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.

    இதற்கிடையே சமீப காலமாக சர்வதேச உறவை மேம்படுத்த தலிபான்கள் முடிவுசெய்துள்ளனர். எனவே நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தற்போது கடந்த ஆண்டு தலைநகர் காபூலில் மூடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி உள்ளனர்.

    ஏற்கனவே, பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது.

    • பிப்ரவரி 18ம் தேதி 4.6 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.
    • ஆப்கானிஸ்தானில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி 4.6 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.

    தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஆப்கானில்தானில் 4.6 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.

    இந்நிலையில், இன்று மதியம் 2.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலநடுக்கம் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    இதன்மூலம், ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டில் பெண் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
    • ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும்

    ஆப்கனிஸ்தானில் 'ரேடியோ பேகம்' என்ற பெண்கள் வானொலி கடந்த மார்ச் 2021 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்டது.

    இது முழுக்க முழுக்க ஆப்கானிய பெண்களால் இயங்கும் ஒரு வானொலி ஆகும். இதன்மூலம் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆப்கானிய பள்ளி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இதன் இணை சேவையாக பேகம் டிவி என்ற சாட்டிலைட் தொலைக்காட்சியும் இயங்கி வந்தது.

    ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கனிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து அங்கு தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். மத அடிப்படைவாதத்துடன் செயல்படும் தாலிபான்கள் பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை முடக்கினர். நாட்டில் பெண்கள் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்தனர்.

    'ரேடியோ பேகம்' தடை செய்யப்பட்டது. இந்த தடையை நீக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ரேடியோ பேகம் மீதான தடையை தாலிபான் அரசு நீக்கியுள்ளது.

    தாலிபானின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் நேற்று (சனிக்கிழமை) இரவு வெளியிட்ட அறிக்கையில், 'ரேடியோ பேகம்' செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதி கோரி பல முறை கோரிக்கைகள் வந்தன.

    பத்திரிகை கொள்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்த மீறல்களையும் செய்யாது என்றும் அந்த நிலையம் உறுதி அளித்துள்ளதை அடுத்து தடை தளர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    இந்தக் கொள்கைகள் மற்றும் விதிகள் என்ன என்பது குறித்து அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பாக ரேடியோ பேகம் நிலையமும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.     

    • இந்திய நேரப்படி இன்று மாலை 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் இன்று மாலை இந்திய நேரப்படி 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.62 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    • பெண்கள் கல்வி கற்கவும், பொது இடங்களுக்கு செல்லவும் தடை.
    • பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

    சமையல் அறைகளில் , முற்றங்களில் வேலை செய்யும் பெண்களை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழி வகுக்கும் என அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் ஜபி ஹில்சா முசாஹித் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே உள்ள வீடுகளில் ஜன்னல்கள் இருந்தால் அதனை மறைக்கும் விதத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், புதிய கட்டிடங்களில் ஜன்னல்கள் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்டை வீட்டாரிடம் இருந்து தொல்லையை தவிர்க்க சுவர் கட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்படும் கட்டுமான தளங்களை பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இந்த வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த அமைப்பைக் குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள 7 கிராமங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் அனைவரும் பொதுமக்கள் என்றும், இதில் பெண்கள், குழந்தைகளே அதிகம் என்றும் தகவல் வெளியானது.

    இந்த தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து குண்டுகளை வீசியது.
    • பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    காபூல்:

    பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள் ஆதரவளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தலிபான் அரசு மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு எல்லையையொட்டி ஆப்கானிஸ்தான் பத்திகா மாகாணம் பர்மால் மாவட்டத்தில் உள்ள லேமன் உள்ளிட்ட 7 கிராமங்கள் மீது பாகிஸ்தான் அதிரடி வான் வழித் தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து சரமாரியாக குண்டுகளை வீசியது.

     இந்த குண்டு வீச்சில் பர்மால் முர்க்பஜார் கிராமம் முற்றிலும் உருக்குலைந்தது. வீடுகள் கடும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் உயிர் இழந்து விட்டனர். இவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பலரை காணவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் இந்த செயலுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பொது மக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது கோழைத்தனமான தாக்குதல் செயல். ஒருதலைபட்ச வான்வழித் தாக்குதல்.

    இந்த தாக்குதலில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் வஜிகிஸ்தான் பகுதியை சேர்ந்த அகதிகள் ஆவார்கள். பலரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம்.

    பொதுமக்களின் நிலங்கள், இறையாண்மை ஆகியவற்றை பாதுகாப்பது தங்களின் கடமையாகும். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என கூறப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்தலை பாகிஸ்தான் இன்னும் உறுதிபடுத்தவில்லை. ஆனால் எல்லைக்கு அருகில் உள்ள பயங்கரவாத அமைப்பினரின் மறைவிடங்களை குறிபார்த்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்ற மான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    • அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு.

    ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

    ×