ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு

பிப்ரவரி 18ம் தேதி 4.6 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.ஆப்கானிஸ்தானில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவு
Published on

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி 4.6 மற்றும் 4.3 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.

தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஆப்கானில்தானில் 4.6 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.

இந்நிலையில், இன்று மதியம் 2.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலநடுக்கம் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதன்மூலம், ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com