என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீராங்கனைகள் காயத்தால் முதல் சுற்றில் வெளியேறினர்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா மற்றும் பெலாரசின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினர்.

    பெலாரசின் விக்டோரியா அசரென்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோத இருந்தார். தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதேபோல், பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் எமினா பேக்தாசுடன் மோத இருந்தார். காயம் காரணமாக சபலென்காவும் போட்டியில் இருந்து விலகினார்.

    முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா, விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் தொடரிலும் சபலென்கா காயம் காரணமாக காலிறுதியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை முதல் சுற்றில் வென்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா, பிரான்சின் டயான் பாரியுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஒசாக 6-1 என கைப்பற்றினார். 2வது செட்டை பாரி 1-6 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.

    இறுதியில், 6-1, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற நவாமி ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நவாமி ஒசாகா, 2018-ம் ஆண்டுக்குப் பிறகு விம்பிள்டனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார் ஒசாகா.

    • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடக்கிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், தரவரிசையில் 53-ம் நிலை வீரரான செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் சுற்றில் நேற்று மோதினார்.

    இதில் சுமித் நாகல் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • காஸ்பர் ரூட் ஆஸ்திரேலியாவின் அலேக்ஸ் போல்ட்-ஐ 7(7)-6(2), 6-4, 6-4 வீழ்த்தினார்.
    • பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் செர்பியாவின் துசன் லாஜோவிக்கை 6-3, 6-4, 7-5 என வீழ்த்தினார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் ஆஸ்திரேலியாவின் அலேக்ஸ் போல்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் ரூட் 7(7)-6(2), 6-4, 6-4 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    10-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் செர்பியாவின் துசன் லாஜோவிக்கை எதிர்கொண்டார். இதில் டிமிட்ரோவ் 6-3, 6-4, 7-5 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    5-ம் நிலை வீரரான மெட்வெதேவ் அமெரிக்காவின் கோவாசெவிக்கை எதிர்கொண்டார். இதில் மெட்வெதேவ் 6-3, 6-4, 6-2 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    • 28-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் டி. யாஸ்ட்ரெம்ஸ்கா 6-1, 7(7)-6(1) என வெற்றி பெற்றார்.

    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒன்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி- அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லர் மோதினர். இதில் மரியா சக்காரி 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீராங்கனை வர்வரா கிராசெவா உக்ரைன் வீராங்கனையான லெசியா டிசுரேன்கோவை எதிர்கொண்டார். இதில் கிராசெவா 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் 28-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் டி. யாஸ்ட்ரெம்ஸ்கா அர்ஜென்டினாவின் என். பொடோரோஷ்காவை எதிர்கொண்டார். இதில் யாஸ்ரெம்ஸ்கா 6-1, 7(7)-6(1) என வெற்றி பெற்றார்.

    ஜெர்மனி வீராங்கனை பெல்ஜியம் வீராங்கனை ஜி. மின்னென், சீன வீராங்கனை லின் ஜு, ருமேனியா வீராங்கனை அன்கா டோடோனி, உக்ரைன வீராங்கனை கோஸ்ட்யுக், இத்தாலி வீராங்கனை ஜேஸ்மின் பயோலினியும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.

    உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.

    • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.

    லண்டன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டியில் யார்- யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் 53-ம் நிலை வீரர் செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் சுற்றில் நாளை மோதுகிறார்.

    நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), எஸ்தோனியா வீரர் மார்க் லாஜலை எதிர்கொள்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), செக் குடியரசின் தகுதி நிலை வீரர் விட் கோபிரிவாவுடன் மோதுகிறார்.

    • ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
    • இதில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    லண்டன்:

    ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ் பர்செலுடன் மோதினார்.

    இதில் பிரிட்ஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பிரிட்ஸ் பெறும் 3-வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
    • இதில் கனடா வீராங்கனை ஆனி பெர்னாண்டஸ் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இத்தாலி ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினா, கனடா வீராங்கனை லைலா ஆனி பெர்னாண்டசுடன் மோதினார்.

    இதில் கசட்கினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் என்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவுடன் மோதினார்.

    இதில் பவுலினி 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். இதன்மூலம் கசட்கினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கசட்கினா, கனடா வீராங்கனை ஆனி பெர்னாண்டசுடன் மோத உள்ளார்.

    • ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், கனடா வீராங்கனை

    லைலா ஆன்னி பெர்னாண்டசுடன் மோதினார்.

    இதில் மேடிசன் கீஸ் 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், சீனாவைச் சேர்ந்த ஷாங் ஜங்செங்குடன் மோதினார்.

    இதில் பிரிட்ஸ் 7-6 (7-5), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்சாண்டர் வுகியுடன் மோதுகிறார்.

    ×