என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • போலினா-மரியா ஜோடி விலகியதால் இந்திய ஜோடி அரை இறுதி வாய்ப்பை பெற்றது.
    • இரட்டையிர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா ஜோடி அரை இறுதியில் இந்தோனேசியாவுடன் ஜேனிஸ் டிஜென்-அல்டிலா ஜோடியை சந்திக்கிறது.

    சென்னை:

    2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250 ) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த கால் இறுதி ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென் ( இந்தோனேசியா), 7-ம் நிலை வீராங்கனையான கிம்பெர்லி பிரெல் (ஆஸ்திரேலியா) , ஜோர்னா கார்லேண்ட் ( சீன தைபே), லான்லானா தராருடீ (தாய்லாந்து) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா போசலே ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. போலினா-மரியா ஜோடி விலகியதால் இந்திய ஜோடி அரை இறுதி வாய்ப்பை பெற்றது.

    மற்றொரு இந்திய ஜோடியான மாயா-வைஷ்ணவி ஜோடி கால் இறுதியில் தோற்றது. முதல் வரிசையில் இருக்கும் ஸ்டார்ம் ஹண்டர் (ஆஸ்திரேலியா)-மோனிகா (ருமேனியா) ஜோடி 6-2, 6-1 என்ற கணக்கில் டாட்டியானா-யஷினா ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இன்று மாலை நடைபெறும் ஒற்றையர் அரை இறுதி ஆட்டங்களில் லான்லானை தராருட்-ஜேனிஸ் டிஜென், கிம்பெர்லி-ஜோர்னா கார்லேணட் மோதுகிறார்கள்.

    இரட்டையிர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா ஜோடி அரை இறுதியில் இந்தோனேசியாவுடன் ஜேனிஸ் டிஜென்-அல்டிலா ஜோடியை சந்திக்கிறது.

    • 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.
    • இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபிகிராப், செரீனா வில்லியம்ஸ் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ரியாத்:

    ஆண்டுதோறும் முன்னணி 8 வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.

    இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபிகிராப், செரீனா வில்லியம்ஸ் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். 'ஸ்டெபிகிராப்' பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரம் அரினா சபலென்கா (பெலாரஸ்), நடப்பு சாம்பியன் கோகோ காப், ஜெசிகா பெகுலா (இருவரும் அமெரிக்கா), ஜாஸ்மின் பாவ்லினி (இத்தாலி) ஆகியோரும், 'செரீனா' பிரிவில் விம்பிள்டன் சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து), அமன்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ் (இருவரும் அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.137 கோடியாகும். போட்டி கட்டணம், லீக் சுற்றுக்குரிய பரிசு என ஒரு வீராங்கனை தோல்வியே சந்திக்காமல் வாகை சூடினால் ரூ.46½ கோடியை பரிசாக அள்ளுவார். முதல் நாளில் ஸ்வியாடெக்- மேடிசன் கீஸ், அனிசிமோவா- ரைபகினா சந்திக்கிறார்கள்.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா காயத்தால் வெளியேறினார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய எம்போகா 6-1 என முதல் செட்டை வென்றார். அடுத்த செட்டில் 3-1 என முன்னிலை பெற்றிருந்தபோது கலின்ஸ்கயா காயத்தால் விலகினார். இதையடுத்து, எம்போகா அரையிறுது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
    • இதன் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் லாரென்சோ சொனேகா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சொனேகா முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜெனை எதிர்கொண்டார்.
    • 2 மணி 11 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜேனிஸ் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் புருவிர்தோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    சென்னை:

    2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜெனை எதிர்கொண்டார். 2 மணி 11 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜேனிஸ் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் புருவிர்தோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச் (குரோஷியா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் சஹஜா யாமலபள்ளியை (இந்தியா) எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிதிபதி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் கிம்பெர்லி பிரெலிடம் (ஆஸ்திரேலியா) பணிந்தார். இதன் மூலம் ஒற்றையரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. அரினா ரோடினோவா (ஆஸ்திரேலியா), போலினா லேட்சென்கோ (ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் தியா ரமேஷ்- லட்சுமி பிரபா ஜோடி 3-6, 7-5, 8-10 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ததியானா புரோஜோரோவா- எகதெரினா யாஷினா இணையிடம் போராடி வீழ்ந்தது. பிரார்தனா தோம்ப்ரே (இந்தியா)- அரியானே ஹர்டோனா (நெதர்லாந்து) ஜோடியும் முதல் சுற்றுடன் நடையை கட்டியது.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - கேப்ரியல் டியாலோ (கனடா) மோதினர்.
    • டி மினார் 3-வது சுற்றில் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - கேப்ரியல் டியாலோ (கனடா) மோதினர்.

    இதில் தொடக்கம் முதலே இருவரும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை டி மினார் போராடி கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை டியாலோ கைப்பற்றினார்.

    இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை டி மினார் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தில் டி மினார் 7-6, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    இவர் 3-வது சுற்றில் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.

    • பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஸ்பெயினின் ஜேம் முனார் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா வெற்றி பெற்றார்.

    ஹாங்காங்:

    ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா, சக நாட்டு வீராங்கனை கமீலா ராகிமோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கலின்ஸ்கயா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்திய தரப்பில் லட்சுமி பிரபா- தியா ரமேஷ், ஸ்ரீவள்ளி- அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா- ருதுராஜா போசேல், வைஷ்ணவி அத்கர்- மாயா ரேவதி ஆகிய ஜோடிகள் களம் காணுகின்றன.
    • போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.41 கோடியாகும்

    சென்னை:

    தமிழக அரசின் ஆதரவுடன் 2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி நவம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. 3 ஆண்டுக்கு பிறகு நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலக தரவரிசையில் 69-வது இடம் வகிக்கும் ஜய்னப் சோன்மெஸ் (துருக்கி), 74-ம் நிலை வீராங்கனை பிரான்செஸ்கா ஜோன்ஸ் (இங்கிலாந்து), ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச் (குரோஷியா), நடப்பு சாம்பியனான லின்டா புருவிர்தோவா (செக்குடியரசு), லுசியா பிரான்செட்டி (இத்தாலி), ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர இந்திய இளம் நட்சத்திரங்கள் மாயா ரேவதி, ஸ்ரீவள்ளி பாமிதிபதி, சஹஜா யாமலபள்ளி ஆகியோருக்கு நேரடியாக பிரதான சுற்றில் ஆடும் வகையில் 'ைவல்டு கார்டு' சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவையைச் சேர்ந்த 16 வயதான மாயா, முதல் ரவுண்டில் ஸ்ரீவள்ளியுடன் மோத உள்ளார்.

    நேற்று நடந்த தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர் 2-6, 3-6 என்ற நேர் செட்டில் பிரான்சின் ஆஸ்ட்ரிட் லியான் பூனுடன் தோல்வி அடைந்தார். ஆனாலும் வைஷ்ணவி அத்கருக்கு பிரதான சுற்றில் விளையாடும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அதாவது நெருக்கடியான போட்டி அட்டவணை காரணமாக நியூசிலாந்தின் லுலு சன் கடைசி நேரத்தில் விலகி விட்டார். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் வைஷ்ணவி அத்கர் ஆடுகிறார். அவர் முதல் சுற்றில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டோனா வெகிச்சுடன் இன்று மல்லுகட்டுகிறார்.

    நடப்பு சாம்பியனான புருவிர்தோவா தனது சவாலை தகுதி நிலை வீராங்கனை பிரான்சின் ஆஸ்ட்ரிட் லியான் பூனுடன் தொடங்குகிறார்.

    இரட்டையர் பிரிவில் மோனிகா நிகல்சுகு (ருமேனியா)- ஸ்டோம் ஹன்டர் (ஆஸ்திரேலியா) ஜோடிக்கு போட்டித் தரநிலையில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக கால்இறுதியில் கால்பதிக்கும் அவர்களுக்கே பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக தெரிகிறது.

    இந்திய தரப்பில் லட்சுமி பிரபா- தியா ரமேஷ், ஸ்ரீவள்ளி- அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா- ருதுராஜா போசேல், வைஷ்ணவி அத்கர்- மாயா ரேவதி ஆகிய ஜோடிகள் களம் காணுகின்றன.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2.41 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.32 லட்சம் பரிசுத்தொகையுடன் 250 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி ரூ.11½ லட்சம் பரிசாக பெறுவார்கள்.

    முதல் நாள் ஆட்டங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை டி.டி ஸ்போர்ட்ஸ், யூரோ ஸ்போர்ட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது.
    • ஒற்றையர் பிரிவின் இறுதியில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.

    வியன்னா:

    வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 3-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என வென்று சாம்பியன் பட்டம் வென்றார். வியன்னா ஓபன் தொடரில் இவரது 2வது பட்டமாகும்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது.
    • சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் இறுதிப்போட்டியில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்றது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இறுதிச்சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பென்சிக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் அரையிறுதியில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக், அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.

    இதில் 7-6 என பென்கிக் முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக சோபியா கெனின் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பென்கிக் 6-2 என வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெலிண்டா பென்கிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை சந்திக்கிறார்.

    ×