என் மலர்
டென்னிஸ்
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த ரிபாகினா அடுத்த இரு செட்களை 6-1, 6-0 என வென்றார். இதன்மூலம் நம்பர் 2 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா வெற்றி பெற்றார்.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று தொடங்கியது.
இதில் ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.
- கடந்த 25ஆம் தேதியில் இருந்து இன்றுவரை போட்டிகள் நடைபெற்றன.
- இந்தோனேசிய வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை ஓபன் டென்னிஸ் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவின் ஜானிஸ் டிஜென்- ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டிஜென் 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த போட்டியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்தனர். அதன்பின் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.
ரியாத்:
ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது.
செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.
- ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்றது.
- இதன் இறுதிச்சுற்றில் கனடா வீராங்கனை எம்போகா வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் கனடாவின் விக்டொரியா எம்போகா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புஸ்கா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எம்போகா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக கிறிஸ்டினா 2வது செட்டை 7-6 (11-9)
என போராடி வென்றார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை எம்போகா 6-2 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 7-6 (7-3) 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது .
- ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.
2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250 ) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீராங்கனையான கிம்பெர்லி பிரெல் (ஆஸ்தி ரேலியா)-ஜோர்னா கார்லேண்ட் (சீனதைபே) மோதினார்கள். மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் கிம்பெர்லி 6-7 (2-7), 6-3, 7-5 என்ற கணக்கில் போராடி வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.
3-வது செட்டில் ஒரு கட்டத்தில் கார்லேண்ட் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் அவர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல வாய்ப்பை அவர் தக்க வைக்க தவறிவிட்டார். 4 முறை மேட்ச் பாயிண்ட் வந்தும் அவர் தோல்வியை தழுவினார்.
நீண்ட நேரமாக போட்டி நடைபெற்றதால் கார் லேண்ட் மிகவும் சோர்வடைந்தார். மேலும் தசைப் பிடிப்பும் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மருத்துவ உதவியை பெற்றார். தோல்வியின் நூலிழைக்கு 4 தடவை சென்று கிம்பெர்லி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது . அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த போட்டி 3 மணி 24 நிமிட நேரம் நடைபெற்றது.
முன்னதாக நடந்த அரை இறுதி போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) 7-6 (8-6), 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் லான் லானா தராருடீயை (தாய்லாந்து) வீழ்த்தினார்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜேனிஸ் டிஜென்- கிம்பெர்லி பிரெல் மோதுகிறார்கள்.
இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரியா பாட்டியா- ருதுஜா போசலே ஜோடி 7-5, 0-6, 5-10 என்ற கணக்கில் 2-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென்- அல்டிலா சுட்ஜியாடி (இந்தோனே சியா)ஜோடியிடம் தோற்றது.
இந்த ஜோடி இன்று இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஸ்டோம் கண்டர் (ஆஸ்திரேலியா)- மோனிகா (ருமேனியா) ஜோடியுடன் மோதுகிறது.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் தொடங்கியது.
- முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் எளிதில் வெற்றி பெற்றார்.
ரியாத்:
ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது.
ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.
- ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதி சுற்றில் கனடா வீராங்கனை எம்போகா வெற்றி பெற்றார்.
ஹாங்காங்:
ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் கனடாவின் விக்டொரியா எம்போகா, சக நாட்டு வீராங்கனையான லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.
இதில் 2-6 என முதல் செட்டை இழந்த எம்போகா அடுத்த இரு செட்களில் அதிரடி காட்டி 6-3, 6-2 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கனடாவின் எம்போகா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புஸ்கா உடன் மோதுகிறார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் 6-7 (5-7), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- கடந்த 20 ஆண்டுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருபவர்.
- இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
புதுடெல்லி:
டென்னிஸ் உலகின் இரட்டையர் பிரிவில் தலைசிறந்து விளங்கி வருபவர் ரோகன் போபண்ணா. இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
கடந்த 20 ஆண்டுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருபவர்.
43வது வயதில் ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் பட்டம் பெற்று சாதனை புரிந்தவர். 2017ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியவர்.
இந்நிலையில், ரோகன் போபண்ணா தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போபண்ணா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், குட்பை, ஆனால் இது முடிவல்ல என பதிவிட்டுள்ளார்.
தற்போது நடந்து வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் தொடரின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் வெளியேறினார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த தோல்வியின் மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.






