என் மலர்
டென்னிஸ்
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- 2வது சுற்றில் ரஷியாவின் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற ரோட்டர்டாம் டென்னிஸ் தொடரிலும் மெத்வதேவ் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்காவின் கோகோ காப் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நேரடியாக தகுதி பெற்றார். அவர் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பைரெல் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கலின்ஸ்கயாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி நேரடியாக தகுதி பெற்றார். அவர் பிலிப்பைன்சின் அலெக்சாண்டர் ஈலா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பிலிப்பைன்ஸ் வீராங்கனை 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலினி தொடரில் இருந்து வெளியேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரின்டெர்னெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் தாமஸ் மொசாக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, கத்தாரின் முபாரக் அல் ஹசாரி-துனிசியாவின் மோயிஸ் ஈசர்குய் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்தது.
- இறுதிப்போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் பெலிசம் தோல்வி அடைந்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் பெலிசம் உடன் மோதினார்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- இதில் கஜகஸ்தான் வீரரான அலெக்சாண்டர் பபள்க் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் பெலிசம், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பெலிக்ஸ் ஆகர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அலெக்ஸ் டி மினார், பெலிக்ஸ் ஆகரைச் சந்திக்க உள்ளார்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
- செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா இறுதிச்சுற்றில் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய முசோவா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா அரையிறுதியில் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய முசோவா 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முசோவா, கனடாவின் எம்போகாவை சந்திக்கிறார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ அரையிறுதியில் வென்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கனடாவின் விக்டோரியா எம்போகோ, லாத்வியாவின் ஜெலெனா ஆஸ்டபென்கோ உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய விக்டோரியா எம்போகோ 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
- இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் காலிறுதியில் வெற்றி பெற்றார்.
ஆம்ஸ்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், நெதர்லாந்தின் பொடிக் வான் டெ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 3-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ கன்னெலை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.






