என் மலர்
டென்னிஸ்
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- பெலாரசின் சபலென்கா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பெலாரசின் சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெடோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் அன்னா போந்தாரை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார்.
2025ஆம் ஆண்டுக்கான கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் சுற்றில் 13ஆம் நிலை வீரரான டேனில் மெட்வெதேவ், தரநிலை பெறாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் போன்சியை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெஞ்சமின் போன்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மெட்வெதேவ் ஐந்து செட் வரை மல்லுக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மல்லுக்கட்டியும் பயனில்லை. 3-6, 5-7, 7(7)-6(5), 6-0, 4-6 என தோல்வியடைந்தார்.
3ஆவது செட் டைபிரேக்கர் வரை சென்றது. டை பிரேக்கரில் மேட்ச் பாயின்ட் 5-4 என இருந்தபோது மைதானத்திற்குள் (Court) போட்டோகிராபர் வந்தார். இதனால் மெட்வெதேவ் கடும் கோபம் அடைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்.
தோல்வியடைந்த பின்னர் ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார். மெட்வெதேவின் செயல் போட்டியை நேரில் பார்த்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போட்டி முடிந்த பின்னர், கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன் என மெட்வெதேவ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மெட்வெதேவுக்கு 42,500 டாலர் அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய பண மதிப்பில் 37.24 லட்சம் ரூபாய் ஆகும். ஒழுங்கீனமாக நடந்ததற்காக 30 ஆயிரம் டாலரும், சேரில் அடித்து ராக்கெட்டை உடைத்ததற்காக 12,500 டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர் முதல் சுற்றுக்காக வாங்கிய சம்பளத்தின் 40 சதவீதம் ஆகும்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-7 (5-7), 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-6, 7-6 (7-3), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் லாய்டு ஹாரிசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- பெலாரஸ் வீராங்கனை அசரென்கா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, ரஷியாவின் அனஸ்தஷியா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அசரென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் எம்மா ராடுகானு 6-2, 6-1 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஜானிஸ் டென்னை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜானிக் சின்னர் (இத்தாலி) ரூ.414 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் இருக்கிறார்.
- அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ரூ.396 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தில் உள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை டென்னிஸ் வீரர்களின் வருவாய் விவரம் வெளியாகியுள்ளது.
இதில் இரண்டாம் நிலை வீரரான அல்காரஸ் ரூ.421 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் டென்னிசுக்கு வெளியே அதாவது விளம்பர ஒப்பந்தம் மூலம் மட்டும் ரூ.306 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜானிக் சின்னர் (இத்தாலி) ரூ.414 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் இருக்கிறார். அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ரூ.396 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தில் உள்ளார். வீராங்கனை களில் அவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார்.
24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரான ஜோகோவிச் (செர்பியா) ரூ.256 கோடியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
- சின்னர் 6-1, 6-1 ,6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- கோகோ காப் (அமெரிக்கா) 6-4, 6-7 (2-7) 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனையை தோற்கடித்தார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் செக் குடியரசுவை சேர்ந்த கோபிரிவாவை எதிர் கொண்டார். இதில் சின்னர் 6-1, 6-1 ,6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 38 நிமிட நேரமே தேவைப்பட்டது.
10-வது வரிசையில் உள்ள லாரென்சோ முசெட்டி (இத்தாலி) 6-7 (3-7), 6-3,6-4,6-4 என்ற செட் கணக்கில் பெரிகார்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார். 8-ம் நிலை வீரரான அலெக்ஸ் டி மினாவூர் (ஆஸ்திரேலியா), 14-வது வரிசையில் இருக்கும் டோமி பவுல் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது வரிசையில் இருக்கும் கோகோ காப் (அமெரிக்கா) 6-4, 6-7 (2-7) 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை டாம்லஜனோவிக்கை தோற்கடித்தார்.
மற்ற ஆட்டங்களில் 8-வது வரிசையில் உள்ள அமண்டா அனிஸ்மோவா (அமெரிக்கா ), நவோமி ஒசாகா (ஜப்பான்), லிண்டா நோ சக்வா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- செக் குடியரசின் கரோலினா மசோவா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செக் குடியரசின் கரோலினா மசோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கரோலினா 6-3 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக வீனஸ் 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கரோலினா 6-1 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிறப்பு அனுமதி பெற்ற நிலையில் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- போலந்தின் ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக், கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்யாடெக் 6-1 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் தத்ஜனா மரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ், பென் ஷெல்டன் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
- பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பயோலினி (இத்தாலி), ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க்:
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.
24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் ( செர்பியா) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த லேனர் டியனை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
4-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்ஸ், 6-வது வரிசையில் உள்ள பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
மகளிர் ஆட்டங்களில் 4-ம் நிலை வீராங்கனை பெகுலா (அமெரிக்கா), 7-வது வரிசையில் உள்ள ஜாஸ்மின் பயோலினி (இத்தாலி), 10-ம் நிலை வீராங்கனை ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
- ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் மெத்வதேவ், பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.
- இந்த ஆட்டத்தில் பெஞ்சமின் வெற்றி பெற்றார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான மெத்வதேவ் (ரஷியா) இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி 6-3, 7-5, 6-7, (5-7), 0-6, 6-4 என்ற செட் கணக்கில் மெட்வதெவை போராடி வீழ்த்தினார்.
தோல்வியால் விரக்தியடைந்த மெத்வதேவ் தனது டென்னிஸ் பேட்டை அடித்து உடைத்தார். சிறிது நேரம் அமைதியாக சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பேட்டை அடித்து உடைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டெனியல் மெட்வதேவ் (ரஷ்யா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர்.
- முதல் 2 செட்டை பெஞ்சமின் கைப்பற்றினார்.
நியூயார்க்:
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.
இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் டேனியல் மெத்வதேவ் (ரஷ்யா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டை பெஞ்சமின் கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் அடுத்த 2 செட்டை கைப்பற்றினார். பரபரப்பான இந்த ஆட்டத்தின் கடைசி செட்டை பெஞ்சமி கைப்பற்றினார்.
இதன் மூலம் 6-3, 7-5, 6-7(5-7), 0-6, 6-4 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு பெஞ்சமின் முன்னேறினார்.






