என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் நம்பர் 1 வீராங்கனை
    X

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் நம்பர் 1 வீராங்கனை

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
    • 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.

    ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×