என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வங்காளதேச தரப்பில் சவுமியா சங்கர் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் நிக்கோலஸ் 95 ரன்களில் அவுட் ஆனார்.

    வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக சவுமியா - அனுமுள் களமிறங்கினர்.

    அனுமுள் 2, சாண்டோ 6, லிட்டன் தாஸ் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ரஹீம் மற்றும் சவுமியா ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை ஜேக்கப் டஃபி பிரித்தார். ரஹிம் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற சவுமியா சதம் அடித்து அசத்தினார். இவர் 169 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்காளதேசம் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங்- ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹென்றி நிக்கோலஸ் களமிறங்கினார்.

    யங் -நிக்கோலஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் வங்காளதேச பந்து வீச்சாளர்கள் திணறினர். யங் 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசன் பந்து வீச்சிலும் நிக்கோலஸ் 95 ரன்களில் சொரிபுல் இஸ்லாம் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டாம் லாதம் -டாம் ப்ளண்டெல் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    இறுதியில் நியூசிலாந்து அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான சம்பர்தாய ஆட்டமான கடைசி ஒருநாள் போட்டி 23-ந் தேதி தொடங்குகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 291 ரன்கள் குவித்தது.
    • அதிகபட்சமாக சவுமியா சங்கர் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சவுமியா சங்கர் - அனுமுள் களமிறங்கினர்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி, சவுமியா சங்கரின் சிறப்பான ஆட்டத்தால் 291 ரன்கள் குவித்தது. அவர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர் கொண்டு சதம் அடித்தார். 22 பவுண்டரி 2 சிக்சருடன் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேசம் அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்த சதத்தின் மூலம் நியூசிலாந்து மண்ணில் சச்சின் சாதனையை சவுமியா முறியடித்துள்ளார். சச்சின் 2009-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 163 ரன்கள் எடுத்ததே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை தற்போது வங்காளதேச வீரர் சவுமியா சங்கர் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    மேலும் வங்காளதேச அணி வீரர்களில் ஒருவரின் தனிபட்ட அதிகபட்ச ரன்களில் சவுமியா சங்கர் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் லிட்டன் தாஸ் (176) உள்ளார்.

    • முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.
    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் முடிவடைந்த நிலையில் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக சாஹின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீபுல்லா, அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் டி20 தொடருக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் பாகிஸ்தான் அணி விவரம்:-

    ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.

    • அதிரடியாக விளையாடிய சால்ட் 57 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார்.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் - சால்ட் களமிறங்கினர். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தது. ஜாஸ் பட்லர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய சால்ட் 119 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 4 பவுண்டரி 4 சிக்சருடன் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரசல் மட்டுமே அரை சதம் அடித்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி 20டி போட்டி நாளை நடைபெறுகிறது.

    • தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

    இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் 10 ஓவர்களில் துவக்க வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ், டோனி அபாரமாக ஆடினர். ஹென்ரிக்ஸ் - டோனி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது.

    அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், திலக் வர்மா என ஐந்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட் கிடைக்காததால் கேஎல் ராகுல் ரிங்கு சிங்குக்கு பந்து வீசும் வாய்ப்பை வழங்கினார். உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.

    ரிங்கு சிங் பந்து வீச்சில் டுசென் 36 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் ரிங்கு சிங் திறமையின் உச்சம் என பாராட்டி வருகின்றனர். ஒரு ஓவர் மட்டும் வீசிய ரிங்கு சிங் 2 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.

    • ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது.
    • சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்.

    துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது.

    இந்நிலையில் சக அணி வீரரான திராவிஸ் ஹெட்டை பாராட்ட நினைத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு சன்ரைசர்ஸ் அணி ஷாக் கொடுத்துள்ளது.

    அது என்னவென்றால் 6.8 கோடிக்கு விலை போன ஹெட்டை வாழ்த்துவதற்காக சன் ரைசர்ஸ் அணி நிர்வாகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வார்னர் தேடியுள்ளார். ஆனால் அப்போது தான் சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்.

    அது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டேவிட் வார்னர் ஏமாற்றத்துடன் பகிர்ந்துள்ளார். அதில், டிராவிஸ் ஹெட் பற்றிய பதிவை பதிவிடுவதற்காக நான் முயற்சித்தேன். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் என்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல் எக்ஸ் தள பக்கத்திலும் சன்ரைசர்ஸ் நிர்வாகம் தம்மை பிளாக் செய்துள்ளதை வார்னர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த வார்னர் 2019 வரை அனைத்து தொடர்களில் 500-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏலத்தில் எனது தொகை விவரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனது மனைவி எனக்கு சொல்லி விட்டார்.
    • இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24¾ கோடிக்கு விலை போய் இருக்கிறார். 33 வயதான ஸ்டார்க் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 விக்கெட் (10 ஆட்டம்) கைப்பற்றி இருந்தார்.

    ஏலம் குறித்து அவர் கூறுகையில், 'உண்மையில் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது மனைவி அலிசா ஹீலி (ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டன்) தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறார்.

    ஏலத்தில் எனது தொகை விவரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு சொல்லி விட்டார். இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் கடைசியாக விளையாடிய ஐ.பி.எல்.-ல் பெற்ற அனுபவம், அதை சமாளிக்க உதவும் என்று நம்புகிறேன். முடிந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன்' என்றார்.

    • இந்திய அணி 211 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

    கெபேஹா:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது.

    இந்திய அணியில் டெஸ்ட் தொடருக்கு தயார்படுத்த பயிற்சியில் ஈடுபட வசதியாக ஒதுங்கிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரிங்கு சிங் புதுமுக வீரராக இடம் பிடித்தார்.

    தென்ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பெலுக்வாயோ நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார்.

    'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் (4 ரன்) நன்ரே பர்கர் வீசிய அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நடுவரின் முடிவை எதிர்த்து அவர் செய்த அப்பீலுக்கு பலன் கிட்டவில்லை. அடுத்து வந்த திலக் வர்மா 10 ரன்னில் நடையை கட்டினார்.

    இதைத் தொடர்ந்து கேப்டன் லோகேஷ் ராகுல், தொடக்க வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 65 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அவர் தொடர்ச்சியாக அடித்த 2-வது அரைதம் இதுவாகும். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது ஸ்கோர் 250 ரன்களை தாண்டும் போல் தெரிந்தது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ரன்வேகம் தளர்ந்து போனது.

    அணியின் ஸ்கோர் 114 ரன்னாக உயர்ந்த போது (26.2) சாய் சுதர்சன் (62 ரன், 83 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) லிசாத் வில்லியம்ஸ் வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் சிக்கினார். அதன் பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. சஞ்சு சாம்சன் 12 ரன்னில் போல்டு ஆனார். மறுமுனையில் 18-வது அரைசதம் விளாசிய லோகேஷ் ராகுல் 56 ரன்னிலும் (64 பந்து, 7 பவுண்டரி) ரிங்கு சிங் 17 ரன்னிலும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

    அக்ஷர் பட்டேல் (7 ரன்), குல்தீப் யாதவ் (1 ரன்), அர்ஷ்தீப் சிங் (18 ரன்), அவேஷ் கான் (9 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை. 46.2 ஓவர்களில் இந்திய அணி 211 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் நன்ரே பர்கர் 3 விக்கெட்டும், பீரன் ஹென்ரிக்ஸ், கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

    பின்னர் 212 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு டோனி டி ஜோர்ஜியும், ரீஜா ஹென்ரிக்சும் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றிப்பாதையை சுலபமாக்கினர். ஹென்ரிக்ஸ் 52 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வான்டெர் டஸன் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய டோனி டி ஜோர்ஜி 109 பந்தில் தனது முதலாவது சதத்தை எட்டினார்.

    தென்ஆப்பிரிக்கா 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி டி ஜோர்ஜி 119 ரன்களுடனும் (122 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் மார்க்ரம் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. கடைசி ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    • ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்றது.
    • குஜராத் அணியில் ராபின் மின்ஸ் தேர்வாகியுள்ளார்.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி கிரிக்கெட் வீரர் ராபின் மின்ஸ்-ஐ குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.6 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது. 21 வயதான ராபின் ரூ. 20 லட்சம் எனும் அடிப்படை விலையில் ஏலத்தில் பட்டியலிடப்பட்டார். இவரை வாங்க பல அணிகள் போட்டியிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

     


    பெரிய ஷாட்களை அடிப்பதில் பெயர்பெற்ற ராபின் மின்ஸ் இடதுகை பேட்டர் ஆவார். மகேந்திர சிங் டோனியின் தீவிர ரசிகரான இவருக்கு அனுபவம் மிக்க முன்னாள் இந்திய அணி வீரர் சான்ச்சல் பட்டாச்சார்யா பயிற்சியாளராக உள்ளார். இவர் 19 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜார்கண்ட் அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

    இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தற்போது ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

    • தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.
    • ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

    ஏற்கனவே, இந்தியாவின் ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தான் நடப்பு சீசனில் அதிகம் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • கேஎல் ராகுல் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் 2-வது ஒருநாள் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ் - சாய் சுதர்சன் களமிறங்கினர். ருதுராஜ் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த திலக் வர்மா தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 10 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து சாய் சுதர்சனுடன் கேப்டன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 62 ரன்கள் எடுத்திருந்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த சாம்சன் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினார். பிறகு 1 ரன் எடுப்பதற்கே மிகவும் திணறினார். இதனால் 23 பந்துகள் சந்தித்த அவர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் இழந்தாலும் ஒரு முனையில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங் 17, அக்ஷர் படேல் 7, குல்தீப் 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

    இறுதியில் இந்தியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நந்த்ரே பர்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • வங்காளதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
    • சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், வங்காளதேச அணியின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

    சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    ×