search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
    X

    வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

    • வங்காளதேச தரப்பில் சவுமியா சங்கர் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் நிக்கோலஸ் 95 ரன்களில் அவுட் ஆனார்.

    வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக சவுமியா - அனுமுள் களமிறங்கினர்.

    அனுமுள் 2, சாண்டோ 6, லிட்டன் தாஸ் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ரஹீம் மற்றும் சவுமியா ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை ஜேக்கப் டஃபி பிரித்தார். ரஹிம் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற சவுமியா சதம் அடித்து அசத்தினார். இவர் 169 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்காளதேசம் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங்- ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹென்றி நிக்கோலஸ் களமிறங்கினார்.

    யங் -நிக்கோலஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் வங்காளதேச பந்து வீச்சாளர்கள் திணறினர். யங் 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசன் பந்து வீச்சிலும் நிக்கோலஸ் 95 ரன்களில் சொரிபுல் இஸ்லாம் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டாம் லாதம் -டாம் ப்ளண்டெல் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    இறுதியில் நியூசிலாந்து அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான சம்பர்தாய ஆட்டமான கடைசி ஒருநாள் போட்டி 23-ந் தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×