என் மலர்
விளையாட்டு
- டி20 போட்டிகளில் இளம் வயதில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரஷித்கான் படைத்துள்ளார்.
- 438 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ரஷித்கான் படைத்துள்ளார்.
உலகில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ரஷித் கான் (25) ஒருவராக உள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான இவர் டி20 போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டி20 போட்டிகளில் இளம் வயதில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரஷித்கான் படைத்துள்ளார்.
இவர் 438 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரரான பிராவோ உள்ளார். அவர் 543 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்:-
630 - டுவைன் பிராவோ (543 போட்டிகள்)
600 - ரஷித் கான் (438 போட்டிகள்)
502 - இம்ரான் தாஹிர் (388 போட்டிகள்)
492 - ஷாகிப் அல் ஹசன் (436 போட்டிகள்)
- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
- மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.
இதற்கிடையே, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம் இதுவாகும்.

இந்நிலையில், வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். அவர் எங்களை மிகவும் பெருமைப்படுத்தினாள். அவருக்கும் சரப்ஜோத் சிங்குக்கும் எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
- இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
- இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.
இதையடுத்து, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.
இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார்.
இந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாக்கர்- சரோப்ஜோத் இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எங்கள் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்!
மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது.
மானுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
- இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது.
- ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.
போட்டியின் 2-வது நாளில் அவர் பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
இந்த நிலையில் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவரும், சரப்ஜோத் சிங் ஜோடியும் இணைந்து நேற்று நடந்த தகுதி சுற்றில் 580 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தது.
இதன் மூலம் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்துக்கு மோதும் வாய்ப்பை பெற்றது. இந்த ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை எதிர் கொண்டது.
இதில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய ஜோடி 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். மனுபாக்கர் 2-வது பதக்கத்தை பெற்றார்.
அந்த வகையில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை மனுபாக்கர் பெற்றுள்ளார். மேலும் 124 ஆண்டுகளில் ஒரே ஒலிம்பிக் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த ரமீதா 7-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர் 145.3 புள்ளிகளை பெற்றார்.
இதேபோல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று இருந்த அர்ஜூன் பபுதா மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 208.4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.
- டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
- கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட்ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியிருந்தார்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா சாதனை ஒன்றை படைத்துள்ளார். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸ் வீராங்கனை பிரித்திகா பவாடேவை எதிரிகொண்ட இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, 4-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு [pre-quarterfinals] முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஆடிய மறக்கமுடியாத ஆட்டமாக நேற்று நடந்த ஆட்டம் மாறியுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்சில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று வரை மனிகா பத்ரா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதி பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
- இந்தியா-அயர்லாந்து (ஆண்கள்) லீக் சுற்று ஆட்டம், மாலை 4.45 மணி.
- பால்ராஜ் பன்வார் (ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் கால்இறுதி), பகல் 1.40 மணி.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 5-வது நாளான இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:
துப்பாக்கி சுடுதல்:-
ஸ்ரேயாசி சிங், ராஜேஸ்வரி குமாரி (பெண்கள் டிராப் பிரிவு தகுதி சுற்று), பகல் 12.30 மணி. சரப்ஜோத் சிங்-மனு பாக்கர் (இந்தியா)-ஜின் ஓ யே-வோன்ஹோ லீ (தென்கொரியா), (10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயம்), பகல் 1 மணி, பிரித்விராஜ் தொண்டைமான் (டிராப் 2-வது நாள் தகுதி சுற்று), பகல் 12.30 மணி.
ஹாக்கி:-
இந்தியா-அயர்லாந்து (ஆண்கள்) லீக் சுற்று ஆட்டம், மாலை 4.45 மணி.
பேட்மிண்டன்:-
சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இந்தியா)-முகமது ரியான் அட்ரியான்டோ-பஜர் அல்பியான் (இந்தோனேசியா), (ஆண்கள் இரட்டையர் லீக் சுற்று), மாலை 5.30 மணி. அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ (இந்தியா)- செத்யானா மபசா-ஏஞ்சலா யு (ஆஸ்திரேலியா), (பெண்கள் இரட்டையர் லீக் சுற்று) மாலை 6.20 மணி.
துடுப்பு படகு:-
பால்ராஜ் பன்வார் (ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் கால்இறுதி), பகல் 1.40 மணி.
வில்வித்தை:-
அங்கிதா பகத் (இந்தியா)-வியோலிடா மைசோர் (போலந்து), மாலை 5.14 மணி, பஜன் கவுர் (இந்தியா)-சிபா நுராபிபா (இந்தோனேசியா), மாலை 5.27 மணி, (பெண்கள் தனிநபர் பிரிவு), தீரஜ் பொம்மதேவரா-ஆடம் லீ (செக்குடியரசு), (ஆண்கள் தனிநபர் பிரிவு), இரவு 9.15 மணி.
குத்துச்சண்டை:-
அமித் பன்ஹால் (இந்தியா)- பேட்ரிக் சினிம்பா (ஜாம்பியா), (ஆண்கள் 51 கிலோ தொடக்க சுற்று), இரவு 7.16 மணி, ஜாஸ்மின் (இந்தியா)-நெஸ்டி பெட்சியோ (பிலிப்பைன்ஸ்), (பெண்கள் 57 கிலோ எடைப்பிரிவு முதல் சுற்று), இரவு 9.24 மணி.
- டேவிஸ் கோப்பையில் இருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
- இரண்டு தசாப்தங்களாக நான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சீனியர் டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா என்.ஸ்ரீராம் உடன் இணைந்து களமிறங்கினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே பிரான்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
இந்த நிலையில் இந்திய அணிக்கான எனது கடைசி போட்டியில் விளையாடினே எனத் தெரிவித்துள்ளார். 22 வருடமாக ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் விளையாடிய போபண்ணா ஏமாற்றத்துடன் விடைபெறுகிறார்.
1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயேஸ் வெண்கல பதக்கம் வென்றார். அதன்பின் டென்னிசில் யாரும் பதக்கம் வெல்லவில்லை. 2016-ம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா உடன் இணைந்து பதக்கம் வெல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.
இது இந்தியாவுக்கான எனது கடைசி போட்டியாக இருக்கப்போகிறது. நான் எங்கு இருக்கிறேன் என்பதை நான் முழுமையாக புரிந்துகொண்டேன். அது செல்லும் வரை டென்னிசை ரசிக்கப் போகிறேன் என போபண்ணா தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் 2026-ல் நடைபெறும் ஆசிய போட்டியில் பங்கேற்கமாட்டேன் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். டேவிஸ் கோப்பையில் இருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
நான் இருக்கும் இடத்திற்கு இது ஏற்கனவே ஒரு பெரிய போனஸ். இரண்டு தசாப்தங்களாக நான் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. 2002 முதல், நான் அறிமுகமாகி 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்.
- துருக்கிக்கு எதிராக முதல் 2 செட்டை இந்தியா இழந்தது.
- துருக்கி 6-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியா - திருக்கி அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் திராஜ் பொம்மாதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் செட்டில் இந்திய வீரர்கள் 53 புள்ளிகளும் துருக்கி 57 புள்ளிகளும் பெற்றது. இதனால் முதல் செட்டில் துருக்கி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது செட்டில் இந்தியா 52-ம் துருக்கி 55-ம் பெற்றதால் 4-0 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது.
3-வது செட்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் 55 புள்ளிகளும் துருக்கி 54 புள்ளிகள் பெற்றது. இதனால் 3-வது செட்டில் இந்தியா 2-4 என ஸ்கோர் கணக்கை தொடங்கியது. அதனை தொடர்ந்து நடந்த 4-வது செட்டை 54- 58 என்ற கணக்கில் துருக்கி கைப்பற்றியது.
இறுதியில் துருக்கி 6-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
- 2-வது சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் (ஸ்பெயின்) நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.
- களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடாலின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் ரபெல் நடால் (ஸ்பெயின்) 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார்.
இது களிமண் தரையில் நடக்கும் போட்டி என்பதால் நடாலின் ஆதிக்கத்தை ஜோகோவிச் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடாலை 6-1, 6-4 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி 3-வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார்.
- பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
- போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் லூகாஸ் அபாரமாக கோல் அடித்தார்.
2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தமாக 12 அணிகள் பங்கேற்றன. இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் இரு அணி வீரர்களும் திணறினர்.
இந்த நிலையில் போட்டியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் லூகாஸ் அபாரமாக கோல் அடிக்க அதனை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் தடுக்க முடியவில்லை. இதையடுத்து அர்ஜென்டினா அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து இந்திய அணி கடுமையாக போராடியும் முதல் பாதியில் அர்ஜென்டினாவால் கூட சமன் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. அதனை அந்த அணி கோலாக மாற்ற தவறியது. இதனை அடுத்து கோல் கீப்பராக இருந்த ஸ்ரீஜேஸ் மாற்றப்பட்டார். இது இந்தியா எடுத்த தைரியமான முடிவாக பார்க்கப்பட்டது. போட்டி இந்தியாவின் கையை விட்டு நழுவ போகிறது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கேப்டன் ஹர்மன் பிரீத்துக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இதனை அவர் கோலாக மாற்ற போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. பி பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு இடங்களிலும் ஏ பிரிவில் நெதர்லாந்து பிரிட்டன் அணி முதல் இரண்டு இடங்களிலும் இருந்தது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசம் அணிக்கு எதிரான தொடரில் இருந்து மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்படுவார்.
- லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார்.
சமீபத்தில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்யாமல் இருந்தது.
அதன்படி பீல்டிங், பேட்டிங் பயிற்சியாளர்கள் இலங்கை தொடருடன் இந்திய அணியில் இணைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டுள்ளார். அதற்கு மட்டும் பிசிசிஐ எந்த பதிலும் கூறாமல் இருந்தது.
இந்நிலையில் வங்களாதேசம் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவு இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கள் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.
- ஆரம்பத்தில் அபாரமாக செயல்பட்ட பாபுதா இறுதிகட்டத்தில் தடுமாறினார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா பங்கேற்றார். இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில், இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் அபாரமாக செயல்பட்ட பாபுதா இறுதிகட்டத்தில் தடுமாறியதால் 208.4 புள்ளிகள் மட்டுமே பெற்று 4-வது இடம் பிடித்தார்.
7-வது ரவுண்டின் முடிவில் குரோஷியாவின் மீரான் மரிசிச் 209.8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு (8-வது ரவுண்ட்) தகுதி பெற்றதால் அர்ஜுன் பாபுதா 208.4 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.






