என் மலர்
விளையாட்டு
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை இந்தியா வீசி முடிக்காததால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 163 ரன்கள் சேர்த்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து கடைசி நேரத்தில் தடுமாறி தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியின்போது இந்தியா குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. ஒரு ஓவர் குறைவாக வீசியது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கு இந்த போட்டிக்கான சம்பளத்தில் தலா 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 4-வது போட்டியில் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தசை பிடிப்பு முழுமையாக குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது தசை பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் 60 ரன்கள் எடுத்திருந்தபோது மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் பகுதிநேர கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். போட்டிக்குப்பின் பேட்டியளித்த கேஎல் ராகுல் ‘‘ஒன்றிரண்டு நாட்களுக்குள் ரோகித் சர்மா குணமாகிவிடுவார்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தசை பிடிப்பு முழுமையாக குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (பிப்ரவரி) 5-ந்தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் 8-ந்தேதியும், 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11-ந்தேதியும் நடக்கிறது.
அதன்பின் முதல் டெஸ்ட் வெலிங்டனில் 21-ந்தேதியும், 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 29-ந்தேதியும் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.
‘ஹிட்மேனான ரோகித் சர்மாவின் ஆட்டம் நேற்று அதிரடியாக இருந்தது. 3-வது வீரராக களம் இறங்கிய அவர் 41 பந்தில் 60 ரன் எடுத்து இருந்தபோது தசைப்பிடிப்பால் வெளியேறினார். அவரது ஸ்கோரில் 3 பவுண்டரியும், 3 சிக்சர்களும் அடங்கும்.
32 வயதான ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் 21-வது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 25 தடவை 50 ரன்னுக்கு மேல் (சதம் 4 + அரைசதம் 21) எடுத்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மா கோலியின் சாதனையை முறியடித்தார். 100 இன்னிங்சில் அவர் இதை எடுத்தார். கோலி 76 இன்னிங்சில் 24 முறை 54 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியின்போது கோலியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார். தற்போது முறியடித்தார்.

வர்ணனையாளரை மோசமான வார்த்தைகளால் திட்டிய இந்திய ரசிகர் மைதானத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 5-0 எனக் கைப்பற்றியது. இந்த போட்டியை பார்க்க ஏராளமான இந்திய ரசிகர்கள் பே ஓவல் (Bay Oval) மைதானத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது ஒரு ரசிகர் வர்ணனையாளரிடம் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த அவர் வர்ணனையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அப்போது போலீசார் அவரை பிடித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர். மேலும், இந்த சீசன் முடியும் வரை பே ஓவல் மைதானத்திற்குள் நுழைய அந்த ரசிகருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இங்கிலாந்து - நியூசிலாந்து தொடரின்போது ஜாப்ரா ஆர்சரை திட்டியதற்காக ரசிகர் ஒருவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்ததுடன், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வங்காளதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் தமிம் இக்பால்.
வங்காளதேச அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் தமிம் இக்பால். இவர் வங்காளதேசம் கிரிக்கெட் லீக்கில் முச்சதம் அடித்தார். அதோடு 334 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வங்காளதேசம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முச்சதம் அடித்தது குறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘ஆடுகளம் விளையாடுவதற்கு சிறப்பாக இருந்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமானதாக இல்லை. இதனால் என்னால் எளிதாக ரன்கள் குவிக்க முடிந்தது. ஒட்டுமொத்த இன்னிங்ஸ் முடியும் வரை நான் சாதனைப் படைப்பேன் என்று நினைக்கவில்லை. எனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடினேன். சிக்சர்கள் அடிப்பதை விட பவுண்டரிகளைத்தான் எதிர்பார்த்தேன்.
260-270 ரன்கள் அடிக்கும்வரை முச்சதம் பற்றி யோசிக்கவில்லை. 280 ரன்னைத் தொட்டபோது, முச்சதம் குறித்து யோசித்தேன். முச்சதம் குறித்து அதிகமான யோசித்திருந்தால், நான் ஆட்டமிழந்திருப்பேன். ஒவ்வொருவருக்கும் முச்சதம் அடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். இந்த போட்டியில் நான் முச்சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை’’ என்றார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பையில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.
இந்திய அணி லீக் ஆட்டங்களில் இலங்கையை 90 ரன் வித்தியாசத்திலும், ஜப்பானை 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை 74 ரன்னில் வீழ்த்தியது. இதேபோல் நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன.
இந்திய அணி அரை இறுதியில் பாகிஸ்தானை நாளை (4-ந்தேதி) எதிர் கொள்கிறது. 4 முறை சாம்பியனான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் ஜெய்ஷ்வால் (207 ரன்) மிகவும் நல்ல நிலையில் உள்ளார். சக்சேனா, கேப்டன் பிரியம் கார்க், துருவ் ஜுரல் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அணியில் உள்ளனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் (11 விக்கெட்), கார்த்திக் தியாகி (9 விக்கெட்), ஆகாஷ் சிங் (7 விக்கெட்) ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.
பாகிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து (7 விக்கெட்), ஜிம்பாவே (38 ரன்) ஆகியவற்றை தோற்கடித்தது. வங்காள தேசத்துடன் மோதிய ஆட்டம் முடிவு இல்லை. கால் இறுதியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டில் வீழ்த்தியது.
2 முறை உலக கோப் பையை வென்ற பாகிஸ்தான் அணி 6-வது தடவையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 224 ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐசிசி-யின் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார். விராட் கோலி 9-வது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 10-வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.
பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா 26 இடங்கள் தாவி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய இலங்கை அணி வீரர் குலசேகராவின் உலக சாதனையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார்.
வெலிங்டன்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஐந்து டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் விளையாடுகிறது. இதில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி தொடரை கைப்பற்றியது.
இதையடுத்து 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கானு நகரில் நடைபெற்றது. பரபரப்பாக சென்ற அந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இருதரப்பு சர்வதேச டி20 போட்டிகளில், 5 போட்டிகளில் வெற்று பெற்று எதிரணி ஒயிட்வாஷ் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை இந்திய அணி தன்வசமாக்கியது.
இந்நிலையில், நேற்று நடந்த 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய உலக சாதனை படைத்தார்.

நேற்றைய ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்களே விட்டுக்கொடுத்த பும்ரா மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பும்ரா 7 மெய்டன் ஓவர்களை வீசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக சர்வதேச டி20 போட்டிகளில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரா (58 போட்டிகள்) 6 ஓவர்கள் மெய்டனாக வீசியதே உலக சாதனையாக இருந்தது.
மகாராஷ்டிரா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
புனே:
மொத்தம் ரூ.4 கோடி பரிசுத்தொகைக்கான 3-வது மகாராஷ்டிரா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்கி 9-ந்தேதி வரை நடக்கிறது. தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடரான இந்த போட்டி முன்பு சென்னையில் நடந்து வந்தது. பிரான்சின் பெனோய்ட் பேர், லிதுவேனியாவின் ரிகார்டஸ் பெரான்கிஸ், குரோஷியாவின் கார்லோவிச், இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார், சுமித் நாகல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் தரவரிசையில் டாப்-10 இடத்தில் உள்ள வீரர்கள் யாரும் வரவில்லை.
சென்னையைச் சேர்ந்த குணேஸ்வரன் தனது முதலாவது சுற்றில் ஜெர்மனியின் யானிக் மாடெனையும், ராம்குமார், இத்தாலியின் சல்வடோர் காருசோவையும் எதிர்கொள்கிறார்கள். இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனுடன் கைகோர்த்து களம் இறங்குகிறார். உள்நாட்டில் பெயஸ் விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும்.

டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 2-வது வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார் ஷிவம் டுபே.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 163 ரன்கள் அடித்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. அந்த அணி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
நியூசிலாந்து வெற்றிக்கு 11 ஓவரில் 100 ரன்கள் தேவைப்பட்டது. 10-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை செய்பெர்ட் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு துரத்தினார். 4-வது பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார்.
முதல் நான்கு பந்தில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 5-வது பந்தை ராஸ் டெய்லர் பவுண்டரிக்கு துரத்தினார். அந்த பந்து நோ-பால் ஆக வீசினார் டுபே. இதனால் ஐந்து ரன்களுடன் ஒரு பந்தும் வீச வேண்டியிருந்தது. அந்த பந்தை டெய்லர் சிக்சருக்கு தூக்கினார். அதற்கு அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார்.
ஆக மொத்தம் 6, 6, 4, 1, 4+1, 6, 6 என 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஸ்டூவர்ட் பிராட் இந்தியாவுக்கு எதிராக ஆறு பந்திலும் ஆறு சிக்சர்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக பர்னெல் 2012-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.

பிக் பாஷ் டி20 லீக்கில் அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடி, டேனியல் சாம்சின் சிறப்பான பந்து வீச்சால் சிட்னி தண்டர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
பிக் பாஷ் டி20 லீக்கின் பிளே-ஆப்ஸ் சுற்றில் இன்று நாக்அவுட் போட்டி நடைபெற்றது. இதில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற சிட்னி தண்டரும், லீக் ஆட்டம் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடம் பிடித்த அடிலெய்டு ஸ்டிரைக்கரும் மோதின.
டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சிட்னி தண்டர் முதலில் பேட்டிங் செய்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் 35 பந்தில் 59 ரன்கள் விளாசினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிறிஸ் மோரிஸ் 14 பந்தில் 21 ரன்கள் அடிக்க சிட்னி தண்டர் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் களம் இறங்கியது. டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டும் குக் மற்றும் கிறிஸ் மோரிஸ் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் சிட்னி தண்டர் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சேலங்சர் சுற்றுக்கு முன்னேறியது.
டிராவிஸ் ஹெட் (32), அலெக்ஸ் ஹேரி (28), வெல்ஸ் (34) ஆகியோரின் ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர் 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 6 விக்கெட், 30 பந்துகள் உள்ள நிலையில் 47 ரன்கள்தான் தேவைப்பட்டது. அதன்பின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.

மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் இறுதிப் போட்டியில் டொமினிக் தீம்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்- 5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடிய டொமினிக் தீம் அதை 6-4 எனக் கைப்பற்றினார். அதோடு 3-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.
4-வது செட்டை கைப்பற்றினால் சாம்பியன் பட்டம் வென்று விடலாம் என்ற நோக்கத்தில் டொமினிக் தீம் களம் இறங்கினார். ஆனால் ஜோகோவிச் அபாரமாக விளையாடி 4-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். அதே உத்வேகத்துடன் ஐந்தாவது செட்டையும் 6-4 எனக்கைப்பற்றி ஜோகோவிச் 6-4, 6-4, 2-6, 6-3, 6-4 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.