என் மலர்
விளையாட்டு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
கேப் டவுன்
கேப்டவுனில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.
வார்னர் 37 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 55 ரன்னும் (6 பவுண்டரி,1 சிக்சர் ), ஸ்டீவ் சுமித் 15 பந்தில் 30 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர். ரபடா, நிகிடி, பிரிட்டோரியஸ், ஷம்சி, நோட்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 15.3 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வான்டார் துஸ்சன் அதிகபட்சமாக 24 ரன் எடுத்தார். ஸ்டார்க், ஆஷ்டோன் அகர் தலா 3 விக்கெட்டும் கம்மின்ஸ், மிட்சேல் மார்ஷ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி முதல் போட்டியில் 107 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 12 ரன்னில் வெற்றி பெற்றது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது.

மகளிர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மெல்போர்ன்:
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி 3-வது போட்டியில் நியூசிலாந்தை இன்று எதிர் கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலிவர்மா 46 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும். 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
முதல் 3 விக்கெட்டுகள் விரைவில் சரிந்தாலும் அடுத்து வந்த மடி கிரின் 24 ரன்களும் மார்டின் 25 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

கடைசி 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி இருந்த நிலை இருந்தது. 5 பந்துகளில் 11 ரன்கள் விட்டு கொடுத்தார் ஷிகா பாண்டே. 1 பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹெலி ஜென்சன் ரன்அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதன்மூலம் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

நியூசிலாந்து அணிக்காக கடைசி வரை போராடிய அமெலியா கெர் 19 பந்துகளில் 36 ரன்கள் (6 பவுண்டரி)எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் தோல்வியடைந்த விரக்தியில் அழுத படியே களத்தில் இருந்து வெளியேறினார். அவரை சக வீராங்கனைகள் ஆறுதல் கூறி தேற்றினர். போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஷபாலி வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
மெல்போர்ன்:
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள ஹர்மன்பிரித் கபூர் தலைமையிலான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காளதேசத்தை 18 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தன.
இந்திய அணி 3-வது போட்டியில் நியூசிலாந்தை இன்று எதிர் கொண்டது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஷபாலி வர்மாவும், மந்தனாவும் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் 3-வது ஓவரிலேயே தொடக்க ஜோடி சரிந்தது. மந்தனா 8 பந்தில் 11 ரன் (2 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழந்தார்.
2-வது விக்கெட்டுக்கு ஷபாலி வர்மாவுடன் பாட்டியா ஜோடி சேர்ந்தார்.
ஷபாலிவர்மா அடித்து விளையாடினார். 10-வது ஓவரில் இந்தியாவின் 2-வது விக்கெட் சரிந்தது. பாட்டியா 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 68 ஆக இருந்தது.
அடுத்து வந்த வீராங்கனைகள் ஜெமிமா 10, கேப்டன் கவுர் 1, தீப்தி சர்மா 8, வேடா 6, ராதா யாதவ் 14 ரன்களில் வெளியேறினர். ஷிகா பாண்டே 10 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல் தென்இந்தியாவை சேர்ந்த வினிராமனை திருமணம் செய்ய உள்ளார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினிராமன் என்ற பெண்ணின் காதல்வலையில் விழுந்தார். ‘டேட்டிங்’ என்ற பெயரில் இருவரும் ஜோடியாக கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததை பார்க்க முடிந்தது. சில மாதங்களுக்கு முன்பு மேக்ஸ்வெல் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டபோது, அதில் இருந்து அவரை தேற்றியதில் வினிக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த நிலையில் கடந்த வாரம் ‘நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?’ என்று மேக்ஸ்வெல் கேட்க, அதற்கு வினியும் ‘கிரீன் சிக்னல்’ கொடுத்தார். இதையடுத்து மோதிரம் மாற்றி திருமண நிச்சயம் செய்து கொண்டனர். இந்த தகவலை 31 வயதான மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
27 வயதான வினிராமனின் பெற்றோர் தென்இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் வினிராமன் பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். அவர் மெல்போர்னில் மருந்தாளுனர் படிப்பை முடித்துள்ளார்.

அம்பந்தோட்டையில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் ஆகியோரின் அபார சதத்தால் இலங்கை அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொட்ரை கைப்பற்றியது.
கொழும்பு:
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைஅணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அம்பந்தோட்டையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.
ஆனாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே ஒரு ரன்னிலும், குசால் பெராரா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், அவிஷாவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் நிதானமாக ஆடி சதமடித்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ 127 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 119 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 345 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் காட்ரெல் 4 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 346 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். அவர் 51 ரன்னில் வெளியேறினார்.
நிகோலஸ் பூரன் 30 ரன்னிலும், கீமோ பால் 21 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 39.1 ஓவரில் 184 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 161 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை சார்பில் ஹசரங்கா, சண்டகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது.
வெலிங்டன் டெஸ்டில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்பதற்கான ரசிகர்கள் நம்பிக்கை இழந்து விட வேண்டாம் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்டில் இந்தியாவின் பந்து வீச்சு மிகப்பெரிய அளவில் எடுபடவில்லை. அதேபோல் பேட்டிங்கிலும் சொதப்பினர்.
இந்திய பந்து வீச்சாளர்கள் மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்புவார்கள். ஒரேநாள் இரவில் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை ரசிகர்கள் இழந்து விட வேண்டாம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘இந்திய பந்து வீச்சாளர்கள் மீது நான் இன்னும் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நியூசிலாந்து தொடருக்கு முன் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இஷாந்த் சர்மா காயத்தில் இருந்து திரும்பியுள்ளார். திரும்பிய முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட் வீழ்த்தினார். பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்தியாவின் பந்து வீச்சு யுனிட் உலகத்தரம் வாய்ந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. பந்து வீச்சில் எந்த பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஒரே நாள் இரவில் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். நியூசிலாந்து டாஸ் மிகமிக முக்கியமானது. என்றாலும் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இஷாந்த் சர்மா மீண்டு வந்துள்ளது ஈர்க்கக்கூடியது. சர்வதேச அளவில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால், அவராகவே அவரை புதுப்பித்துக் கொண்டு சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்த ரஷியாவின் மரியா ஷரபோவா ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா. 32 வயதாகும் இவர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மரியா ஷரபோவா ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
விம்பிள்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஓபன் பட்டத்தை தலா ஒருமுறையும், பிரெஞ்ச் ஓபனை இரண்டு முறையும் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடிய காலத்தில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தடைவிதிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் விளையாட வந்தபின், தற்போது மூன்று ஆண்டுகளுக்குப்பின் ஓய்வு பெற்றுள்ளார்.

பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடரில் இன்று கான்பெர்ராவில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை இங்கிலாந்து எளிதாக வீழ்த்தியது.
2-வது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் டெய்லர் (43), விக்கெட் கீப்பர் கேம்ப்பெல் (43) ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி (25), ஜவெரியா கான் (35) சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். கேப்டன் பிஸ்மா மரூஃப் ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் வேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும் என நீல் வாக்னர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியாவால் 200 ரன்னைத் தாண்ட முடியவில்லை. ஸ்விங் மற்றும் பவுன்சரை எதிர்கொள்ள திணறினர்.
2-வது போட்டி வருகிற 29-ந்தேதி கிறிஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்டில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர் அணியில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியா தொடரின்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இவரது மனைவிக்கு குழந்தை பிறந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை.
2-வது டெஸ்டில் கலந்து கொள்கிறார். ஏற்கனவே டிரென்ட் போல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். தற்போது நீல் வாக்னருடம் இணைய உள்ளார்.
இந்நிலையில் வேகம் மற்றும் பவுன்சர்களை எதிர்கொள்ள இந்தியா திணறும் என நீல் வாக்னர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீல் வாக்னர் கூறுகையில் ‘‘இந்திய அணி நியூசிலாந்து வந்து விளையாடுவது அவர்களுக்கு உண்மையிலேயே கடினமானதாக இருக்கும். இங்கு விளையாடும்போது கூடுதல் பவுன்ஸ் மற்றும் வேகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியாவில் விளையாடும்போது அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்காது. ஆகவே, இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை மாற்றிக் கொள்வது புதிதாக இருக்கும்.
முதல் டெஸ்டில் எங்கள் பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசினார்களோ அதேபோல் கிறிஸ்ட்சர்ச் போட்டியிலும் பந்து வீச முடியும் என்று நம்பிக்கை உள்ளது. இந்திய வீரர்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்றால், எங்களுடைய வேலையை எளிதாக்க முடியும்’’ என்றார்.

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. அதேவேளையில் நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி வருகிறது. அதன்பின் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விளையாடி வரும் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் கைல் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அணியே நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), 2. ஆஷ்டோன் அகர், 3. அலெக்ஸ் கேரி, 4. பேட் கம்மின்ஸ், 5. ஜோஸ் ஹசில்வுட், 6. மார்னஸ் லபுஸ்சேன், 7. மிட்செல் மார்ஷ், 8. கேன் ரிச்சர்ட்சன், 9. டி'ஆர்கி ஷார்ட், 10. ஸ்டீவ் ஸ்மித், 11. மிட்செல் ஸ்டா்க், 13. மேத்யூ வடே, 14. டேவிட் வார்னர், 15. ஆடம் ஜம்பா.

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபன் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் பப்லோ அண்டுஜார்-ஐ எதிர்கொண்டார். இதில் நடால் 6-3, 6-2 என எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நடால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டொமினிக் தீம்மிடம் தோல்வியடைந்தார். அதன்பின் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் சொதப்பியதால் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு சரிந்தார் விராட் கோலி.
ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க ஸ்மித், விராட் கோலி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ஸ்மித் முதல் இடத்தை பிடித்தார்.
அதன்பின் வங்காளதேசம் அணிக்கெதிராக சதம் அடிக்க மீண்டும் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். இதற்கிடையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்மித் சிறப்பாக விளையாடவில்லை.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஸ்மித் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ஸ்மித் 911 புள்ளிகளும், விராட் கோலி 906 புள்ளிகளும் பெற்றுள்ளனர். கேன் வில்லியம்சன் 853 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மார்னஸ் லபுஸ்சேன் 827 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பாபர் அசாம் (800), டேவிட் வார்னர் (793) ஐந்தாவது மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளனர்.
ஜோ ரூட் (764) 7-வது இடத்திலும், ரகானே (760) 8-வது இடத்திலும், புஜாரா (757) 9-வது இடத்திலும், மயங்க் அகர்வால் (727) 10-வது இடத்திலும் உள்ளனர்.