என் மலர்

  செய்திகள்

  நீல் வாக்னர்
  X
  நீல் வாக்னர்

  வேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும்: நீல் வாக்னர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் வேகம் மற்றும் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும் என நீல் வாக்னர் தெரிவித்துள்ளார்.
  நியூசிலாந்து - இந்தியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியாவால் 200 ரன்னைத் தாண்ட முடியவில்லை. ஸ்விங் மற்றும் பவுன்சரை எதிர்கொள்ள திணறினர்.

  2-வது போட்டி வருகிற 29-ந்தேதி கிறிஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  முதல் டெஸ்டில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர் அணியில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியா தொடரின்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இவரது மனைவிக்கு குழந்தை பிறந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை.

  2-வது டெஸ்டில் கலந்து கொள்கிறார். ஏற்கனவே டிரென்ட் போல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். தற்போது நீல் வாக்னருடம் இணைய உள்ளார்.

  இந்நிலையில் வேகம் மற்றும் பவுன்சர்களை எதிர்கொள்ள இந்தியா திணறும் என நீல் வாக்னர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து நீல் வாக்னர் கூறுகையில் ‘‘இந்திய அணி நியூசிலாந்து வந்து விளையாடுவது அவர்களுக்கு உண்மையிலேயே கடினமானதாக இருக்கும். இங்கு விளையாடும்போது கூடுதல் பவுன்ஸ் மற்றும் வேகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

  இந்தியாவில் விளையாடும்போது அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்காது. ஆகவே, இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களை மாற்றிக் கொள்வது புதிதாக இருக்கும்.

  முதல் டெஸ்டில் எங்கள் பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசினார்களோ அதேபோல் கிறிஸ்ட்சர்ச் போட்டியிலும் பந்து வீச முடியும் என்று நம்பிக்கை உள்ளது. இந்திய வீரர்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்றால், எங்களுடைய வேலையை எளிதாக்க முடியும்’’ என்றார்.
  Next Story
  ×