search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா
    X
    இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா

    நியூசிலாந்துக்கு 134 ரன்கள் இலக்கு - ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
    மெல்போர்ன்:

    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள ஹர்மன்பிரித் கபூர் தலைமையிலான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காளதேசத்தை 18 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தன.

    இந்திய அணி 3-வது போட்டியில் நியூசிலாந்தை இன்று எதிர் கொண்டது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ‌ஷபாலி வர்மாவும், மந்தனாவும் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.

    ஆட்டத்தின் 3-வது ஓவரிலேயே தொடக்க ஜோடி சரிந்தது. மந்தனா 8 பந்தில் 11 ரன் (2 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ‌ஷபாலி வர்மாவுடன் பாட்டியா ஜோடி சேர்ந்தார்.

    ‌ஷபாலிவர்மா அடித்து விளையாடினார். 10-வது ஓவரில் இந்தியாவின் 2-வது விக்கெட் சரிந்தது. பாட்டியா 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 68 ஆக இருந்தது.

    அடுத்து வந்த வீராங்கனைகள் ஜெமிமா 10, கேப்டன் கவுர் 1, தீப்தி சர்மா 8, வேடா 6, ராதா யாதவ் 14 ரன்களில் வெளியேறினர். ஷிகா பாண்டே 10 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
    Next Story
    ×