search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீராங்கனைகள்
    X
    இந்திய வீராங்கனைகள்

    மகளிர் உலக கோப்பை - ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

    மகளிர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
    மெல்போர்ன்:

    மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி 3-வது போட்டியில் நியூசிலாந்தை இன்று எதிர் கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

    ‌இந்திய அணியில் அதிகபட்சமாக ஷபாலிவர்மா 46 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும். 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

    முதல் 3 விக்கெட்டுகள் விரைவில் சரிந்தாலும் அடுத்து வந்த மடி கிரின் 24 ரன்களும் மார்டின் 25 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    கடைசி 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி இருந்த நிலை இருந்தது. 5 பந்துகளில் 11 ரன்கள் விட்டு கொடுத்தார் ஷிகா பாண்டே. 1 பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹெலி ஜென்சன் ரன்அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதன்மூலம் முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

    அமெலியா கெர்

    நியூசிலாந்து அணிக்காக கடைசி வரை போராடிய அமெலியா கெர் 19 பந்துகளில் 36 ரன்கள் (6 பவுண்டரி)எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் தோல்வியடைந்த விரக்தியில் அழுத படியே களத்தில் இருந்து வெளியேறினார். அவரை சக வீராங்கனைகள் ஆறுதல் கூறி தேற்றினர். போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஷபாலி வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    Next Story
    ×