என் மலர்
விளையாட்டு
இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராக அடில்லே சுமரிவாலா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குர்கிராம்:
இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் குர்கிராமில் நேற்று நடந்தது. இதில் 2020-24-ம்ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடில்லே சுமரிவாலா 3-வது முறையாக தலைவராக தேர்வானார்.
முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் சீனியர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவர் பொறுப்பை ஒரு பெண் ஏற்பது இதுவே முதல் முறையாகும். ரவிந்தர் சவுத்ரி செயலாளராகவும், மதுகாந்த் பதக் பொருளாளராகவும், 5 இணைச் செயலாளர்களில் ஒருவராக தமிழகத்தை சேர்ந்த சி.லதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல் என இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்
அபுதாபி:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 99 ரன்களில் (63 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஒரு ரன்னில் சதத்தை கோட்டை விட்ட கோபத்தில் கெய்ல் பேட்டை தரையில் ஓங்கி அடித்தார். அது கைநழுவி சில அடி தூரம் பறந்து விழுந்தது. அவரது செயல் வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. போட்டி நடுவர் விசாரித்த போது கெய்ல் தனது தவறை ஒப்புக் கொண்டார். அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் ஆயிரம் சிக்சர்களை (410 ஆட்டத்தில் 1,001 சிக்சர்) கடந்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டிய கிறிஸ் கெய்லுக்கு (வெஸ்ட் இண்டீஸ்) முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல். இந்த வடிவிலான கிரிக்கெட்டில் அவர் மகத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்களை குதூகலப்படுத்துவதில் தந்தை’ என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ‘41 வயது வீரர் வியப்புக்குரிய வகையில் 99 ரன்கள் எடுத்ததை இப்போது தான் பார்த்தேன். அது மட்டுமின்றி 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 சிக்சர். கேள்விக்கே இடமின்றி அனைத்து காலத்திலும் 20 ஓவர் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக கெய்ல் இருப்பார்’ என்று குறிப்பிட்டார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 99 ரன்களில் (63 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஒரு ரன்னில் சதத்தை கோட்டை விட்ட கோபத்தில் கெய்ல் பேட்டை தரையில் ஓங்கி அடித்தார். அது கைநழுவி சில அடி தூரம் பறந்து விழுந்தது. அவரது செயல் வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. போட்டி நடுவர் விசாரித்த போது கெய்ல் தனது தவறை ஒப்புக் கொண்டார். அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் ஆயிரம் சிக்சர்களை (410 ஆட்டத்தில் 1,001 சிக்சர்) கடந்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டிய கிறிஸ் கெய்லுக்கு (வெஸ்ட் இண்டீஸ்) முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல். இந்த வடிவிலான கிரிக்கெட்டில் அவர் மகத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்களை குதூகலப்படுத்துவதில் தந்தை’ என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ‘41 வயது வீரர் வியப்புக்குரிய வகையில் 99 ரன்கள் எடுத்ததை இப்போது தான் பார்த்தேன். அது மட்டுமின்றி 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 சிக்சர். கேள்விக்கே இடமின்றி அனைத்து காலத்திலும் 20 ஓவர் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக கெய்ல் இருப்பார்’ என்று குறிப்பிட்டார்.
ஐபிஎல் போட்டியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்த வருடம் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டி நவம்பா் 10 அன்று நிறைவு பெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியின் தொலைக்காட்சி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
21 சேனல்களில் முதல் 41 போட்டிகளுக்கு 700 கோடி பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். கடந்த வருடம் 24 சேனல்களில் முதல் 44 போட்டிகளுக்கு 550 கோடி பார்வையாளர்கள் கிடைத்தனர். இதையடுத்து இந்த வருட ஐ.பி.எல். போட்டிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக பார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டங்கள் நிறைவுப் பகுதியை அடைந்துள்ளன. நவம்பர் 3 வரை நடைபெறவுள்ள லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை பிளே ஆஃபுக்குத் தகுதி பெற்றுள்ளது. நவம்பர் 5 முதல் பிளே ஆஃப் சுற்று தொடங்குகிறது. இறுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 10 அன்று நடைபெறுகிறது.
சகா மற்றும் ஹோல்டரின் சிறப்பான ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத் அணி.
ஷார்ஜா:
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப், தேவ் படிக்கல் களமிறங்கினர்.
படிக்கல் 5 ரன்னிலும், கேப்டன் கோலி 7 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸ் 24 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பிலிப் 32 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் வந்த வீரர்கள் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 8 ரன்னிலும், சகா 39 ரன்னிலும், மணீஷ் பாண்டே 26 ரன்னிலும் அவுட்டாகினர்.
வில்லியம்சன் 8 ரன்னிலும் அபிஷேக் சர்மா 9 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய ஜேசன் ஹோல்டர் 10 பந்தில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆட்ட நாயகன் விருது சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்து, பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப், தேவ் படிக்கல் களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்திருந்த படிக்கல் சந்தீப் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த கேப்டன் கோலி 7 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டிவில்லியர்ஸ் 24 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய பிலிப் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார்.
ஆனால், பின்னர் வந்த வீரர்கள் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர்அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதாராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
பெங்களூர் வீரர்கள் விவரம்:-
ஜோசப் பிளிப், தேவ்தத் படிக்கல், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங் மேன், வாஷிங்டன் சுந்தர், கிரிஸ் மோரிஸ், உடானா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி, சாஹல்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-
டேவிட் வார்னர் (கேப்டன்), விதிமன் சகா, மணீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், அபிஷக் சர்மா, ரஷித் கான், ஷபாஸ் நதீம், சந்தீப் சர்மா, நடராஜன்
இஷான் கிஷன் அதிரடியால் டெல்லியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் போல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் ரன் எடுத்தும் எடுக்காமல் (0) டிரண்ட் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், பிரித்வி ஷா 10 ரன் எடுத்த நிலையில் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் கேப்டன் ஷ்ரேயாஸ் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டர் ஷ்ரேயாஸ் அய்யர் மும்பை வீரர் சாஹர் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த மார்க்கஸ் ஸ்டாயினஸ் 2 ரன்னில் வெளியேறினார். 24 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.
அடுத்து வந்த ஷிம்ரான் ஹேட்மயர் (11 ரன்), ஹர்ஷ் பட்டேல் (5), அஸ்வின் (12) மும்பை பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா, டிரண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இஷான் கிஷன் மற்றும் குவிண்டன் டிகாக் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 28 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்த டிகாக் டெல்லி வீரர் நார்ட்ஜீ பந்து வீச்சில் வெளியேறினார்.
ஆனால், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் டெல்லி அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தார். இதனால் 14.2 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்த மும்பை அணி வெற்றி இலக்கான 111 ரன்களை எட்டியது.
இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர் உள்பட 72 ரன்கள் குவித்த இஷான் கிஷன் மற்றும் 11 பந்துகளில் 12 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிபெற 111 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் போல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் ரன் எடுத்தும் எடுக்காமல் (0) டிரண்ட் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பிரித்வி ஷா உடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், பிரித்வி ஷா 10 ரன் எடுத்த நிலையில் போல்ட் பந்து வீச்சில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் கேப்டன் ஷ்ரேயாஸ் உடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டர் ஷ்ரேயாஸ் அய்யர் மும்பை வீரர் ராகுல் சாஹர் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த மார்க்கஸ் ஸ்டாயினஸ் 2 ரன்னில் வெளியேறினார். 24 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.
அடுத்து வந்த ஷிம்ரான் ஹேட்மயர் (11 ரன்), ஹர்ஷ் பட்டேல் (5), அஸ்வின் (12) மும்பை பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா, டிரண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் போல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் விவரம்:-
ப்ரித்திவி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஷிம்ரான் ஹிட்மயர், மார்கஸ் ஸ்டாய்னஸ், ஹர்ஷல் பட்டேல், பிரவீன் துபே, ககிசோ ரபாடா, ரவிசந்திரன் அஸ்வின், ஆண்டிஷ் நாட்ஜீ
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:-
குவிண்டன் டிகாக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவ்ரவ் திவாரி, குர்னால் பாண்டியா, போல்லார்டு (கேப்டன்), ஜெயந்த் யாதவ், நாதன் ஸ்குடூட்டனைல், ராகுல் சாஹர், டிரண்ட் போல்ட், பும்ரா
2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனியே நீடித்தால் ஆச்சரியமில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இணைய தளத்துக்கு ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனியே நீடித்தால், அதில் ஆச்சரியமடைவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் அந்த அளவுக்கு கேப்டனுக்கும், அந்த அணியின் உரிமையாளர்களுக்கும் இடையே புரிதல், நெருக்கமான உறவு, பரஸ்பர மரியாதை உள்ளது. டோனிக்கு அனைத்து விதமான முழு சுதந்திரத்தையும் அணி உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர்.
டோனி தாம் விரும்பும் வரை தொடர்ந்து விளையாடுவார். அடுத்த சீசனில் அவர் கேப்டனாக தொடரும் போது, தற்போதைய அணியை போல் அல்லாமல் மாறுபட்ட அணியை பெற்றிருப்பார். அந்த அணி நிர்வாகம் அளிக்கும் ஆதரவு, நம்பிக்கை காரணமாக டோனியும் மிகவும் விசுவாசமாக இருக்கிறார். சென்னை அணிக்காக கடின உழைப்பு, முயற்சி, வியர்வை, தூக்கமில்லா இரவு என அனைத்தையும் கொடுத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பஞ்சாப் அணியின் மந்தீப் சிங், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
மந்தீப் சிங் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து கேஎல் ராகுல் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த ஜோடி 14.4 ஓவரில் 121 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. கேஎல் ராகுல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 10 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டகெயில் 46 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 99 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
உத்தப்பா நிதானமாக ஆட, ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். இதில் ஸ்டோக்ஸ் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் இறங்கினார்.
நிதானமாக ஆடிய உத்தப்பா30 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், சாம்சன் 25 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 48 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து ஸ்மித்தும், ஜோஸ் பட்லரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்மித் 31 ரன்னும், பட்லர் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது.
ராஜஸ்தான் பெற்ற 6வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
கிறிஸ் கெய்ல் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை கோட்டை விட, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்க 186 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்.
ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பஞ்சாப் அணியின் மந்தீப் சிங், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஜாஃப்ரா ஆர்சர் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை சந்தித்த மந்தீப் சிங் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
அடுத்து கேஎல் ராகுல் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ் கெய்ல் 33 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 14.4 ஓவரில் 121 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. கேஎல் ராகுல் 41 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 10 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். என்றாலும் கிறிஸ் கெய்ல் சதத்தை நோக்கி முன்னேறினார்.
கடைசி ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 99 ரன்னை எட்டினார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து செஞ்சூரி அடிப்பார் என்று நினைக்கையில் அந்த பந்தில் க்ளீன் போல்டானார்.
அவர் 46 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 99 ரன்கள் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.






