என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மோர்கன் அதிரடியாக விளையாடி 68 ரன்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.
    துபாயில் நடக்கும் ஐபிஎல் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நிதிஷ் ராணா ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 24 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 34 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். 

    தினேஷ் கார்த்திக் டக்அவுட் ஆக, அந்த்ரே ரஸல் 11 பந்தில் 25 ரன்கள் அடித்தார். கேப்டன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 68 ரன்கள் விளாச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹாட்ரிக் அரைசதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ருத்துராஜ் கெய்க்வாட் பெற்றுள்ளார்.
    ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது அணி சிஎஸ்கே. இதனால் எஞ்சிய போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க டோனி முடிவு செய்தார்.

    தொடக்கத்தில் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அதிரடியாக நீக்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் மும்பை அணிக்கெதிராக தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அதில் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அதன்பின் ஆர்சிபிக்கு எதிராக களம் இறங்கி ஆட்மிழக்காமல் 65 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். கொல்த்தாவிற்கு எதிராக 53 பந்தில் 72 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 49 பந்தில் 62 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து, ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாப் அணியின் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு சரியான வகையில் தடுப்புச் சுவராக அமைந்துவிட்டார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளேஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறியது.
    அபு தாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கே.எல். ராகுல் 29, மயங்க் அகர்வால் 26, கெய்ல் 12, பூரன் 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    6-வது வீரராக களம் இறங்கிய தீபக் ஹூடா 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் அடிக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது. லுங்கி நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ருத்துராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சென்னை அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 82 ரன்னாக இருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 34 பந்தில் 48 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினர். இடையில் இருவரும் தடுமாறினாலும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் 6 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
    துபாயில் நடைபெற இருக்கும் ஆட்டத்தில் கொல்கத்தாவிற்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    துபாயில் நடக்கும் ஐபிஎல் 54-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ அணியில் மற்றம் இல்லை. கொல்கத்தா அணியில் அந்த்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறாததற்கான காரணத்தை தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் அந்த அணிக்கு பொல்லார்ட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் மும்பைக்காக ரோகித் சர்மா விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

    அதில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரோகித் சர்மா குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார் அதில் ‘‘அவர் காயமடைந்திருப்பதால் மருத்துவக் குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர். எங்களால் அதில் தலையிட முடியாது. ரோகித் சர்மா குறித்த மருத்துவ அறிக்கை தேர்வுக் குழுவினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    எனக்கு தெரிந்ததெல்லாம் இப்போதைக்கு அவர் விளையாடாமல் இருப்பதே நல்லது. அப்படி விளையாடினால் அந்தக் காயம் மேலும் பாதிப்பை உண்டாக்கும் என்பதுதான் காரணம். மற்றப்படி நான் தேர்வுக்குழு உறுப்பினர் இல்லை. அதனால் இதற்கு மேல் இது குறித்து பேச முடியாது’’ என்றார்.
    ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரபடாவை பின்னுக்குத் தள்ளி பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
    ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் ரபடா தொடர்ந்து முதல் இடம் பிடித்து வந்தார். அவருக்கு மும்பை இந்தியன்ஸ் பும்ரா கடும் போட்டியாக இருந்து வந்தார். 

    இந்நிலையில் ரபடா கடந்த இரண்டு ஆட்டங்களில் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் ஏமாற்றம் அளித்தார். அதே நேரத்தில் மும்பை அணியின் பும்ரா 13 இன்னிங்ஸ் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ரபடாவும் 13 இன்னிங்சில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் பவுலிங் சராசரி மற்றும் எக்கனாமியில் பும்ரா ரபாடாவை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்து பர்பிள் கேப்பை பெற்றுள்ளார்.
    கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டு என்ற கட்டாய போட்டியில் பஞ்சாப் அணியால் ஜொலிக்க முடியாமல் 153 ரன்களே எடுத்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால்3 விக்கெட் வீழ்த்திய லுங்கி நிகிடி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.

    5.2 ஓவரில் ஸ்கோர் 48 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்கோர் 62 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    கிறி்ஸ் கெய்ல் (12), நிக்கோலஸ் பூரன் (2) ஆகியோரை இம்ரான் தாஹிர் வெளியேற பஞ்சாப் அணி 72 ரன்னுக்குள் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 120 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

    மந்தீப் 14 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தாலும் தீபக் ஹூடா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணிக்கு சற்று நம்பிக்கையை அளித்தார். அவர் 26 பந்தில் அரைசதம் அடித்ததால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 150 ரன்னை தாண்டியது. பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்துள்ளது. தீபக் ஹூடா 30 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சென்னை அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் கடைசி நான்கு போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற்று பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி தொடங்கியது. ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன.

    தொடர் தொடங்கியதில் இருந்து மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி அணிகள் ஆதிக்கம் செலுத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் 9 வெற்றிகள் பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியதுடன் முதல் இடத்தை பிடித்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 9 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று அசத்தியிருந்தது. 10-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. அதில் இருந்து அணிக்கு கெட்ட நேரம் தொடங்கியது.

    அதன்பின் நடைபெற்ற 3 போட்களும் தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் 13 போட்டிகளில் ஏழு வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    விராட் கோலி, டி வில்லியர்ஸ்

    அதேபோல் ஆர்சிபி அணியும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. முதல் 10 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்து 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இந்த இரண்டு அணிகளும் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது இதுதான் கடைசி போட்டியாக இருக்குமா? என்ற கேள்விக்கு எம்எஸ் டோனி பதில் அளித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆட்டம் அபு தாபியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    டாஸ் சுண்டியபோது வர்ணனையாளர் டேனி மோரிஸ்சன் சிஎஸ்கே-வுக்கான கடைசி போட்டியாக இது இருக்குமா? என்று டோனியை பார்த்து கேட்டார்.

    அதற்கு எம்எஸ் டோனி நிச்சயமாக இல்லை! (Definitely Not!) எனப் பதில் அளித்தார். இதில் இருந்து எம்எஸ் டோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

    ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் டோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்பதை உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துதுள்ளார்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப்:-

    1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. மந்தீப் சிங், 6. ஜேம்ஸ் நீசம், 7. தீபக் ஹூடா,  8. கிறிஸ் ஜோர்டான், 9. முருகன் அஸ்வின், 10. ரபி பிஷ்னோய், 11. முகமது ஷமி.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:-

    1.  டு பிளிஸ்சிஸ், 2. கெய்க்வாட், 3. அம்பதி ராயுடு, 4. எம்எஸ் டோனி, 5. என் ஜெகதீசன், 6. ஜடேஜா, 7. சாம் கர்ர், 8. ஷர்துல் தாகூர். 9. தீபக் சாஹர், 10. லுங்கி நிகிடி, 11. இம்ரான் தாஹிர்.
    இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராக அடில்லே சுமரிவாலா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    குர்கிராம்:

    இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் குர்கிராமில் நேற்று நடந்தது. இதில் 2020-24-ம்ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடில்லே சுமரிவாலா 3-வது முறையாக தலைவராக தேர்வானார்.

    முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் சீனியர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவர் பொறுப்பை ஒரு பெண் ஏற்பது இதுவே முதல் முறையாகும். ரவிந்தர் சவுத்ரி செயலாளராகவும், மதுகாந்த் பதக் பொருளாளராகவும், 5 இணைச் செயலாளர்களில் ஒருவராக தமிழகத்தை சேர்ந்த சி.லதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல் என இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்
    அபுதாபி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 99 ரன்களில் (63 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஒரு ரன்னில் சதத்தை கோட்டை விட்ட கோபத்தில் கெய்ல் பேட்டை தரையில் ஓங்கி அடித்தார். அது கைநழுவி சில அடி தூரம் பறந்து விழுந்தது. அவரது செயல் வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. போட்டி நடுவர் விசாரித்த போது கெய்ல் தனது தவறை ஒப்புக் கொண்டார். அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்த ஆட்டத்தின் போது ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் ஆயிரம் சிக்சர்களை (410 ஆட்டத்தில் 1,001 சிக்சர்) கடந்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டிய கிறிஸ் கெய்லுக்கு (வெஸ்ட் இண்டீஸ்) முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுடன் ஒப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘20 ஓவர் கிரிக்கெட்டின் பிராட்மேன் கிறிஸ் கெய்ல். இந்த வடிவிலான கிரிக்கெட்டில் அவர் மகத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்களை குதூகலப்படுத்துவதில் தந்தை’ என்று கூறியுள்ளார்.

    இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ‘41 வயது வீரர் வியப்புக்குரிய வகையில் 99 ரன்கள் எடுத்ததை இப்போது தான் பார்த்தேன். அது மட்டுமின்றி 20 ஓவர் கிரிக்கெட்டில் 1000 சிக்சர். கேள்விக்கே இடமின்றி அனைத்து காலத்திலும் 20 ஓவர் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக கெய்ல் இருப்பார்’ என்று குறிப்பிட்டார்.
    ×