என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அடுத்த ஐபிஎல் சீசன் வரை போட்டி கிரிக்கெட்டில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். பந்து ஸ்விங் ஆகும் ஆடுகளத்தில் இவரது பந்தை எதிர்கொள்வது மிகக்கடினம். ஒரே நேரத்தில் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் செய்யும் திறமை வாய்ந்த வீரர் என்பதால், இந்திய அணியின் வெளிநாட்டு தொடர்களின்போது முக்கிய பவுலராக திகழ்வார்.

    மேலும், பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்திலும் புதுப்பந்தில் ஸ்விங் செய்யக்கூடியவர். ஆனால், கடந்த இரண்டு வருடமாக முதுகுவலி, இடிப்பு வலி, ஹாம்ஸ்டிரிங் காயம் என முக்கியமான போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில் இந்தியா 1-4 எனத் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் புவனேஷ்வர் குமார் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற போதும் அவர் அணியில் இல்லை. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரிக்குப்பின் அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

    உடற்தகுதி பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார். அக்டோபர் 2-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டு வெளியேறினார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சையுடன் கூட பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது அவருக்கு உண்டான இடுப்பு வலி காயத்திற்காக அடுத்த மாதம் வரை தேசிய அகாடமியில் சிகிச்சை மேற்கொள்கிறார். இந்த காயத்திற்கு ஆறு மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டுமாம். இதனால் உத்தர பிரதேச சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான அணியில் தேர்வாகவில்லை.

    புவனேஷ்வர் குமாரால் ஆறு மாத்திற்கு போட்டி கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டி தொடங்குவதாக கூறப்படுகிறது.

    30 வயதாகும் புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட், 114 ஒருநாள், 43 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 6, 132, 41 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் 2018 ஜனவரி மாதம் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும், டி20 போட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் விளையாடியுள்ளார்.
    இந்தியா பெருமை வாய்ந்த கிரிக்கெட் நாடு, அடிலெய்டு டெஸ்டில் மோசமான விளையாடியது போன்று, மெல்போர்னில் துவண்டு விடமாட்டார்கள் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் ஆக மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா அணியில் மாற்றும் ஏதும் இல்லை.

    பொறுப்பு கேப்டன் ரஹானே ஐந்து பேட்ஸ்மேன், ஐந்து பந்து வீச்சாளர்களுடன் தைரியமான களம் இறங்குகிறார். அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டாலும், அதைப்பற்றி கவலைப்படவில்லை. இந்திய அணி வீரர்கள் பாக்சிங் டே டெஸ்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    அதேவேளையில் 36 ரன்னில் சுருண்டு படுமோசமான நிலையை எட்டிய இந்திய அணி சற்று மனதளவில் நிலைகுலைந்து இருக்கும். இதை சரியாக பயன்படுத்தி இந்திய வீரர்கள் சுதாரிப்பதற்குள் மற்றொரு அடியை கொடுத்துவிட வேண்டும் என ஆஸ்திரேலியா துடிக்கிறது.

    பாக்சிங் டே டெஸ்ட் குறித்து ரஹானே கூறுகையில் நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம் என்றார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் இந்திய அணிக்கு அடிலெய்டு டெஸ்ட் போன்று நடக்காது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், பாக்சிங் டே டெஸ்ட் குறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘இந்தியா பெருமை வாய்ந்த கிரிக்கெட் நாடு என்பது எங்களுக்குத் தெரியும். ஏராளமான அபாயகரமான வீரர்களுடன் மிகச்சிறந்த திறமைவாய்ந்த டெஸ்ட் அணி.

    ஆஷஸ் தொடர்-ஐ பார்த்தீர்கள் என்றால் இங்கிலாந்து 1-2 என பின்தங்கியிருந்தது. அதன்பின் கடைசி டெஸ்டில் அபாரமான விளையாடி வெற்றி பெற்றதுடன் தொடரை சமன் செய்ததது. அந்த தருணத்தை நினைவில் வைத்து நாங்கள் சரியாக செல்வோம்.

    அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் பற்றி எங்களுக்குத் தெரியும். அவர்கள் அபாயகரமான வீரர்கள். அவர்கள் போட்டியை பாசிட்டிவாக எடுத்துக் செல்லக்கூடியவர்கள்.

    அவர்களுக்கு நாங்கள் இன்ச் கணக்கில் இடம் கொடுத்தால், அவர் அதை மைல் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஆகவே, அடிலெய்டில் எப்படி செயல்பட்டோமோ, அதேபோல் நாளைய போட்டியில் களம் இறங்குவோம். ஐந்து நாள் போட்டிக்கு ஏற்றபடி தயாராக செல்வோம்.

    முதல் போட்டியில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். முதல் இரண்டு நாட்கள் முடிவில், நாங்கள் மிகவும் தீவிரமான ஆட்டத்தில் இருந்தோம். அந்த அணுகுமுறையை அடுத்த போட்டிக்கும் எடுத்துச் செல்வோம்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா இந்திய அணி வீரர்களை மனதளவில் பாதிக்கும் வகையில் விளையாட விரும்பும் நிலையில், நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம் என ரஹானே தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இதனால் நாளை தொடங்கும் 2-வது போட்டியில் இந்தியா சற்று அன அழுத்தத்தில் இருந்தால் அது எங்களுக்கு சந்தோசம், பொறுப்பு கேப்டன் ரஹானே மீது நெருக்கடியை சுமத்துவோம் என ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நாளைய போட்டி குறித்து ரஹானே கூறும்போது, ஆஸ்திரேலியா மைன்ட் கேம்ஸ் விளையாடட்டும். நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம் என்று ரஹானே தெரிவித்துள்ளார்.

    பாக்சிங் டே போட்டி குறித்து மேலும் ரஹானே கூறுகையில் ‘‘மைன்ட் கேம்ஸ் விளையாட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பானவர்கள். நான் அவர்களை செய்ய விடுவேன். நாங்கள் எங்கள் மீது கவனம் செலுத்துவோம். நாங்கள் ஒரு அணியாக என்ன செய்ய விரும்புகிறமோ?, ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் அதை நோக்கி பயணிப்போம்.

    பும்ரா

    இந்திய அணியை வழிநடத்திச் செல்வது சிறப்பான தருணம். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், அது சிறந்த வாய்ப்பு மற்றும் பொறுப்பு. ஆனால், எந்தவிதமான நெருக்கடியையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

    நான் என்னுடைய அணியின் பின்னால் இருக்க விரும்புகிறேன். அதனால் என் மீது மட்டும் கவனம் இல்ல. இது ஒட்டுமொத்த அணிகக்கான கவனம். எப்படி நாம் ஒன்றாக இணைந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை பற்றியது. இதில்தான் கவனம் செலுத்துவேன்’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது செயல்பாடு உதவியாக இருக்கும் என புதிய தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
    அகமதாபாத்:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று அகமதாபாத்தில் நடந்தது.

    இதில் தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்குழுவில் பல்வேறு முடிவுகள எடுக்கப்பட்டன.

    2022-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டியில் புதிதாக 2 அணிகள் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அது போல் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வாளர்களாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் சேத்தன் சர்மா, அபய் குருவில்லா, மொகந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    உறுப்பினர்களாக இருந்த ஜதின் பரஞ்சே (மேற்கு மண்டலம்), தேவங்காந்தி (கிழக்கு), சரன்தீப்சிங் (வடக்கு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்ததையொட்டி சேத்தன் சர்மா உள்ளிட்ட 3 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்கள் 3 பேரும் ஏற்கனவே பதவியில் உள்ள சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங்குடன் இணைந்து பணியாற்றுவார்கள். இதில் சீனியர் என்ற அடிப்படையில் சேத்தன் சர்மா இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

    இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் ஒருமுறை சேவை செய்வதற்கான வாய்ப்பை பெறுவது உண்மையில் எனக்கு கிடைத்த பாக்கியம். நான் சில வார்த்தைகளையே பேசுபவன். என் செயல்பாடு வார்த்தைகளை விட சத்தமாக பேசும். இந்திய அணிக்கு உதவிகரமாக இருக்கும் என்றார். இந்த வாய்ப்பை அளித்த கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். சேத்தன் சர்மா 23 டெஸ்ட், 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் தோல்வியில் இருந்து வெளியே வந்து போராடுவார்கள் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக இழக்கும் என்று முன்னாள் வீரர்கள் மார்க் வார்க் (ஆஸ்திரேலியா), மைக்கேல் வாகன் (இங்கிலாந்து) ஆகியோர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே 2-வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    இந்திய வீரர்கள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அவர்கள் இன்னும் கொஞ்சம் நேர்மறையான நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும். அப்படி செல்வதுதான் சிறந்த வழியாக இருக்கும்.

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கோலி இல்லாதது கடினமாக இருக்கும். ஆனால் இந்திய வீரர்கள் தோல்வியில் இருந்து வெளியே வந்து போராடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

    இங்கு (இந்தியாவில்) எல்லோரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் பின்னர் அதை ஒரு கெட்ட கனவாக எடுத்து கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பேட்டிங் சிறப்பாக இல்லை. அந்த அணி பேட்டிங்கில் வார்னர் 30 சதவீதம், சுமித் 30 சதவீதம், மற்றவர்கள் 30 சதவீதம் இருக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கை. அவர்களது பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. ஆனால் பேட்டிங் மிகவும் வலுவாக இல்லை என்றார். 

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. 

    பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியுள்ளார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், எஞ்சிய 3 டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் ரகானே கேப்டன் பொறுப்பை வகிக்கிறார். 

    ரகானே தலைமையிலான இந்திய அணியில், சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த முகமது ஷமிக்கு பதில் முகமது சிராஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

    அணி வீரர்கள் விவரம்:

    ரகானே (கேப்டன்), மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் (அறிமுகம்), புஜாரா (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் (அறிமுகம்).
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டு இந்தியா மோசமான சாதனையை பெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் கோதாவில் குதிக்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இதற்கென நீண்ட பாரம்பரியம் உண்டு. அந்த பெயர் எப்படி வந்தது என்பதை இங்கு பார்க்கலாம்.

    * இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் நன்கொடை செலுத்துவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26-ந்தேதி அன்று பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள்.

    * முன்பு தங்களிடம் ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்கள், குடும்பத்தினரை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பார்க்க செல்லும் போது அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

    * முந்தைய காலத்தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் பயணம் ஆபத்து இன்றி பாதுகாப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிக்கும். பயணம் வெற்றிபெற்றதும் அந்த பணம் பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும். கிறிஸ்துமஸ் தினத்தன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு கொடுக்கப்படும். இதுவும் ‘பாக்சிங் டே’ என்று பெயர் உதயமானதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

    1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் குறிப்பிட்ட அன்றைய தினத்தில் போட்டியை நடத்த முடியாமல் போய்விட்டது. இருப்பினும் 1980-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ அன்று ஏதாவது ஒரு அணி அங்குள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும். இந்த முறை ‘பாக்சிங் டே’யில் இந்திய அணி மல்லுக்கட்ட இருக்கிறது.

    கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஆஸ்திரேலியா 15-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. இதில் 2018-ம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்ததும் அடங்கும்.

    தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில் எழுச்சி பெறுமா? என்ற எதிர்பாார்ப்பை இந்த டெஸ்ட் உருவாக்கி இருக்கிறது. அடிலெய்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் சில அதிரடி மாற்றங்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. மெல்போர்ன் ஸ்டேடியத்தில் ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசித்த வரலாறு உண்டு. ஆனால் தற்போது கொரோனா தடுப்பு நடைமுறைகள் அமலில் இருப்பதால் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது.

    நியூசிலாந்தின் மவுன்ட் மாங்கானு நகரில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதே போல் தென்ஆப்பிரிக்கா- இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டி (இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி) செஞ்சூரியனில் நாளை ஆரம்பிக்கிறது. இவையும், ‘பாக்சிங் டே’ போட்டி என்றே அழைக்கப்படுகிறது. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பது இன்னொரு சிறப்பு அம்சமாகும்.
    இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, அபேய் குருவில்லா, தெபஷிஷ் காந்தி ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
    இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, அபேய் குருவில்லா, தெபஷிஷ் மொகந்தி ஆகிய மூன்று பேர் பெயர்களை பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
    தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் இருந்து பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் விலகியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் முடிவடைந்த நிலையில் நாளைமறுதினம் (டிசம்பர் 26) முதல் டெஸ்ட் தொடங்குகிறது.

    காயம் காரணமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், தொடக்க பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கடைசி டி20 போட்டியில் விளையாடும்போது சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கானுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    ஏற்கனவே இரண்டு பேட்ஸ்மேன்கள் விலகிய நிலையில், தற்போது சுழற்பந்து வீச்சாளர் விலகியிருப்பது பாகிஸ்தான் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
    2022 சீசனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 8 அணிகளை 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்கபிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 10 அணிகள் 2022 சீசனில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சையத் முஷ்டாக் அலி டி20 டிராபிக்கான பயிற்சி ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் ஒவரில் 21 ரன்கள் விளாசினார் சூர்யகுமார் யாதவ்.
    இந்தியாவின் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்குகிறது. இதில் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மும்பை உத்தேச அணியில் சூர்யகுமார் யாதவ், சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

    உத்தேச அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. சூர்யகுமார் யாதவ் - யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. சூர்ய குமார் பேட்டிங் செய்யும்போது சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் பந்து வீசினார். அர்ஜுன் ஓவரில் சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் விளாசினார்.

    அதோடு மட்டுமல்லாமல் 10 பவுண்டரி, 9 சிக்சடன் 47 பந்தில் 120 ரன்கள் விளாசினார். சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் நான்கு ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 480 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    2021-ம் ஆண்டுக்கான ஆசியன் லி மான்ஸ் தொடர் கார் பந்தய போட்டியில் நரேன் கார்த்திகேயன் தலைமயிலான இந்திய அணி பங்கேற்கிறது.

    2021-ம் ஆண்டுக்கான ஆசியன் லி மான்ஸ் தொடர் கார் பந்தய போட்டி பிப்ரவரி 5-6 மற்றும் 19-20 ஆகிய தேதிகளில் அபுதாபியில் நடக்கிறது. 

    மொத்தம் 4 பந்தயங்கள் நடைபெறும். ஒவ்வொரு பந்தயமும் 4 மணி நேரம் நீடிக்கும். இதில் பார்முலா 1 கார் பந்தய போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியரான நரேன் கார்த்திகேயன் தலைமயிலான இந்திய அணி பங்கேற்கிறது. 

    அர்ஜூன் மைனி, நவீன் ராவ் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். எல்.எம்.பி. 2 வகை பிரிவில் ஒரேகா 07 கார்களை இந்திய வீரர்கள் பயன்படுத்துகிறார்கள்.

    ×