என் மலர்tooltip icon

    விளையாட்டு

    போட்டியின் முடிவை ஒட்டுமொத்தமாக மாற்ற காரணமாக அமைந்த ரன்அவுட்டுக்காக விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டதாக ரஹானே தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவ காரணம் கோலியின் ரன் அவுட்டும் முக்கிய காரணம். முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலையில் இருந்த இந்திய அணி விரட் கோலியின் ரன்அவுட்டால் திடீரென தடுமாறியது.  ஆட்டத்தின் திருப்பு முனை என்றும் அதை சொல்லலாம்.

    நாதன் லயன் வீசிய 77-வது ஓவரின் கடைசி பந்தில் ரஹானே சிங்கிள் எடுக்க முயன்று பிறகு பின் வாங்கியதால் விராட் கோலி ரன் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அதற்காக கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் ரஹானே. ‘‘அந்த நாள் ஆட்டத்திற்கு பிறகு நான் கோலியிடம் சென்று நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தேன். அவர் பரவாயில்லை விடுங்கள் என்றார். எங்கள் இருவருக்குமே ஆட்டத்தின் அந்த சூழல் தெரியும். நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். இருப்பினும் இது கிரிக்கெட் விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒன்று. அது மிகவும் கடினமான தருணம்’’ என்றார். 
    ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் ஸ்மித், டேவிட் வார்னரை நம்பியே இருக்கிறது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை இந்தியாவின் பந்து வீச்சு அசைத்துவிடுமா? என்பதுதான் பேச்சு பொருளாக இருந்தது. ஆனால், அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 244 ரன்கள் எடுத்தபோது, ஆஸ்திரேலியா 191 ரன்னில் சுருண்டது.

    மெல்போர்ன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் வலுவானது எனக்கூற முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘விராட் கோலியை நீங்கள் மிஸ் செய்யும்போது, உண்மையைச் சொல்லப்போனால், அது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும். அதேபோல் ஷமியும் இல்லை. இருந்தாலும் இந்திய அணி கடும் சவாலாக இருப்பார்கள். எல்லோருமே ஏமாற்றம் அடைந்தார்கள். ஆனால் ஒவ்வொருவரும் அதை கெட்ட கனவாக எடுத்துக் கொண்டார்கள்.

    ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. வார்னர் 30 சதவீதம், ஸ்மித் 30 சதவீதம், மற்ற அனைவரும் சேர்ந்து 30 சதவீதம் என்பதுதான் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால், பந்து வீச்சு மிகச்சிறப்பு. ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிக வலுவானது அல்ல’’ என்றார்.
    இந்தியாவின் முன்னணி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக உனத்கட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்தியாவின் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்குகிறது. இதில் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தத் தொடருக்கான சவுராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் சவுராஷ்டிரா அணி முதன் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
    இந்தியா மெல்போர்ன் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் அடிலெய்டு படுதோல்வியில் இருந்து மீண்டு வர நல்ல வாய்ப்பு என மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
    அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் சுருண்டதால், மீதுமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுமா? என்பதை விட தாக்குப்பிடித்து விளையாடுமா? என்ற கேள்வியே அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்தநிலையில் மெல்போர்ன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் இந்தியா பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மார்க் டெய்லர் கூறுகையில் ‘‘இந்தியா ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. அவர்கள் இன்னும் சிறந்த வீரர்களை பெற்றிருக்கிறார்கள்.விராட் கோலி இல்லாதது வெளிப்படையாகவே இந்திய அணியின் பேட்டிங்கிலும், கேப்டன் பதவியிலும் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இருந்தாலும் புஜாரா, ரஹானே ஆகியோரை இந்திய அணி பெற்றுள்ளது.

    அவர்கள் போதுமான அளவிற்கு ரன்கள் குவித்து விட்டால், 10 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள். இந்தியா சிறப்பாக விளையாடி ரன்கள் அடித்தால், அவர்களுடைய பந்து வீச்சாளர்கள் அவர்களுடைய வேலையை சிறப்பாக செய்வார்கள்’’ என்றார்.
    பார்சிலோனா அணிக்காக 644 கோல்கள் மெஸ்சியை அடிக்க விட்ட கோல் கீப்பர்களுக்கு அமெரிக்க நிறுவனம் பீர் பாட்டீல் அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளது.
    அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி. உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படுகிறார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் இவர் ரியல் வலாடோலிட் அணிக்கெதிராக ஒரு கோல் அடித்தார்.

    இது பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடித்த 644-வது கோல் ஆகும். இதன்மூலம் ஒரே கிளப் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த ஜாம்பவான் பீலேயின் (643) சாதனையை முறியடித்தார்.

    மெஸ்சியின் சாதனையை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் புட்வெஸ்சர் என்ற பீர் தயாரிக்கும் நிறுவனம் மெஸ்சி 644 கோல்கள் அடிக்கும்போது எதிரணி கோல்கீப்பராக இருந்த கோல்கீப்பர்களுக்கு பீல் பார்ட்டில்கள் அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளது.

    33 வயதான மெஸ்சிக்கு இது 17-வது லா லிகா சீசன் ஆகும். 10 லா லிகா டைட்டில், நான்கு சம்பியன்ஸ் லீக், மூன்று கிளப் உலக கோப்பைகளை வென்றவர் மெஸ்சி ஆவார்.
    விராட் கோலி இந்திய அணியில் இல்லாதது, நாங்கள் அவரை நிச்சயமாக தவற விடுகிறோம் என பொறுப்பு கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்த போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ளார்.

    இதனால் கடைசி மூன்று போட்டிகளில் விராட் கோலி இல்லாத நிலையில், ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். 

    இவரது தலைமையில் இந்திய அணி நாளை மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. விராட் கோலி இல்லாதது குறித்து ரஹானே கூறுகையில் ‘‘நாங்கள் நிச்சயமாக விராட் கோலியை தவற விடுகிறோம். அவரைப் பற்றி நீங்கள் சிறப்பாக நினைக்கும்போது, அவர் இங்கே இல்லாத நேரத்தில் நாங்கள் அவரை தவற விடுகிறோம்’’ என்றார்.

    மேலும், ‘‘தொடக்க பேட்ஸ்மேன் பணி மிகவும் முக்கியமானது. ஆனல், அவர்கள் மீது நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. விராட் கோலி இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன் அணி வீரர்களிடம் பேசினார். அடிலெய்டு டெஸ்டில் நாங்கள் இரண்டு நாட்கள் முன்னிலையில் இருந்தோம். ஒருமணி நேர மோசமான நிகழ்வு முற்றிலுமாக மாற்றிவிட்டது.

    தொடக்க ஜோடி பணி ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும் உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் மீது நெருக்கடி கொண்டு விரும்பவில்லை. அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்க விரும்புகிறேன். நல்ல அடித்தளம் அமைத்துவிட்டால், அதன்பின் வரும் வீரர்களுக்கு எளிதாக அமையும்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் நிறுத்தப்பட்டு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நிலையில், பாக்சிங் டே அன்று மூன்று டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது.
    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பாக்சிங் டே டெஸ்ட் மீது ஆர்வம் காட்டும்.

    அதற்கேற்றபடி போட்டி அட்டவணைகளை தயாரிக்கும். தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. 2-வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் மைதனத்தில் பாக்சிங் டே டெஸ்ட் ஆக நடக்கிறது. இந்திய நேரப்படி போட்டி காலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் முதல் டெஸட் நாளை மவுன்ட் மவுங்கானுயில் பாக்சிங் டே டெஸ்டாக நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி நாளை செஞ்சூரியனில் நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் ஒருநாளில் மூன்றும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், பந்து பேட்டில் ‘நச்’ என்று படும் சத்தத்தால் சிந்தனை மற்றும் அணுகுமுறையை மாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
    அச்சுறுத்தக் கூடிய எவ்வாளவு பெரிய பந்து வீச்சாளர் பந்து வீசினாலும், பேட்ஸ்மேன் சரியான வகையில் ஒரு பந்தை மிடில் பேட்டில் எதிர்கொண்டு அதை பவுண்டரிக்கு விரட்டினால், அந்த பேட்ஸ்மேனுக்கு நம்பிக்கை அதிகரித்து விடும்.

    அப்படித்தான் அடிலெய்டு டெஸ்டின் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ பேர்ன்ஸ் உமேஷ் யாதவ் பந்தில் ஸ்கொயர் லெக்கில் பவுண்டரி அடித்தது அவருக்கு நம்பிக்கை அளித்தது என்பதை சுட்டுக்காட்டிய சச்சின் தெண்டுல்கர், பந்து பேட்டில் படும் ‘நச்’ என்ற சத்தத்தால் சிந்தனை மற்றும் அணுகுமறையை மாற்ற முடியும்  என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘சத்தம் அடித்தளமாகும். உங்களுடைய மிடில் பேட்டில் பந்து படும் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, உங்களுடைய சிந்தனை மாறுபட தொடங்கும். ஏனென்றால், அது அழகான சுறுசுறுப்பை தரும் சத்தம். அதன்பிறகு உங்களது உடல் அதிகமான நேர்மறையாக முறையில் நகரும்.

    இது ஒரு செயின் மாதிரி. இது சத்தத்தில் இருந்து தொடங்கும். சத்தம் எனக்கு நமபிக்கையை கொடுக்கும். சிறந்த பேட்ஸ்மேன் சத்தத்தை கேட்கும்போது அவர் நம்பிக்கை பெறுவார். அது உங்களுடைய சிந்தனையை மாற்றும். உங்களுடைய அணுகுமுறையை மாற்றும். உடல் இயக்கம் மாறும். உங்களுடைய உடலில் பாசிட்டிவ் ஆன எனர்ஜி ஓடும்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2023-ல் நடைபெற இருக்கும் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்தில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
    பெண்களுக்கான பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடக்க இருக்கிறது. இந்தத் தொடரில் 32 அணிகள் பங்கேற்கும் என பிபா தெரிவித்துள்ளது. இந்தத் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு 10 அணிகள் தகுதிபெறும்.

    அணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கால்பந்து கூட்டமைப்பில் இருந்தும் தகுதி பெறும் அணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தகுதி பெறும். யூரோப்பா கூட்டமைப்பில் இருந்து 11 அணிகளில் தகுதிபெறும். ஆசியாவில் இருந்து 6 அணிகளும், ஆப்பரிக்காவில் இருந்து நான்கு அணிகள், தென் அமெரிக்காவில் இருந்து மூன்று அணிகள், ஓசானியாவில் இருந்து ஒரு அணியும் வடக்கு, மத்திய அமெரிக்கா, கரிபீயன் கூட்டமைப்பில் இருந்து நான்கு அணிகளும் தகுதி பெறும்.

    கடந்த வருடம் பிரான்சில் நடைபெற்ற உலக கோப்பையில் 24 அணிகள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    ரோகித் சர்மா அணிக்கு திரும்பி, ஷுப்மான் கில் நீக்கப்பட்டால், அது ஏற்கத்தக்கதாக இருக்காது என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட்நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது இளம் வீரரான ஷுப்மான் கில் இந்திய அணியில் அறிமுகம் ஆக இருக்கிறார்.

    விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாத நிலையில் பிரித்வி ஷா நீக்கப்பட்டார். இதனால் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ஷுப்மான் கில் 5 அல்லது 6-வது இடத்தில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ரஹானே ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க முடிவு செய்துள்ளார். இதனால் கேஎல் ராகுலுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆகவே ஷுப்மான் கில் மயங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    ரோகித் சர்மா 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதனால் ஷுப்மான் கில்லின் நிலைமை 3-வது டெஸ்டில் என்ன ஆகும்? என்பது கேள்விக்குறி.

    இந்த நிலையில் உயர்ந்த நிலையை அடைய ஷுப்மான் கில்லுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில் ‘‘ஷுப்மான் கில் தொடக்க பேட்ஸ்மேனாக ஜொலிப்பரா என்பதற்கு நேரம் மட்டுமே பதில் சொல்லும். ஆனால், பாக்சிங் டே டெஸ்டில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்திருப்பது, அதைவிட பெரியது ஏதும் இருக்க முடியாது.

    அணி நிர்வாகம் மீண்டும் அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் களம் இறக்காது என நம்புகிறேன். நம்பிக்கை வைத்து அவரை எடுக்க வேண்டும். ஒருவர் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தால் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நீங்கள் நம்பிக்கையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    அவரை தேர்வு செய்ததன் மூலம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை வைத்திருப்பார்கள் என்பதில் நன் உறுதியாக இருக்கிறேன். ரோகித் சர்மா வந்தால் கூட, அவரை எதாவது ஒரு பேட்டிங் ஆர்டரில் களம் இறக்க வேண்டும்.

    ஷுப்மான் கில் தொடக்க வீரராக களம் இறங்கி 20 முதல் 30 ரன்கள் அடித்தபின், திடீரென ரோகித் சர்மா வந்தபின் ஆடும் லெவனுக்கு வெளியே கில்லை அவரை காண்பது மிகவும் ஏற்கத்தக்க கூடியதாக இருக்காது.

    அவருக்கும் நியாயமாக இருக்காது. அவரை தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டால், டோனி தலைமையின் கீழ் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்தது போன்று அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.
    ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அடுத்த ஐபிஎல் சீசன் வரை போட்டி கிரிக்கெட்டில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். பந்து ஸ்விங் ஆகும் ஆடுகளத்தில் இவரது பந்தை எதிர்கொள்வது மிகக்கடினம். ஒரே நேரத்தில் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் செய்யும் திறமை வாய்ந்த வீரர் என்பதால், இந்திய அணியின் வெளிநாட்டு தொடர்களின்போது முக்கிய பவுலராக திகழ்வார்.

    மேலும், பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்திலும் புதுப்பந்தில் ஸ்விங் செய்யக்கூடியவர். ஆனால், கடந்த இரண்டு வருடமாக முதுகுவலி, இடிப்பு வலி, ஹாம்ஸ்டிரிங் காயம் என முக்கியமான போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில் இந்தியா 1-4 எனத் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் புவனேஷ்வர் குமார் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற போதும் அவர் அணியில் இல்லை. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரிக்குப்பின் அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

    உடற்தகுதி பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார். அக்டோபர் 2-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டு வெளியேறினார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சையுடன் கூட பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது அவருக்கு உண்டான இடுப்பு வலி காயத்திற்காக அடுத்த மாதம் வரை தேசிய அகாடமியில் சிகிச்சை மேற்கொள்கிறார். இந்த காயத்திற்கு ஆறு மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டுமாம். இதனால் உத்தர பிரதேச சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான அணியில் தேர்வாகவில்லை.

    புவனேஷ்வர் குமாரால் ஆறு மாத்திற்கு போட்டி கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டி தொடங்குவதாக கூறப்படுகிறது.

    30 வயதாகும் புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட், 114 ஒருநாள், 43 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 6, 132, 41 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் 2018 ஜனவரி மாதம் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும், டி20 போட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் விளையாடியுள்ளார்.
    இந்தியா பெருமை வாய்ந்த கிரிக்கெட் நாடு, அடிலெய்டு டெஸ்டில் மோசமான விளையாடியது போன்று, மெல்போர்னில் துவண்டு விடமாட்டார்கள் என டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் ஆக மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா அணியில் மாற்றும் ஏதும் இல்லை.

    பொறுப்பு கேப்டன் ரஹானே ஐந்து பேட்ஸ்மேன், ஐந்து பந்து வீச்சாளர்களுடன் தைரியமான களம் இறங்குகிறார். அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டாலும், அதைப்பற்றி கவலைப்படவில்லை. இந்திய அணி வீரர்கள் பாக்சிங் டே டெஸ்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    அதேவேளையில் 36 ரன்னில் சுருண்டு படுமோசமான நிலையை எட்டிய இந்திய அணி சற்று மனதளவில் நிலைகுலைந்து இருக்கும். இதை சரியாக பயன்படுத்தி இந்திய வீரர்கள் சுதாரிப்பதற்குள் மற்றொரு அடியை கொடுத்துவிட வேண்டும் என ஆஸ்திரேலியா துடிக்கிறது.

    பாக்சிங் டே டெஸ்ட் குறித்து ரஹானே கூறுகையில் நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம் என்றார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் இந்திய அணிக்கு அடிலெய்டு டெஸ்ட் போன்று நடக்காது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், பாக்சிங் டே டெஸ்ட் குறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘இந்தியா பெருமை வாய்ந்த கிரிக்கெட் நாடு என்பது எங்களுக்குத் தெரியும். ஏராளமான அபாயகரமான வீரர்களுடன் மிகச்சிறந்த திறமைவாய்ந்த டெஸ்ட் அணி.

    ஆஷஸ் தொடர்-ஐ பார்த்தீர்கள் என்றால் இங்கிலாந்து 1-2 என பின்தங்கியிருந்தது. அதன்பின் கடைசி டெஸ்டில் அபாரமான விளையாடி வெற்றி பெற்றதுடன் தொடரை சமன் செய்ததது. அந்த தருணத்தை நினைவில் வைத்து நாங்கள் சரியாக செல்வோம்.

    அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் பற்றி எங்களுக்குத் தெரியும். அவர்கள் அபாயகரமான வீரர்கள். அவர்கள் போட்டியை பாசிட்டிவாக எடுத்துக் செல்லக்கூடியவர்கள்.

    அவர்களுக்கு நாங்கள் இன்ச் கணக்கில் இடம் கொடுத்தால், அவர் அதை மைல் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஆகவே, அடிலெய்டில் எப்படி செயல்பட்டோமோ, அதேபோல் நாளைய போட்டியில் களம் இறங்குவோம். ஐந்து நாள் போட்டிக்கு ஏற்றபடி தயாராக செல்வோம்.

    முதல் போட்டியில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். முதல் இரண்டு நாட்கள் முடிவில், நாங்கள் மிகவும் தீவிரமான ஆட்டத்தில் இருந்தோம். அந்த அணுகுமுறையை அடுத்த போட்டிக்கும் எடுத்துச் செல்வோம்’’ என்றார்.
    ×