என் மலர்tooltip icon

    செய்திகள்

    உனத்கட்
    X
    உனத்கட்

    சையத் முஷ்டாக் அலி டிராபி: சவுராஷ்டிரா அணி கேப்டனாக உனத்கட் நியமனம்

    இந்தியாவின் முன்னணி உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக உனத்கட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்தியாவின் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்குகிறது. இதில் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தத் தொடருக்கான சவுராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் சவுராஷ்டிரா அணி முதன் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×