என் மலர்
விளையாட்டு
Top day 1 for us. Great display from the bowlers and a solid finish too. 🇮🇳👏
— Virat Kohli (@imVkohli) December 26, 2020
கோவா:
11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டியில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 6-வது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது.
சென்னையின் எப்.சி. 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
சென்னையின் எப்.சி. 6-வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
சென்னை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 4 ஆட்டங்களுக்கு பிறகு கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்ததால், சென்னையின் எப்.சி. வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள்.
ஈஸ்ட்பெங்கால் அணி 2 டிரா, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதிய டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கு இடையேயான 100-வது போட்டியாகும். இரு அணிகள் மோதிய டெஸ்ட போட்டியில் இது 7-வது அதிகபட்சமாகும். ஒரு அணியுடன் இந்தியா 2-வது முறையாக 100-வது டெஸ்டில் விளையாடுகிறது. இங்கிலாந்துடன் 122 டெஸ்டில் விளையாடி உள்ளது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் அதிகபட்சமாக 351 டெஸ்டில் மோதி உள்ளன. அதற்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் 160 டெஸ்டில் விளையாடி உள்ளன. இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா 153 டெஸ்டிலும், இந்தியா -இங்கிலாந்து 122 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் 116 டெஸ்டிலும், இங்கிலாந்து-நியூசிலாந்து 105 டெஸ்டிலும் மோதியுள்ளன.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்டில் இந்தியா 28-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது. ஒரு போட்டி டையில் முடிந்தது.
இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1947-ம் ஆண்டு முதல் டெஸ்டில் விளையாடியது. அப்போது லாலாஅமர்நாத் கேப்டனாக இருந்தார். 25-வது டெஸ்டுக்கு பட்டோடியும், 50-வது டெஸ்டுக்கு அசாருதீனும், 75-வது டெஸ்டுக்கு கும்ப்ளேயும் கேப்டனாக பணியாற்றினர். தற்போது 100-வது டெஸ்டில் ரகானே கேப்டனாக உள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட் ஆகியோர் களமிறங்கினர். ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். மேத்யூ வேட் 30 ரன்னில் அஷ்வினிடம் வீழ்ந்தார்.
அடுத்து இறங்கிய லாபஸ்சாக்னே நிதானமாக ஆடினார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கினார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
முதல் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா அணி 65 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. லாபஸ்சாக்னேவும் டிராவிஸ் ஹெட்டும் விளையாடி வருகின்றனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:
மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ், லாபஸ்சாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:
மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், புஜாரா, ரகானே, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொகமது சிராஜ்.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்டடி 20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனுவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மொகமது ரிஸ்வான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் டாம் பிளெண்டல் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.






