என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    2660 ரன்களுக்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் டக்அவுட்: அலற விடும் அஸ்வின்

    ரன்குவிப்பு மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டு இன்னிங்சில் 1 மற்றும் 0 என அவுட்டாக்கி அலற விட்டுள்ளார் அஸ்வின்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் ரன்மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்களா? என்பது பேச்சுப் பொருளாக இருந்தது.

    மேலும் ஸ்மித் VS பும்ரா என்ற அளவிலேயே போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்மித்தை திணற வைத்துள்ளார் அஸ்வின். அடிலெய்டு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 1 ரன்னில் ஸ்மித்தை வெளியேற்றிய அஸ்வின், இன்று தொடங்கிய மெல்போர்ன் டெஸ்டில் முதல் இன்னிங்சில ரன்ஏதும் எடுக்கவிடாமல் டக்அவுட்டில் வெளியேற்றினார். இதனால் ஸ்மித் VS அஸ்வின் என போட்டி மாறியுள்ளது.
    Next Story
    ×