search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ் சுண்டப்பட்ட காட்சி
    X
    டாஸ் சுண்டப்பட்ட காட்சி

    இந்தியாவுடனான பாக்சிங் டே டெஸ்ட் - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

    இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    மெல்போர்ன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

    அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது.

    பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:

    மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ், லாபஸ்சாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:

    மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், புஜாரா, ரகானே, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொகமது சிராஜ்.

    விராட் கோலி இந்தியா திரும்பியுள்ள நிலையில் கேப்டன் பொறுப்பு ரகானேவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×