search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உலக கோப்பை கால்பந்து"

    • ஸ்பெயின் அணி வீராங்கனை கார்மோனா ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
    • இதன் மூலம் ஸ்பெயின் அணி முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்வதுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளது.

    சிட்னி:

    32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல்முறையாக நுழைந்துள்ள இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதியது. 32 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இறுதிப்போட்டியை எட்டியிராத இரு அணிகள் இறுதியுத்தத்தில் சந்திப்பது இது முதல் தடவையாகும்.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வீராங்கனை கார்மோனா ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இதனையடுத்து நடந்த 2-வது பாதியில் இரு அணிகளும் கோல் போட முடியாமல் திணறினர். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதன் மூலம் ஸ்பெயின் அணி முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்வதுடன் புதிய சாதனையையும் படைத்துள்ளது. அதாவது வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. ஸ்பெயின் அணி 2010-ம் ஆண்டு ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மகுடம் சூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இத்தாலி அணிகள் மோதின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது.

    நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான் நார்வே, ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜிரியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில் இன்று ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இத்தாலி அணிகள் மோதின. 11-வது நிமிடத்தில் முதல் கோலை இத்தாலி அணி போட்டது. தென் ஆப்பிரிக்கா அணி கோல் போட முடியாமல் தவித்த நிலையில் இத்தாலி அணி வீராங்கனையான பெனெடெட்டா ஒர்சி தங்களது அணி பக்கமே கோலை போட்டுகொடுத்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது.

    இதனையடுத்து நடந்த 2-வது பாதியில் 67-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும் 74-வது நிமிடத்தில் இத்தாலி அணியும் கோல் போட்டனர். இதனால் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். இந்த பரபரப்பான ஆட்டத்தில் இறுதி நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கோலை போட்டதன் 3-2 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

    ஓன் கோலால் இந்தாலி அணி தங்களது வெற்றி வாய்ப்பை இழந்தது பரிதாபத்துக்குரியதாக இருந்தது.

    • கடைசி வரை போராடிய வியட்நாம் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தோல்வியடைந்தது.
    • நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பி மற்றும் சி பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா, நைஜிரியா மற்றும் சி பிரிவில் ஜப்பான், ஸ்பெயின் ஆகிய அணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர்.

    இந்நிலையில் இன்று இ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வியட்நாம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் கோல் போட ஆரம்பித்த நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து கோல்களை பதிவு செய்தனர்.

    இறுதியில் நெதர்லாந்து அணி 7 கோல்களை பதிவு செய்தது. கடைசி வரை போராடிய வியட்நாம் அணி ஒரு கோல் கூட போட முடியாமல் தோல்வியடைந்தது. இந்த பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டியில் 0-0 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது.

    இதன் மூலம் இ பிரிவில் வியட்நாம் மற்றும் போர்ச்சுகல் அணி வெளியேறியது. நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    ×