search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஹானே
    X
    ரஹானே

    நாங்கள் நிச்சயமாக விராட் கோலியை தவறவிடுகிறோம்: ரஹானே

    விராட் கோலி இந்திய அணியில் இல்லாதது, நாங்கள் அவரை நிச்சயமாக தவற விடுகிறோம் என பொறுப்பு கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்த போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ளார்.

    இதனால் கடைசி மூன்று போட்டிகளில் விராட் கோலி இல்லாத நிலையில், ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். 

    இவரது தலைமையில் இந்திய அணி நாளை மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. விராட் கோலி இல்லாதது குறித்து ரஹானே கூறுகையில் ‘‘நாங்கள் நிச்சயமாக விராட் கோலியை தவற விடுகிறோம். அவரைப் பற்றி நீங்கள் சிறப்பாக நினைக்கும்போது, அவர் இங்கே இல்லாத நேரத்தில் நாங்கள் அவரை தவற விடுகிறோம்’’ என்றார்.

    மேலும், ‘‘தொடக்க பேட்ஸ்மேன் பணி மிகவும் முக்கியமானது. ஆனல், அவர்கள் மீது நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. விராட் கோலி இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன் அணி வீரர்களிடம் பேசினார். அடிலெய்டு டெஸ்டில் நாங்கள் இரண்டு நாட்கள் முன்னிலையில் இருந்தோம். ஒருமணி நேர மோசமான நிகழ்வு முற்றிலுமாக மாற்றிவிட்டது.

    தொடக்க ஜோடி பணி ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும் உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் மீது நெருக்கடி கொண்டு விரும்பவில்லை. அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்க விரும்புகிறேன். நல்ல அடித்தளம் அமைத்துவிட்டால், அதன்பின் வரும் வீரர்களுக்கு எளிதாக அமையும்’’ என்றார்.
    Next Story
    ×