என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஹானே
    X
    ரஹானே

    ஆஸி. மைன்ட் கேம்ஸ் விளையாடட்டும்... நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம்- ரஹானே

    ஆஸ்திரேலியா இந்திய அணி வீரர்களை மனதளவில் பாதிக்கும் வகையில் விளையாட விரும்பும் நிலையில், நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம் என ரஹானே தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இதனால் நாளை தொடங்கும் 2-வது போட்டியில் இந்தியா சற்று அன அழுத்தத்தில் இருந்தால் அது எங்களுக்கு சந்தோசம், பொறுப்பு கேப்டன் ரஹானே மீது நெருக்கடியை சுமத்துவோம் என ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நாளைய போட்டி குறித்து ரஹானே கூறும்போது, ஆஸ்திரேலியா மைன்ட் கேம்ஸ் விளையாடட்டும். நாங்கள் எங்கள் அணி மீது கவனம் செலுத்துவோம் என்று ரஹானே தெரிவித்துள்ளார்.

    பாக்சிங் டே போட்டி குறித்து மேலும் ரஹானே கூறுகையில் ‘‘மைன்ட் கேம்ஸ் விளையாட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பானவர்கள். நான் அவர்களை செய்ய விடுவேன். நாங்கள் எங்கள் மீது கவனம் செலுத்துவோம். நாங்கள் ஒரு அணியாக என்ன செய்ய விரும்புகிறமோ?, ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் அதை நோக்கி பயணிப்போம்.

    பும்ரா

    இந்திய அணியை வழிநடத்திச் செல்வது சிறப்பான தருணம். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், அது சிறந்த வாய்ப்பு மற்றும் பொறுப்பு. ஆனால், எந்தவிதமான நெருக்கடியையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

    நான் என்னுடைய அணியின் பின்னால் இருக்க விரும்புகிறேன். அதனால் என் மீது மட்டும் கவனம் இல்ல. இது ஒட்டுமொத்த அணிகக்கான கவனம். எப்படி நாம் ஒன்றாக இணைந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை பற்றியது. இதில்தான் கவனம் செலுத்துவேன்’’ என்றார்.
    Next Story
    ×