என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 63-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்கால் அணியின் ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 31-வது நிமிடத்தில் பெங்கால் அணி வீரர் அஜய் சேத்ரி ‘பவுல்’ செய்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் பெங்கால் அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.

    ஆனாலும் அந்த அணியின் கோல் கீப்பர் தேவ்ஜித் முஜூம்தர் திறம்பட செயல்பட்டு சென்னை அணியின் கோல் முயற்சிகளை முறியடித்தார். சென்னை தரப்பில் 6 முறை இலக்கை நோக்கி பந்தை அடித்த போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 3 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று 15 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன
    இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் நோ-பால் வீசியதை ஸ்பாட் பிக்சிங்குடன் தொடர்புபடுத்தி ஆஸி.முன்னாள் வீரர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.
    இந்திய அணிக்குள் நெட் பந்து வீச்சாளராக இடம் பெற்ற நடராஜன் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர் வரை தனது தனித்திறமையான பந்துவீச்சால் முன்னேறியது குறித்து ஐசிசி, பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளன.

    பிரிஸ்பேனில் தற்போது இந்தியா, ஆஸி. அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டுமே இருக்கும் நிலையில் வெற்றி யாருக்கு எனப் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் நடராஜன் 6 நோ-பால்களை வீசினார்.  2 நோபால்களை இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் வீசினார்.

    8 நோ-பால்களில் ஐந்து முறை அவர் வீசிய ஓவரின் முதல் பந்து நோ-பாலாக அமைந்தது. இதைப்பார்த்த வர்ணனையாளர் பிரிவில் இருந்த ஷேன் வார்னே, டி நடராஜன் வீசிய நோ-பால்கள் சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

    வர்ணனையாளர் அறையில் இருந்த பேசுகையில், “நடராஜன் பந்து வீசும்போது என் கண்களுக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது. நடராஜன் 8 நோ-பால்களை வீசியுள்ளார். அனைத்து நோ-பால்களுமே மிகப்பெரியவை. அதில் 5 நோ-பால்கள் ஓவரின் முதல் பந்திலேயே வீசப்பட்டுள்ளது. நாமெல்லாம் நோ-பால் வீசியிருக்கிறோம். ஆனால், ஓவரின் முதல் பந்திலேயே 5 நோ-பால்கள் வீசியதுதான் வித்தியாசமாக, சுவாரஸ்யமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

    நடரஜான் நோ-பால் வீசியது இயல்பான சம்பவம். அதிலும் முதன்முதலாக டெஸ்ட் போட்டிக்குள் அறிமுகமாகும் வீரர் பதற்றத்தில் நோ-பால் வீசுவது இயல்பு. ஆனால், இதை மறைமுகமாக ஸ்பாட் பிக்சிங்குடன் தொடர்புபடுத்தி வார்னே சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

    மார்க் வாக், ஸ்டீவ் வாக் ஆகியோருடன் விளையாடும்போது, ஸ்பாட் பிக்சிங் புகார்களைச் சந்திக்கவில்லையா. இலங்கையில் சிங்கர் கோப்பை நடந்தபோது, புக்கிகளுக்கு ஆடுகளத்தின் தன்மை, காலநிலை போன்ற தகவல்களை வழங்கி மார்க் வாக், வார்னே சிக்கவில்லையா. அப்போது வார்னே மீது எழுந்த புகாருக்கு இதுவரை விளக்கம் இல்லை.

    ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்தில் உப்புக் காகிதத்தைத் தேய்த்து ஓராண்டு தடை பிறப்பிக்கப்பட்டபோது, தங்கள் நாட்டு வீரர்களின் ஒழுக்கத்தைப் பற்றி வார்னே வாய் திறக்கவில்லை.

    ஆனால், ஓராண்டுக்குப் பின் ஸ்மித்தை அணியில் சேர்க்க மட்டும் வார்னே பரிந்துரைத்தார்.

    ஆனால், நடராஜன் போன்ற எளிமையான குடும்பத்தில், கடினமான குடும்பப் பின்னணியில் வளர்ந்து, இந்திய அணியில் இடம் பெற்று சாதிக்கும் தறுவாயில் ஆஸ்திரேலிய வீரர் வார்னே குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

    முத்தையா முரளிதரன், சுனில் நரைன் போன்ற பல ஆசிய வீரர்கள் சாதிக்கும்போது ஆஸ்திரேலிய நடுவர்களும்,  வீரர்களும் இதுபோன்ற வீண் குற்றச்சாட்டுகளையும், சேற்றை வாரி இறைப்பதும் தொடர்ந்து வருகிறது.

     இவ்வாறு டுவிட்டர்வாசிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

    வர்ணனையாளர் ஹர்ஸா போக்லே-வுக்கு ரீட்வீட் செய்து ரசிகர் ஒருவர், “ஹர்ஸா தயவுசெய்து வார்னேவுக்குப் பதிலடி கொடுங்கள். நடராஜன் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சந்தேகத்தைக் கிளப்புகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

    “நடராஜனை ஸ்பாட் பிக்சிங் புகாரில் சேர்க்கும்போதே, உங்களின் தரம் என்னவென்று தெரிந்துவிட்டது” என ரசிகர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    “நடராஜன் குறித்து தரக்குறைவான குற்றச்சாட்டு கூறிய மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.
    இந்திய டெஸ்ட் அணி ஆஸ்ரேலியாவில் விளையாடி வருகிறது. நாளையுடன் டெஸ்ட் போட்டி தொடர் முடிவடைகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

    முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 5-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது போட்டியும் சென்னையிலேயே நடக்கிறது.

    சென்னையில் நடைபெற இருக்கும் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. சேத்தன் சர்மா தேர்வுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இந்திய அணி தேர்வு இதுவாகும்.

    இந்திய அணியில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, கேஎல் ராகுல், பும்ரா, அஸ்வின், விஹாரி ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். ஆகையால், இவர்களில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பதே எதிர்பார்ப்பு.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாத இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் இடம் பிடிப்பார்கள். ஜடேஜா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என்பதை ஏற்கனவே தெரிவித்துவிட்டனர். இதனால் அஸ்வின் உடன் இணைந்து பந்து வீசும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யார்? என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.
    மிஸ்பா உல் ஹக் தலைமையிலான சப்போர்ட் ஸ்டாஃப்கள் வெளியேறினால் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என முகமது அமிர் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது அமிர். இவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். சமீபத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்தத் தொடருக்கான டி20 பாகிஸ்தான் அணியில் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இதனால் 26 வயதேயான முகமது அமிர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான சப்போர்ட் ஸ்டாஃப்கள் மனதை பாதிக்கும் அளவில் தொந்தரவு தருகிறார்கள் எனக் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் மீண்டும் அணிக்காக விளையாடத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முகமது அமிர் கூறுகையில் ‘‘ஆமாம்... தற்போதுள்ள பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் வெளியேறினால் மீண்டும் அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன். இதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஆகவே, தயவு செய்து பேப்பர் விற்பனைக்காக போலிச் செய்தியை பரப்புவதை நிறுத்துங்கள்’’ எனத் தெரிவிதுள்ளார்.
    பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ், எனது தந்தை உயிருடன் இருந்திருந்தால் மிகவும் சந்தோசம் அடைந்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் சேர்த்தன.

    2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 294 ரன்னில் ஆல்அவுட் ஆக முகமது சிராஜின் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. 19.5 ஓவர்கள் வீசிய அவர் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதில் லாபஸ்சேன், ஸ்மித் விக்கெட்டுகளும் அடங்கும்.

    இந்தத் தொடரில் முகமது சிராஜ் வழக்கமான மற்ற வீரர்களை போன்று சாதாரண சூழ்நிலையில் விளையாடவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன் அவரது தந்தை காலமானார். அவரது இறுதி சடங்கிற்குக்கூட வரவில்லை. தந்தையின் இழப்பு அவரை மிகப்பெரிய அளவில் பாதித்தது.

    தொடரை வென்று தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன் எனக் கூறினார். மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றிக்கு இவரது பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.

    இந்த நிலையில்தான் தற்போது பிரிஸ்பேன் டெஸ்டில் ஐந்து விக்கெட் சாய்த்துள்ளார். இந்தத் தொடரில் ஐந்து விக்கெட் வீழ்த்தி ஒரே பந்து வீச்சாளர்கள் இவர்தான்.

    இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிந்த பின்னர் முகமது சிராஜ் கூறுகையில் ‘‘தற்போது எனது தந்தை உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் சந்தோசம் அடைந்திருப்பார். ஆனால், அவரது ஆசிர்வாதத்தால் தற்போது ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளேன்.

    முகமது சிராஜ்

    இந்திய அணியில் இடம் பிடித்து ஐந்து விக்கெட் வீழ்த்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது தந்தை இருந்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

    எனது தந்தை காலமானதும் கடினமானதாக இருந்தது. என்னுடைய குடும்பம் மற்றும் அம்மாவிடம் பேசினேன். அதன்மூலம் தைரியத்தை பெற்றுக் கொண்டேன். இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்ற எனது தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தினேன்’’ என்றார்.

    3 டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் முகமது சிராஜ்.
    இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த கேப்டன்கள் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜோ ரூட் கேப்டனாக இங்கிலாந்து அணிக்கு தேடிக்கொடுத்த 24-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அதிக வெற்றிகளை பெற்ற 2-வது கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    மைக்கேல் வாகன் 51 போட்டிகளில் 26 வெற்றி, 11 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 45 போட்டிகளில் 24 வெற்றி, 15 தோல்வி மூலம் 24 வெற்றிகளும், ஆண்ட்ரூ ஸ்டாரஸ் 50 போட்டிகளில் 24 வெற்றி, 11 தோல்விகளுடனும், அலஸ்டைர் குக் 59 போட்டிகளில் 24 வெற்றி, 22 தோல்விகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    மேலும், இலங்கை மண்ணில் தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி சாதனைப்படைத்துள்ளது.
    ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
    கோவா:

    11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். 

    2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது. 

    3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டியில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 

    6-வது ஆட்டத்தில் கோவாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 7-வது போட்டியில் ஈஸ்ட் பெங்காலுடன் 2-2 என்ற கணக்கிலும், 8-வது ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகானுடன் கோல் எதுவு மின்றியும் டிரா செய்தது. 9-வது ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்திடம் தோற்றது. 
    10-வது போட்டியில் ஒடிசாவுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 11-வது ஆட்டத்தில் ஒடிசாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 

    சென்னையின் எப்.சி. 11 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 5 டிரா, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. 
    சென்னையின் எப்.சி. 12-வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை இன்று மீண்டும் சந்திக்கிறது. இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. 

    சென்னை அணி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரு அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
    ஈஸ்ட் பெங்கால் 2 வெற்றி, 5 டிரா, 4 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

    இந்த போட்டித் தொடரில் மும்பை அணி 8 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 26 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மோகன் பகான் 21 புள்ளிகளுடனும், கோவா 19 புள்ளிகளுடனும், ஐதராபாத் 16 புள்ளிகளுடனும், கவுகாத்தி 15 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன. 

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன் எடுத்தது. ஷர்துல் தாகூர் 67 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னும் எடுத்தனர். ஹாசல்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    33 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 54 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக வார்னர் 48 ஹரிஸ் 38, ஸ்மித் 55 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிராஜ் 5 விக்கெடும் தாகூர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் 327 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சிறுது நேரத்தில் மழை பெய்ததால் 4-வது நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது.

    4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது. நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி இன்னும் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.

    இந்திய கிரிக்கெட் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் பி.எஸ்.சந்திரசேகர் உடல்நல குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பெங்களூர்:

    இந்திய கிரிக்கெட் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் பி.எஸ்.சந்திரசேகர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர் உடல்நல குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவர் நலமுடன் இருப்பதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட வாஷிங்டன் சுந்தர், தாகூருக்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 7-வது விக்கெட்டான வாஷிங்டன் சுந்தரும், ஷர்துல் தாகூரும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 123 ரன்கள் எடுத்தனர். 

    முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நாடு திரும்பிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி இருவரது ஆட்டத்தையும் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

    வாஷிங்டன் சுந்தரும், ஷர்துல் தாகூரும் களத்தில் அபாரமான பங்களிப்பை வெளிப்படுத்தினர். டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறப்பான ஆட்டம் இதுவாகும். 
    நிதானமாக ஆடிய சுந்தருக்கும், தாகூருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
    இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    காலே:

    இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது. 

    இலங்கை முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 421 ரன் குவித்தது. இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 359 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 74 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்து இருந்தது. 

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 36 ரன் தேவை. கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. 

    அந்த அணி 24.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 22-ந் தேதி காலேயில் தொடங்குகிறது. 

    பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன் எடுத்தது. ஷர்துல் தாகூர் 67 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னும் எடுத்தனர். ஹாசல்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    33 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 54 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

    வார்னரும், மார்கஸ் ஹாரிசும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்கோர் 89 ஆக இருந்தபோது தொடக்க ஜோடி பிரிந்தது. ஹாரிஸ் 38 ரன்னில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து லபுஷேன் களம் வந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே வார்னர் 48 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அப்போது ஸ்கோர் 91 ஆக இருந்தது. 3--வது விக்கெட்டுக்கு லபுஷேனுடன் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்தார்.

    28-வது ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னை தொட்டது. முகமது சிராஜ் தனது அபாரமான பந்துவீச்சால் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
    31-வது ஓவரின் 3-வது பந்தில் லபுஷேனை வெளியேற்றினார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த அவர் தற்போது 25 ரன்களே எடுத்தார். அடுத்து வந்த மேத்யூ வேட் ரன் எதுவும் எடுக்காமல் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

    123 ரன்னில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு சுமித்துடன், கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து இருந்தது. சுமித் 28 ரன்னிலும், கிரீன் 4 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
    மதிய உணவு இடை வேளைக்குள் ஆஸ்திரேலியா மேலும் 128 ரன் எடுத்தது. 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

    மதிய உணவு இடை வேளைக்கு பிறகு 5-வது விக்கெட் ஜோடி தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுமித் 67 பந்தில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 77-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 31-வது அரை சதம் ஆகும்.
    முகமது சிராஜ்தான் இந்த ஜோடியையும் பிரித்தார். சுமித் 55 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 196 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் டிம்பெய்ன் களம் வந்தார். 56-வது ஓவரில் ஆஸ்திரேலியா 200 ரன்னை தொட்டது. 

    இதனையடுத்து கீரின் மற்றும் பெய்ன் தாகூர் பந்தில் வெளியேறினர். ஸ்டார்க் 1 லயன் 13 ஹசில்வுட் 9 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 328 ரன்கள் அடித்தால் வெற்றி பெரும்.

    இந்திய தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டும், தாகூர் 4 விக்கெட்டும் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 
    ×