search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிராஜ்
    X
    சிராஜ்

    பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார்

    பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன் எடுத்தது. ஷர்துல் தாகூர் 67 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னும் எடுத்தனர். ஹாசல்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    33 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 54 ரன்கள் முன்னிலை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது.

    வார்னரும், மார்கஸ் ஹாரிசும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்கோர் 89 ஆக இருந்தபோது தொடக்க ஜோடி பிரிந்தது. ஹாரிஸ் 38 ரன்னில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து லபுஷேன் களம் வந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே வார்னர் 48 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அப்போது ஸ்கோர் 91 ஆக இருந்தது. 3--வது விக்கெட்டுக்கு லபுஷேனுடன் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் ஜோடி சேர்ந்தார்.

    28-வது ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னை தொட்டது. முகமது சிராஜ் தனது அபாரமான பந்துவீச்சால் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
    31-வது ஓவரின் 3-வது பந்தில் லபுஷேனை வெளியேற்றினார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த அவர் தற்போது 25 ரன்களே எடுத்தார். அடுத்து வந்த மேத்யூ வேட் ரன் எதுவும் எடுக்காமல் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

    123 ரன்னில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு சுமித்துடன், கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து இருந்தது. சுமித் 28 ரன்னிலும், கிரீன் 4 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
    மதிய உணவு இடை வேளைக்குள் ஆஸ்திரேலியா மேலும் 128 ரன் எடுத்தது. 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

    மதிய உணவு இடை வேளைக்கு பிறகு 5-வது விக்கெட் ஜோடி தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுமித் 67 பந்தில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 77-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 31-வது அரை சதம் ஆகும்.
    முகமது சிராஜ்தான் இந்த ஜோடியையும் பிரித்தார். சுமித் 55 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 196 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் டிம்பெய்ன் களம் வந்தார். 56-வது ஓவரில் ஆஸ்திரேலியா 200 ரன்னை தொட்டது. 

    இதனையடுத்து கீரின் மற்றும் பெய்ன் தாகூர் பந்தில் வெளியேறினர். ஸ்டார்க் 1 லயன் 13 ஹசில்வுட் 9 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 328 ரன்கள் அடித்தால் வெற்றி பெரும்.

    இந்திய தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டும், தாகூர் 4 விக்கெட்டும் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 
    Next Story
    ×