என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.சந்திரசேகர்
    X
    பி.எஸ்.சந்திரசேகர்

    முன்னாள் சுழற்பந்து வீரர் பி.எஸ்.சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதி

    இந்திய கிரிக்கெட் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் பி.எஸ்.சந்திரசேகர் உடல்நல குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பெங்களூர்:

    இந்திய கிரிக்கெட் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் பி.எஸ்.சந்திரசேகர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர் உடல்நல குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவர் நலமுடன் இருப்பதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

    Next Story
    ×