என் மலர்
விளையாட்டு
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இன்று 2-வது T20 போட்டி தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள்:
இ்ந்தியா: லோகேஷ் ராகுல், இஷான் கிஷான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர்.
இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன் (கேப்டன்), சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், டாம் கர்ரன்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
அடுத்த ஆண்டு (2022) நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் அடுத்த ஆண்டு சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
2 புதிய அணிகளுக்கான ஏலம் மே மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி நிறைவை நெருங்கி கொண்டிருக்கும் போது இந்த ஏலம் நடைபெறும்.
ஐ.பி.எல். போட்டியில் 2 புதிய அணிகளுக்கான ஏலம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனை முடிவில் புதிய அணிகளுக்கான ஏலத்தை மே மாதத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு புதிய அணி ஒன்று தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. ஏனென்றால் அங்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் உள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணிகள் மூலம் அதன் உரிமையாளர்கள் கோடிக்கணக்கான வருவாயை பெறுகிறார்கள். இதனால் இந்த ஏலத்தில் புதிய அணிகளை வாங்க கடுமையான போட்டி இருக்கும்.
அதிகமான தொகையை ஏல டெண்டரில் குறிப்பிடும் முதல் 2 பேர் அணிகளின் உரிமையை பெறுவார்கள்.
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது இரு அணிகள் இடையே 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகளில் 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது. வருகிற 20-ந் தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிகிறது.
அதைத் தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. வருகிற 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் புனேயில் இந்த போட்டி நடக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி அல்லது ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராக வேண்டி இருப்பதால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு இல்லை.
இதன் காரணமாக பிரிதிவிஷா அல்லது படிக்கலுக்கு இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அவர்கள் அணிக்கு திரும்ப இன்னும் காத்திருக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில் 2-வது மாநில பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.
இந்த போட்டி ஜூன் மாதம் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடக்கிறது.
இந்த போட்டியில் சென்னை பிளையிங், கிரா விடி, கோவை கொம்பன்ஸ், மதுரை வீரன்ஸ், கரூர் ஸ்மார்சஸ், விழுப்புரம் பால்கன் பெதர்ஸ், மெரினா சூப்பர் கிங்ஸ், திருப்பூர் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து முன்னணி வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் வீரர்- வீராங்கனைகள் இடம்பெறுவதற்கான ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சுரேஷ் ரெய்னா பங்கேற்றார். அவர் இந்த போட்டியின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.
சர்வதேச பேட் மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா, நடிகை நிக்கி கல்ராணி, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் அருணாசலம், போட்டி அமைப்புக்குழு சேர்மன் சிவகுமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.






