என் மலர்
விளையாட்டு
சென்னை:
தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில் 2-வது மாநில பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.
இந்த போட்டி ஜூன் மாதம் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடக்கிறது.
இந்த போட்டியில் சென்னை பிளையிங், கிரா விடி, கோவை கொம்பன்ஸ், மதுரை வீரன்ஸ், கரூர் ஸ்மார்சஸ், விழுப்புரம் பால்கன் பெதர்ஸ், மெரினா சூப்பர் கிங்ஸ், திருப்பூர் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து முன்னணி வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டியில் ஒவ்வொரு அணியிலும் வீரர்- வீராங்கனைகள் இடம்பெறுவதற்கான ஏலம் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சுரேஷ் ரெய்னா பங்கேற்றார். அவர் இந்த போட்டியின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார்.
சர்வதேச பேட் மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா, நடிகை நிக்கி கல்ராணி, தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் அருணாசலம், போட்டி அமைப்புக்குழு சேர்மன் சிவகுமார் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஐந்து 20 ஓவர் தொடரில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் நாளை (14-ந் தேதி) நடக்கிறது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இந்த தோல்விக்கு நாளைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணியின் பேட்டிங் நேற்று சுத்தமாக எடுபடவில்லை. ஆடுகளத்தின் தன்மைக்கேற்றவாறு பேட்ஸ்மேன்களால் ஆட முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமே. 124 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது பரிதாபமே.
முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் இல்லாதது பேட்டிங்கில் பலவீனத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் நாளைய ஆட்டத்தில் அவர் இடம் பெறுவார்.
ரோகித்சர்மா இடம் பெறும்பட்சத்தில் தவான் அல்லது லோகேஷ் ராகுல் அணியில் இருந்து நீக்கப்படுவர். ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நாளைய போட்டிக்கான அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பந்துவீச்சில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு குறைவே.
முதல் போட்டியில் இந்தியாவை எளிதில் வீழ்த்தியதால் 2-வது ஆட்டத்திலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி உள்ளது.
இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், கேப்டன் மார்கன், பென்ஸ் ஸ்டோக், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் 15 முறை மோதி உள்ளனர். இதில் இந்தியா 7 ஆட்டத்திலும், இங்கிலாந்து 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
நாளைய 20 ஓவர் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
20 ஓவர் சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, சுழற்பந்து வீரர் யசுவேந்திர சாஹல் ஆகியோர் அதிக விக்கெட் கைப்பற்றி சம நிலையில் இருந்தனர். சாஹல் 45 ஆட்டத்திலும், பும்ரா 50 போட்டியிலும் தலா 59 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தில் இருந்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய 20 ஓவர் போட்டியில் சாஹல் 1 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் பும்ராவை முந்தி 60 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தை பிடித்து உள்ளர். அவர் 25 ரன் கொடுத்து 6 விக்கெட் கைபற்றியதே சிறந்த பந்துவீச்சாகும். திருமணம் செய்ய இருப்பதால் பும்ரா 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை. இதனால் சாஹலால் அவரை முந்த முடிந்தது.
அஸ்வின் 52 விக்கெட் கைப்பற்றி 3-வது இடத்திலும், புவனேஷ்வர்குமார் 41 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 39 விக்கெட் கைப்பற்றி 5-வது இடத்திலும் உள்ளனர். இதில் அஸ்வின் 20 ஓவர் போட்டிக்கான அணியில் ஓரம் கட்டப்பட்டு உள்ளார். டெஸ்டில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார்.
வெஸ்ட்இண்டீஸ்- இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா பொறுப்புடன் ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
விக்கெட் கீப்பர் சண்டிமால் 74 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் ஹசரங்கா அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 47 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் மொகமது 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லெவிசும், ஷாய் ஹோப்பும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் சேர்த்தது.
எவின் லெவிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 103 ரன்னில் வெளியேறினார். ஷாய் ஹோப் 84 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் விருது எவின் லெவிசுக்கு வழங்கப்பட்டது.
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் அரை சதம் அடித்து 72 ரன்னில் வெளியேறினார். ஹஷ்மத்துல்லா ஷஹிதியும், அஸ்கர் ஆப்கனும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.
அஸ்கர் ஆப்கன் 164 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஷஹிதி இரட்டை சதமடித்து அசத்தினார். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி 160 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் எடுத்து டிக்ளேர் செதனர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரின்ஸ் மாஸ்வேர் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். கெவின் கவுசா, முசகண்டா ஆகியோர் தலா 41 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
சிக்கந்தர் ரசா பொறுப்புடன் ஆடி 85 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் சபக்வா 33 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் பாலோ ஆன் பெற்ற அந்த அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.
மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அமீர் ஹம்சா 3 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.






