என் மலர்
விளையாட்டு
டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே மோசமாக அமைந்தது. தொடக்க வீரரான கேஎல் ராகுல் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்ட் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அடில் ரஷித் பந்து வீச்சில் வெளியேற, தவான் 4 ரிஷப் பந்த் 21 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்நிலையில் ஹர்த்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 36 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
ஸ்ரேயாஸ் அய்யரின் சிக்சர் மூலம் இந்திய அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை கடந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆர்ச்சர் பந்து வீச்சில் கேட்ச் முறையில் அவுட் ஆனார். அடுத்த ஆட்டக்காரராக அக்சர் படேல் வருவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். அவர் வந்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.
கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். அக்சர் படேல் 7 ரன்னிலும் சுந்தர் 3 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், அடில் ரஷித், ஜோர்டான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
சர்வதேச அளவில் 10,273 ரன்கள் அடித்து இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட் முதலிடத்தில் இருக்கிறார். இதனையடுத்து மித்தாலி ராஜ் இப்போது இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் 36 ரன்கள் எடுத்து மித்தாலி ராஜ் ஆட்டமிழந்தாலும், அவரின் 10 ஆயிரம் ரன் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மித்தாலி ராஜ் இதுவரை 75 அரை சதமும், 8 சதமும் விளாசியுள்ளார்.
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் அரை சதம் அடித்தார். அவர் 72 ரன்னில் வெளியேறினார். ஜாவித் அஹமதி 4 ரன்னிலும், ரஹமத் 24 ரன்னிலும் வெளியேறினர்,
அடுத்து இறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹிதியும், அஸ்கர் ஆப்கனும் பொறுப்புடன் ஆடினர். இருவரும் சதமடித்து அசத்தினர்.
அஸ்கர் ஆப்கன் 164 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஷஹிதி இரட்டை சதமடித்து அசத்தினார்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி 160 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் எடுத்து டிக்ளேர் செதனர்.
தொடர்ந்து ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், டெல்லி பாலம் ‘ஏ’ ஸ்டேடியத்தில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி, நடப்பு சாம்பியன் கர்நாடகாவை எதிர்கொண்டது.
இதில் முதலில் ‘பேட்’ செய்த மும்பை 49.2 ஓவர்களில் 322 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. தொடக்க ஆட்டக்காரரும், பொறுப்பு கேப்டனுமான பிரித்வி ஷா 122 பந்துகளில் 17 பவுண்டரி, 7 சிக்சருடன் 165 ரன்கள் விளாசினார். இதன் மூலம் விஜய் ஹசாரே போட்டியில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை 21 வயதான பிரித்வி ஷா படைத்தார். இந்த சீசனில் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர் 4 சதம் உள்பட 754 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டில் கர்நாடக அணி வீரர் மயங்க் அகர்வால் 8 ஆட்டங்களில் விளையாடி 3 சதம் உள்பட 723 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரித்வி ஷா நேற்று தகர்த்தார்.
பின்னர் 323 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கர்நாடக அணி 42.4 ஓவர்களில் 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் மும்பை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்து சாதனை படைத்து இருந்த கர்நாடக தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் இந்த ஆட்டத்தில் 64 ரன்னில் ‘கிளீன் போல்டு’ ஆனார். அவர் இந்த ஆட்டத்திலும் சதம் அடித்து இருந்தால் ‘லிஸ்ட் ஏ’ வகை போட்டியில் தொடர்ச்சியாக அதிக சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்து இருப்பார். அந்த அரிய வாய்ப்பை அவர் கோட்டை விட்டார்.
டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு அரைஇறுதியில் உத்தரபிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. வருகிற 14-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை-உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றன.
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகளும் உலகின் மிகப் பெரிய மைதானமான அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
வீராட்கோலி தலைமையிலான அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணி ஆஸ்திரேலிய பயணத்தில் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக ஆடிய 2 தொடரையும் வென்று இருந்தது. இதனால் அந்த அணியை இந்தியா நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

தொடர்ச்சியாக 3 டெஸ்டில் வெற்றி பெற்றிருந்ததால் வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.
நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் வீராட் கோலிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடாத ரோகித் சர்மா, ரிஷப்பண்ட் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இருவரும் சமீபத்தில் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரிஷப்பண்ட் தேர்வு தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. இதனால் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களம் இறங்குவதில் தவான்- லோகேஷ் ராகுல் இடையே போட்டி நிலவுகிறது.
ரிஷப்பண்ட் மிடில் ஆர்டரில் ஆடுவார். இதனால் ராகுல் தொடக்க வரிசையில்தான் ஆட இயலும். தவானுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் அவர் இடம்பெறுவது சந்தேகமே.
ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் 4-வது வரிசையில் இடம்பெறலாம்.
சூர்யகுமார் யாதவ் சர்வதேச போட்டியில் அறிமுகமானால் ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பெற மாட்டார்.
வேகப்பந்து வீரர் புவனேஸ்வர் குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் முத்திரை பதிக்கக் கூடியவர்கள். இதில் இருவருக்குத்தான் வாய்ப்பு உள்ளது.
புவனேஸ்வர் குமார் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தீபக் சாகர், ஷர்துல் தாகூர் ஆகியோரில் ஒருவர்தான் தேர்வு பெற முடியும். ஹர்த்திக் பாண்ட்யா ஆல் ரவுண்டர் வரிசையில் இடம்பெறுவார்.
சுழற்பந்து வீரர்களில் யசுவேந்திர சாகல் முதன்மை யாக இடம்பெறுவார். வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல் ஆகியோரில் ஒருவர் தேர்வு பெறுவார்.
இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது. மார்கன் தலைமையிலான அந்த அணி 20 ஓவர் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணியின் சிறந்த அதிரடி பேட்ஸ் மேன்கள் உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும் என்பதால் 20 ஓவர் தொடர் விறுவிறுப்பாக இருக்கும்.
இரு அணிகளும் 14 ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றி வரலாறு படைத்தார். அடுத்து ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் களம் காண தன்னை தயார்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் மேரிகோம் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எனது கடைசி ஒலிம்பிக். வயது இங்கு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இப்போதே எனக்கு 38 வயதாகி விட்டது. அதன் பிறகு அடுத்த ஒலிம்பிக்குக்கு மேலும் 4 ஆண்டுகள் என்பது நீண்ட காலமாகும். தொடர்ந்து விளையாடி 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் நான் பங்கேற்க விரும்பினாலும் கூட நிச்சயம் என்னை அனுமதிக்க (ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு 40) மாட்டார்கள்.
20 ஆண்டுகளாக குத்துச்சண்டை களத்தில் இருக்கிறேன். ஒலிம்பியன் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை இல்லாததால் வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியது இருந்தது. ஒரு வழியாக 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டை பிரிவு சேர்க்கப்பட்டது. அதில் பங்கேற்று சாதித்து காட்டினேன். ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றது எனது வாழ்க்கையை மாற்றி விட்டது. இந்த வெற்றி நிறைய இளம் வீராங்கனைகள் குத்துச்சண்டை விளையாட்டை தேர்வு செய்வதற்கு உந்துசக்தியாக இருந்தது. ஒலிம்பிக்கில் நான் பங்கேற்காமல் இருந்திருந்தால் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக எனது விளையாட்டு வாழ்க்கையின் மதிப்பு குறைந்திருக்கும்’ என்றார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். ஆன்லைன் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.
தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தாமஸ் பேச், கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23-ந்தேதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் கடைசி நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) 25-20, 15-25, 25-20, 14-25, 15-12 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம். அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 23-25, 25-22, 25-21, 13-25, 16-14 என்ற செட் கணக்கில் போராடி ஐ.சி.எப். அணியை சாய்த்தது. 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்த ஐ.ஓ.பி. ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது. 7 வெற்றி, 2 தோல்வி கண்ட இந்தியன் வங்கி 2-வது இடத்தை பிடித்தது. சுங்க இலாகா, எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ் அணிகள் தலா 6 வெற்றி, 3 தோல்வியுடன் சமநிலை வகித்தாலும், புள்ளிகள் அடிப்படையில் சுங்க இலாகா 3-வது இடத்தை தனதாக்கியது. எஸ்.ஆர்.எம். அணிக்கு 4-வது இடம் கிட்டியது.
பரிசளிப்பு விழாவுக்கு ஸ்ரீ பாலாஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் ஜெ.ஸ்ரீ நிஷா தலைமை தாங்கி பட்டம் வென்ற ஐ.ஓ.பி. அணிக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசை வழங்கினார். அடுத்த 3 இடங்களை பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வீதம் பரிசாக அளிக்கப்பட்டது. வருமான வரி கூடுதல் கமிஷனர்கள் எஸ்.பாண்டியன், ஏ.சசிகுமார், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, துணைத் தலைவர் ஆர்.வி.எம்.ஏ. ராஜா, ‘காஸ்கோ’ மண்டல அதிகாரி முகமது ஹசன், செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகேசவன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
20 ஓவர் போட்டி அணிக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-3 என்ற கணக்கில் பறிகொடுத்த ஆஸ்திரேலியா தரவரிசையில் ஒரு இடம் (267 புள்ளி) சரிந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் 3-ல் இருந்த இந்தியா (268 புள்ளி) 2-வது இடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் 260 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூசிலாந்து 253 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது 20 ஓவர் போட்டி ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது. இந்த தொடரை இந்திய அணி 5-0 அல்லது 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேற முடியும். அதே சமயம் இங்கிலாந்து அணி முதலிடத்தை தக்கவைக்க குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வசப்படுத்திய இந்திய அணி அதன் மூலம் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது போல் 20 ஓவர் போட்டியிலும் முத்திரை பதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
20 ஓவர் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் (915 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். நியூசிலாந்து தொடரில் இரண்டு அரைசதம் விளாசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் (830 புள்ளி) இரு இடம் உயர்ந்து 2-வது இடத்துக்கு வந்துள்ளார். இதனால் 2-ல் இருந்த இந்தியாவின் லோகேஷ் ராகுல் (816 புள்ளி) 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் துஸ்சென் 5-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 14-வது இடம் வகிக்கிறார். இங்கிலாந்து தொடரில் ரன்வேட்டை நடத்தினால் இந்திய வீரர்கள் தரவரிசையில் கணிசமாக முன்னேறலாம்.
20 ஓவர் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-10 இடத்தில் எந்த இந்தியர்களும் இடம் பெறவில்லை. இந்திய தரப்பில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 13-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தர் அசத்தினால் டாப்-10 இடத்திற்குள் நுழையலாம்.






