என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைப்பந்து லீக்"

    ஐ.பி.எல். பாணியில் 6 அணிகள் பங்கேற்கும் கைப்பந்து லீக் போட்டி செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    ஐ.பி.எல். பாணியில் 6 அணிகள் பங்கேற்கும் கைப்பந்து லீக் போட்டியை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புரோ கைப்பந்து லீக் போட்டியின் தலைமை செயல் அதிகாரி ஜாய் பட்டாச்சார்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘முதலாவது கைப்பந்து லீக் போட்டியில் 6 அணிகள் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஒருவர் 2 நகரை மையமாக கொண்டு அணியை நடத்த விண்ணப்பம் தாக்கல் செய்யலாம். அதில் இருந்து ஒரு இடம் இறுதி செய்யப்படும். அணியை வாங்குவதற்கான விண்ணப்ப பத்திரம் நாளை (இன்று) முதல் வினியோகம் செய்யப்படும். ஜூலை மாதம் வீரர்கள் ஏலம் நடைபெறும். தெற்கு மற்றும் வட மாநிலத்தின் ஒரு இடத்தில் போட்டி நடைபெறும்.

    இந்த போட்டியில் 18 ஆட்டங்கள் இடம் பெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பின்பாதியில் போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் இந்த போட்டியை நடத்த முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
    ×