என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஷர்துல் தாகூர் 3.2 ஓவரில் 36 ரன்களும், சாஹல் 4 ஓவரில் 41 ரன்களும் விட்டுக்கொடுக்க, பட்லர் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் விளாச இந்தியா 3-வது டி20 போட்டியில் தோல்வியை சந்தித்தது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார்.

    கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 15 ரன்னிலும், இஷான் கிஷன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 24 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. துரதிருஷ்டவசமாக ரிஷப் பண்ட் 20 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது இந்தியா 11.1 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 17-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 37 பந்தில் அரைசதம் அடித்தார்.

    18-வது ஓவரை மார்க் வுட் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கும், 4-வது பந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்சருக்கும் விளாசினார் விராட் கோலி. இந்த ஓவரில் இந்தியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

    கடைசி ஓவரை ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைக்க இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 15 பந்தில் 17 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 46 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியில் மார்க்வுட் 3 விக்கெட்டும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜேசன் ராய் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலான் களம் இறங்கினர். மலான் நிதானமாக விளையாட ஜோஸ் பட்லர் ருத்ரதாண்டவம் ஆடினார். 26 பந்தில் அரைசதம் அடித்தார். 3-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

    இங்கிலாந்து அணி 18.2 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பட்லர் 52 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்தும், பேர்ஸ்டோவ் 28 பந்தில் 5 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்திய அணி சார்பில் சாஹல் 4 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். புவேனேஷ்வர் குமார் 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் 3.2 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 3 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் சாய்த்தார்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளது.
    ரோகித் சர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் அய்யர் ஏமாற்றம் அளிக்க விராட் கோலி அபாராக விளையாடி அரைசதம் விளாசினார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார்.

    கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 15 ரன்னிலும், இஷான் கிஷன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 24 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. துரதிருஷ்டவசமாக ரிஷப் பண்ட் 20 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது இந்தியா 11.1 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 9 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 17-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 37 பந்தில் அரைசதம் அடித்தார்.

    18-வது ஓவரை மார்க் வுட் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கும், 4-வது பந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்சருக்கும் விளாசினார் விராட் கோலி. இந்த ஓவரில் இந்தியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

    கடைசி ஓவரை ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைக்க இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது. ஹர்திக் பாண்ட்யா 15 பந்தில் 17 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 46 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியில் மார்க்வுட் 3 விக்கெட்டும், கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    முதலில் பந்து வீச விரும்பினோம். எதிர்காலத்திற்கு தயாராகும் வகையில் சிறந்த இலக்கை நிர்ணயிக்க விரும்புவோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று 3-வது போட்டி நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷன், விராடா் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், பட்லர், தாவித் மலான், பேர்ஸ்டோவ், மோர்கன், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஆர்ச்சர், ரஷித், மார்க் வுட் இடம் பிடித்துள்ளனர்.
    2019-ம் ஆண்டு நடைபெற்று டி20 உலககோப்பை தகுதிச் சுற்றின்போது மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட முயன்றதாக ஐக்கியர அரபு அமீரகம் அணி வீரர்கள் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    ஐக்கிய அரபு அமீரகம் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான முகமது நவீத் (வயது 33), மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷைமான் அன்வர் ஆகியோர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தகுதிச்சுற்றுத் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து ஐசிசி ஊழல் தடுப்புக்குழு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இருவருக்கு தலா 8 ஆண்டுகள் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

    நவ்தீப் 39 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 42 வயதாகும் ஷைமான் அன்வர் பட் 40 ஒருநாள் மற்றும் 32 டிடி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    தனது சாதனையை முறியடித்த ரொனால்டோவுக்கு பீலே வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

    துரின்:

    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர், இத்தாலியில் உள்ள ஜுவன்டஸ் கிளப்புக்காக தற்போது விளையாடி வருகிறார்.

    இத்தாலி கிளப் கால்பந்து போட்டி ஒன்றில் ஜுவான்டஸ்- காக்லியானி அணிகள் மோதின. இதில் ஜுவான்டஸ் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் ரொனால்டோ 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வ போட்டிகளில் ஜாம்பவன் பீலே (பிரேசில்) சாதனையை முறியடித்தார்.

    இந்த 3 கோல்கள் மூலம் ரொனால்டோ 770 கோல்களை தொட்டார். அவர் பீலேவை முந்தினார். இந்த போட்டிக்கு முன்பு ரொனால்டோ அவரை சமன் செய்து இருந்தார். தற்போது பீலேவை முந்தி சாதனை படைத்துள்ளார்.

    ரொனால்டோ கிளப் போட்டிகளில் 668 கோல்களும், போர்ச்சுக்கல் அணிக்காக 102 கோல்களும் அடித்துள்ளார். கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட்டுக்காக 450 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக 118 கோல்களும், ஜுவான்டஸ் கிளப்புக்காக 96 கோல்களும், ஸ்போர்ட்டின் லிஸ்பன் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.

    தனது சாதனையை முறியடித்த ரொனால் டோவுக்கு பீலே வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
    அகமதாபாத்: 

    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டத்தில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது.

    முதலாவது ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 124 ரன்களுக்கு இந்தியாவை கட்டுப்படுத்தியதுடன் எளிதில் வெற்றியை தனதாக்கியது. இதேபோல் 2-வது ஆட்டத்தில் 165 ரன் இலக்கை இந்தியா சிரமமின்றி விரட்டி பிடித்தது.

    அறிமுக வீரராக களம் கண்ட இளம் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து அணியின் நெருக்கடியை வெகுவாக குறைத்ததுடன், வெற்றியை நோக்கி வீறுநடை போடவும் வழிவகுத்தார். முதல் ஆட்டத்தில் ‘டக்-அவுட்’ ஆகி அதிர்ச்சி அளித்த கேப்டன் விராட்கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன், கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    கடந்த ஆட்டத்தில் அச்சமின்றி அதிரடி காட்டி கலக்கிய இஷான் கிஷன் அணியில் இடத்தை தக்க வைத்து கொள்வார். அதேபோல் புதிதாக இடம் பெற்று பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத சூர்யகுமார் யாதவும் நீடிப்பார். ஆனால் முதல் 2 ஆட்டங்களில் (1, 0) சோபிக்காத தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கழற்றி விடப்படக்கூடும். அவருக்கு பதிலாக முதல் 2 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா களம் திரும்புவார் என்று தெரிகிறது.

    இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் அதிரடிக்கு பெயர் போன பேட்ஸ்மேன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சிறந்த பவுலர்களும் உள்ளனர். குதிங் காலில் ஏற்பட்ட காயத்தால் கடந்த ஆட்டத்தில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்த ஆட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது அந்த அணியின் பந்து வீச்சுக்கு மேலும் வலுசேர்க்கும். மார்க் வுட் களம் இறங்கும் பட்சத்தில் கிறிஸ் ஜோர்டானுக்கு கல்தா கொடுக்கப்படும்.

    முதல் 2 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி வாகை சூடி இருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் டாம் கர்ரனுக்கு இடம் கிடைப்பது கடினம் தான்.

    முந்தைய ஆட்டத்தில் தங்களது அதிரடி பேட்டிங் வியூகத்துக்கு நல்ல பலன் கிடைத்ததால் இந்த ஆட்டத்திலும் அதனை தொடருவதுடன், தொடரில் முன்னிலை பெற இந்திய அணி முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்தி வெற்றிப்பாதைக்கு திரும்ப நம்பர் ஒன் அணியான இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும் எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 8 வெற்றி கண்டுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா அல்லது லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், விராட்கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 
    இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
    அகமதாபாத்:

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் என அனைத்து விதமான தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் அபாரமாக தொடரை கைப்பற்றியது.

    தற்போது 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகிக்கிறது.

    இந்நிலையில், மீதமுள்ள 3 போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என குஜராத் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக குஜராத் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள 3 போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்த போட்டிகளைக் கான் டிக்கெட் வாங்கியவர்களின் கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    புனேயில் நடைபெற உள்ள 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டார்.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொள்வதாக, பிசிசியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

    அதன் பிறகு, டி 20 தொடரிலும் பும்ரா இடம்பெறாமல் போன நிலையில், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது. முதலில், மலையாள நடிகை அனுபமாவை திருமணம் செய்வதாக வதந்தி பரவிய நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மார்ச் 15 ஆம் தேதியன்று, கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது.

    இதனிடையே, சஞ்சனா கணேசன் செய்திருந்த சில பழைய ட்வீட்களும் வைரலாகியிருந்தது. இந்நிலையில், சஞ்சனா கணேசனை இன்று பும்ரா திருமணம் செய்துள்ள நிலையில், திருமண புகைப்படங்கள் சிலவற்றை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்திய வீரர் பும்ராவிற்கு, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    பும்ரா திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்படும் 28 வயதான சஞ்சனா கணேசன் ஒரு தமிழ்ப் பெண். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். ஆனால், தற்போது இருப்பது எல்லாம் மகாராஷ்டிராவின் புனேவில்தான். விளையாட்டு தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார்.
    7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது.

    அகமதாபாத்:

    2-வது 20 ஓவர் போட்டி யில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுத்தது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 165 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 35 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மார்கன் 28 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர், ‌ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 13 பந்து எஞ்சியிருந்த நிலையில் வெற்றி பெற்றது. 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது.

    கேப்டன் விராட் கோலி 49 பந்தில் 73 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), இஷான் கி‌ஷன் 32 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    தொடக்கத்திலேயே ரன் எதுவும் இல்லாத நிலையில் முதல் விக்கெட் விழுந்தது. இதனால் 3-வது வீரராக களம் இறங்கிய நான் என்ன செய்ய வேண்டும் என்று முயற்சித்தேன்.

    ஆனால் மறுமுனையில் இருந்த இஷான் கிஷான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடினார். அவர் ஆட்டத்தின் தன்மையை மாற்றினார். எதிரணியிடம் இருந்து போட்டியை முற்றிலும் மாற்றி இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை கொண்டு வந்தார். எங்களது பார்ட்னர்ஷிப் (52 பந்தில் 94 ரன்) முக்கிய பங்கு வகித்தது.

    தனது அறிமுக போட்டியிலேயே இஷான் கிஷான் தனது திறமையை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல். போட்டியில் அவர் திறமையான பந்து வீச்சை எதிர்கொண்டு அபாரமாக ஆடி இருந்தார். தற்போது சர்வதேச அளவில் வேகப் பந்து வீச்சில் அற்புதமாக சிக்சர்களை அடித்தார்.

    அவர் ஒரு பயமில்லாத வீரராக காட்சி அளிக்கிறார். அவர் தொடர்ந்து இதேமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    இங்கிலாந்து அணி 12 ஓவரில் 120 ரன்னை தொட்டது. இதனால் மிகப்பெரிய ரன்னை குவிக்க வேண்டும் என்று கருதினேன். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

    வாஷிங்டன் சுந்தர் பெயரை இங்கு கண்டிப்பாக குறிப்பிட்டு ஆக வேண்டும். அவர் அபாரமாக வீசினார். பந்து வீச்சில் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர்.

    பேட்டிங்கும், பந்து வீச்சும் நன்றாக இருந்தது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் மார்கன் கூறும்போது, “மெதுவான இந்த ஆடுகளத்தில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. இந்திய அணியின் புதுமுக வீரர் இஷான் கிஷான் அபாரமாக ஆடி எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டார்” என்றார்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

    விராட் கோலி 3 ஆயிரம் ரன்களை எட்ட 72 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
    ஆமதாபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்பொழுது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  இதில், நேற்று நடந்த 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

    கோலி 3 ஆயிரம் ரன்களை எட்ட 72 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.  இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    கோலி மொத்தம் 87 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3,001 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

    அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் மார்டின் குப்தில் 2வது இடத்தில் உள்ளார்.  அவர் 99 போட்டிகளில் கலந்து கொண்டு 2,839 ரன்களை சேர்த்துள்ளார்.  3வது இடத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா உள்ளார்.  அவர், 108 போட்டிகளில் பங்கேற்று 2,773 ரன்களை குவித்துள்ளார்.

    கோலியின் ஆட்டம் தவிர்த்து அறிமுக போட்டியில் விளையாடிய இந்திய அணியின் இஷான் கிஷான் அரை சதம் (56 ரன்கள்) அடித்தது வெற்றியை எட்டி பிடிக்க உதவியது.  இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளி கணக்கில் தொடரில் சமன் பெற்றுள்ளது.  3வது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெற உள்ளது.
    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    புதுடெல்லி:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மகுடத்துக்காக உத்தரபிரதேசம்-மும்பை அணிகள் மல்லுகட்டின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி 4 விக்கெட்டுக்கு 312 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் மாதவ் கவுஷிக் 158 ரன்கள் (156 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் 313 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட மும்பை பேட்ஸ்மேன்கள், உத்தரபிரதேச பந்து வீச்சாளர்களுக்கு பதிலடி கொடுத்தனர். பொறுப்பு கேப்டன் பிரித்வி ஷா 73 ரன்கள் (39 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அட்டகாசமான தொடக்கம் தந்தார். இதன் பிறகு விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே நிலைத்து நின்று வெற்றியை உறுதி செய்தார்.

    மும்பை அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்து கோப்பையை வசப்படுத்தியது. ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை எட்டிய ஆதித்ய தாரே 118 ரன்களுடன் (107 பந்து, 18 பவுண்டரி) களத்தில் இருந்தார். மும்பை அணி கோப்பையை உச்சிமுகர்வது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2003-04, 2006-07, 2018 ஆகிய ஆண்டுகளிலும் கோப்பையை வென்று இருந்தது.

    மும்பை பொறுப்பு கேப்டன் 21 வயதான பிரித்வி ஷா இந்த தொடரில் 8 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 827 ரன்கள் திரட்டியுள்ளார். விஜய் ஹசாரே போட்டியில் ஒரு சீசனில் 800 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார். ‘இந்த தொடரில் எங்களது அணியில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். தனிப்பட்ட நபரின் சாதனையால் மட்டும் வெற்றி கிட்டவில்லை. அணியின் உதவியாளர்கள், வீரர்கள் அனைவருக்கும் இந்த கோப்பை உரித்தானது’ என்று பிரித்வி ஷா கூறினார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 2வது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 365 ரன்னில் ஆல் அவுட்டானது.
    அபுதாபி:

    ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்றது.
     
    டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் அரை சதம் அடித்து 72 ரன்னில் வெளியேறினார். ஹஷ்மத்துல்லா ஷஹிதியும், அஸ்கர் ஆப்கனும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். அஸ்கர் ஆப்கன் 164 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஷஹிதி இரட்டை சதமடித்து அசத்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 160 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் எடுத்து டிக்ளேர் செதனர்.  

    அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பிரின்ஸ் மாஸ்வேர் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். கெவின் கவுசா, முசகண்டா ஆகியோர் தலா 41 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிக்கந்தர் ரசா பொறுப்புடன் ஆடி 85 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் சபக்வா 33 ரன்கள் எடுத்தார்.

    பாலோ ஆன் பெற்ற ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் கேப்டன் சீன் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். இவர் 8வது விக்கெட்டுக்கு டிரிபானோவுடன் ஜோடி சேர்ந்து 187 ரன்கள் சேர்த்தார். டிரிபானோ 95 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 365 ரன்னில் ஆட்டமிழந்தது. சீன் வில்லியம்ஸ் 151 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
     
    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 7 விக்கெட்டு வீழ்த்தினார்.

    இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. 26.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஹ்மத் ஷா அரை சதமடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 29 ரன்னில் வெளியேறினார்.

    ஆட்ட நாயகன் விருது ஹஷ்மத்துல்லா ஷஹிதிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது சீன் வில்லியம்சுக்கு வழங்கப்பட்டது.
    ×