என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி
    X
    இந்திய அணி

    3-வது டி20 கிரிக்கெட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- ரோகித் சர்மாவுக்கு இடம்

    முதலில் பந்து வீச விரும்பினோம். எதிர்காலத்திற்கு தயாராகும் வகையில் சிறந்த இலக்கை நிர்ணயிக்க விரும்புவோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று 3-வது போட்டி நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், இஷான் கிஷன், விராடா் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், பட்லர், தாவித் மலான், பேர்ஸ்டோவ், மோர்கன், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஆர்ச்சர், ரஷித், மார்க் வுட் இடம் பிடித்துள்ளனர்.
    Next Story
    ×