என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjana Ganesan"

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • இந்த போட்டியில் அங்கத் பும்ரா அமைதியாக இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இப்போட்டியை பும்ராவின் மனைவி சஞ்சனா மற்றும் அவரது மகன் அங்கத் பும்ரா ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.

    இந்நிலையில், இந்த போட்டியில் அங்கத் பும்ரா அமைதியாக இருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஏன் அங்கத் சிறிது சந்தோசமாக இல்லமால் அமைதியாக இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

    இதனையடுத்து, நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு பும்ரா மனைவி சஞ்சனா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "என் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. ஆன்லைனில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர். Trauma, Depression போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. எங்களின் மகனை பற்றியும், வாழ்க்கையை பற்றியும் உங்களுக்கு ஒன்றும் தெரியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    • 2021-ம் ஆண்டு பும்ரா- சஞ்சனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளரும் மாடலுமான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2021-ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    அதன்பின் குழந்தையுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் பும்ரா அவ்வப்போது வெளியிட்டு வந்தார். ஆனால் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகளவில் பதிவிடவில்லை.

    இந்நிலையில் பும்ரா - சஞ்சனா கணேசன் ஜோடி இணைந்து காதலர் தினத்தை முன்னிட்டு விளம்பர வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் அண்ணியின் உடல் கொஞ்சம் குண்டாக உள்ளது என்று உருவக் கேலி செய்தார்.

     

    அந்த கமெண்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சனா கணேசன், "உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால் ஒரு பெண்ணின் உடல் வடிவம் பற்றி இங்கு கருத்து கூறுகிறாய்.. ஒழுங்காக இங்கிருந்து ஓடிவிடு" என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

    2014-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட சஞ்சனா கணேசன் இறுதிச்சுற்று வரை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×