என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷான்
    X
    சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷான்

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டி: சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷானுக்கு இடம்

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இன்று 2-வது T20 போட்டி தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள்:

    இ்ந்தியா: லோகேஷ் ராகுல், இஷான் கிஷான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர்.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன் (கேப்டன்), சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், டாம் கர்ரன்.


    Next Story
    ×