search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    2022 போட்டியில் 10 அணிகள் - 2 ஐ.பி.எல். அணிகள் ஏலம் மே மாதம் நடக்கிறது

    அடுத்த ஆண்டு (2022) நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் அடுத்த ஆண்டு சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    அடுத்த ஆண்டு (2022) நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் அடுத்த ஆண்டு சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

    2 புதிய அணிகளுக்கான ஏலம் மே மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி நிறைவை நெருங்கி கொண்டிருக்கும் போது இந்த ஏலம் நடைபெறும்.

    ஐ.பி.எல். போட்டியில் 2 புதிய அணிகளுக்கான ஏலம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனை முடிவில் புதிய அணிகளுக்கான ஏலத்தை மே மாதத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு புதிய அணி ஒன்று தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. ஏனென்றால் அங்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணிகள் மூலம் அதன் உரிமையாளர்கள் கோடிக்கணக்கான வருவாயை பெறுகிறார்கள். இதனால் இந்த ஏலத்தில் புதிய அணிகளை வாங்க கடுமையான போட்டி இருக்கும்.

    அதிகமான தொகையை ஏல டெண்டரில் குறிப்பிடும் முதல் 2 பேர் அணிகளின் உரிமையை பெறுவார்கள்.

    Next Story
    ×