என் மலர்
செய்திகள்

இங்கிலாந்து எதிரான ஒருநாள் தொடர் - இந்திய அணி இன்று அறிவிப்பு
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது இரு அணிகள் இடையே 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகளில் 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது. வருகிற 20-ந் தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிகிறது.
அதைத் தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. வருகிற 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் புனேயில் இந்த போட்டி நடக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி அல்லது ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று கருதப்பட்டது. ஆனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராக வேண்டி இருப்பதால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு இல்லை.
இதன் காரணமாக பிரிதிவிஷா அல்லது படிக்கலுக்கு இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அவர்கள் அணிக்கு திரும்ப இன்னும் காத்திருக்க வேண்டும்.






