என் மலர்
செய்திகள்

பென் ஸ்டோக்ஸ் -சாம் கர்ரன்
2-வது 20 ஓவர் போட்டி: இந்திய அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
இந்திய அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்தது.
அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று 2-வது 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே புவனேஸ்வர் குமார் 1 விக்கெட் வீழ்த்தினார். அவர் வீசிய 3-வது பந்தில் பட்லரை டக் அவுட் முறையில் வீழ்த்தினார். பின்னர் டேவிட் மலான் ராய் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை சாஹால் பிரித்தார். டேவிட் மலான் 23 பந்தில் 24 ரன்கள் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் பவர்பிளேயில் எந்த விக்கெட்டும் எடுக்காத வாஷிங்டன் சுந்தர் 11-வது ஓவரில் ராய் விக்கெட்டையும் 13-வது ஓவரில் பேர்ஸ்டோ விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அதிரடியா விளையாடி 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேத் ஓவரில் புவனேஸ்வர் குமாரும் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Next Story






