என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

    இதில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இரண்டு வருடங்களில் டெஸ்டில் தலைசிறந்த அணியாக கருதப்படும். 

    இங்கிலாந்து சூழ்நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதேவேளையில் இந்தியாவும் சரியான வகையில் தயாராகும் என்பதில் சந்தேகமில்லை.

    நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    இதில் நீல் வாக்னர், இந்தியாவுக்கு எதிராக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை இறுதி போட்டியை போன்றது என்று தெரிவித்துள்ளார்.

    நீல் வாக்னர்

    இதுகுறித்து நீல் வாக்னர் கூறுகையில் ‘‘இது எனக்கு உலகக்கோப்பை இறுதிப் போன்று போன்றது. நியூசிலாந்து அணிக்காக இதுவரை நான் ஒருநாள் அல்லது டி20 கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம். இனிமேல் ஒயிட் பால் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.  உலகக்கோப்பை இறுதிப் போட்டி போன்று, முழு உத்வேகத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாட வேண்டும் என்பதில்தான் கவனம்.

    டெஸ்ட் கிரிக்கெட் கடினமானது. உலகின் பல்வேறு பகுதியில் விளையாடுவது எளிதானது அல்ல. மிகவும் சவாலானது. கடினமான சூழ்நிலையில் உங்களுடைய திறமை மற்றும் சிறந்த வீரருக்கு எதிராக திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை நீங்கள் பெற முடியும்’’ என்றார்.
    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வலுவான அணியை களம் இறக்க வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விரும்புகிறது.
    வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் இலங்கைக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் தொடரை புறக்கணித்து விட்டு, ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினார். வங்காளதேச கிரிக்கெட் போர்டும் தடையில்லா சான்றிதழ் வழங்கியது.

    ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் போட்டி நடைபெறுகிறது. ஜமைக்கா தல்லாவாஸ் அணி ஷாகிப் அல் ஹசனை ஒப்பந்தம் செய்துள்ளது.

    ஆனால் ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியா அணி வங்காளதேசம் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.

    மூன்று நட்சத்திர அணிகளுக்கு எதிராக வலுவான அணியை களம் இறக்க வங்காளதேசம் விரும்புகிறது. இதனால்  ஷாகிப் அல் ஹசனுக்கு கரீபியர் பிரிமீயர் லீக்கில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

    ‘‘இதுகுறித்து நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும்போது, அதுகுறித்து முடிவு எடுப்போம்’’ என வங்காளதேச கிரிக்கெட் போர்டின் கிரிக்கெட் செயல்பாடு தலைவர் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.
    லண்டனில் உள்ள செல்சியா கிளப் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றி உள்ளது.

    போர்ட்டோ:

    2020-2021 ம் ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாடின.

    இதன் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தில் உள்ள செல்சியா, மான்செஸ்டர் சிட்டி அணிகள் தகுதி பெற்று இருந்தன. செல்சியா அணி ரியல் மாட்ரீட் அணியையும், மான்செஸ்டர் சிட்டி பி.எஸ். ஜி. அணியையும் தோற்கடித்து இருந்தன.

    செல்சியா-மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள போர்ட்டோ நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்தது.

    இதில் செல்சியா 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    முதல் பாதி ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த போது செல்சியா கோல் அடித்தது. அந்த அணிக்காக ஹைஹவெர்ட்ஸ் 42-வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார். முதல் பாதி முடியும் போது செல்சியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    2-வது பாதி ஆட்டத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்ய மான்செஸ்டர் சிட்டி அணி கடுமையாக போராடியது. ஆனால் முடியவில்லை. இதேபோல செல்சியா அணியாலும் மேலும் கோல் போட முடியவில்லை. இறுதியில் செல்சியா 1-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

    லண்டனில் உள்ள செல்சியா கிளப் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு அந்த அணி வெற்றிபெற்று இருந்தது.

    சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் செல்சியா 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பெற்றது.

    ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    மும்பை:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி உள்ளன. ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை இந்த போட்டியை நடத்திவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

    இந்தநிலையில் ஐ.பி.எல் எஞ்சிய ஆட்டங்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    பி.சி.சி.ஐ.யின் அவசர செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    இந்தநிலையில் ஐ.பி.எல் எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது ஏன்? என்பது குறித்து பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:-

    செப்டம்பர், அக்டோபரில் இந்தியாவில் பருவமழை காலம் ஆகும். அப்போது ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்துவது உகந்ததாக இருக்காது. இதன் காரணமாகத்தான் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வைரசின் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபி, சார்ஜா, துபாய் ஆகிய இடங்களில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடத்தப்பட்டது.

    இதில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்பதற்கு 2 காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    இதுவரை 6 இருபது ஓவர் உலக கோப்பை நடந்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் (2012,2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014), தலா ஒரு தடவையும் 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றின.

    ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு அந்நாட்டில் இந்த போட்டி நடக்கிறது.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான 9 இடங்கள் குறித்து கிரிக்கெட் வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுசிலிடம் (ஐ.சி.சி.) பரிந்துரை செய்து இருந்தது.

    டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, லக்னோ, தர்மசாலா, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இறுதிப்போட்டியை நவம்பர் 14-ந்தேதி அகமதாபாத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்ய வேண்டும் என்று ஐ.சி.சி. கேட்டுக்கொண்டது.

    இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து மேலும் ஒரு மாத காலத்துக்கு ஐ.சி.சி.யிடம் அவகாசம் கேட்பது என்று நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பையை பொறுத்த வரை ஐ.சி.சி.யிடம் அவகாசம் கேட்டு பின்னர் முடிவு செய்வோம். தற்போதைய சூழலில் பாதுகாப்பான இடத்தில் வைத்துதான் கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளோம். வரும் நாட்களில் சூழல் எப்படி மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    ஐ.சி.சி.யிடம் அவகாசம் கேட்டு அதற்கேற்ப முடிவு செய்வோம் என்பதை மட்டும் தான் தற்போது கூற முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஐ.சி.சி. கூட்டம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்கப்படும். இதில் பங்கேற்கும் கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி இதை வலியுறுத்துவார்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்பதற்கு 2 காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கொரோனா பாதிப்பு தற்போது அதிகமாக இருப்பதால் 20 ஓவர் உலக கோப்பை குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக பி.சி.சி.ஐ. அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் ஐ.சி.சி. உலக கோப்பைக்கு மத்திய அரசிடம் இருந்து கிரிக்கெட் வாரியம் வரி விலக்கு பெற வேண்டி உள்ளது. இதன் காரணமாகவும் கால அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவ தபா 4-0 என்ற கணக்கில் உஸ்மோனோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    துபாய்:

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவ தபா 4-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் பகோதுர் உஸ்மோனோவை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதேபோல் 91 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சஞ்சீத் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் துர்சுனோவ் சான்ஜரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் வரிந்தர் சிங் 2-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். 69 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், உஸ்பெகிஸ்தானின் பாதுரோவ் பாபா உஸ்மானை சந்தித்தார். இதில் முதல் ரவுண்டில் கண் அருகில் காயம் அடைந்த விகாஸ் கிருஷ்ணன் பாதியில் விலக நேரிட்டது. இதனால் பாதுரோவ் வெற்றி பெற்று இறுதிப்போட்டியை எட்டினார். விகாஸ் கிருஷ்ணன் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

    பெண்கள் பிரிவில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம் (51 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), அனுபமா (81 கிலோவுக்கு மேல்), லால்பாட் சாய்ஷி (64 கிலோ) ஆகியோர் களம் காண்கிறார்கள். நாளை ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் அமித் பன்ஹால் (52 கிலோ), ஷிவ தபா (64 கிலோ), சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் தங்களது எதிராளியை சந்திக்க உள்ளனர்.
    முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் (ஜூன்18-22) மோதுகின்றன.
    துபாய்:

    முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் (ஜூன்18-22) மோதுகின்றன. இதையொட்டி மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் வருகிற 2-ந்தேதி தனிவிமானத்தில் புறப்பட்டு மறுநாள் இங்கிலாந்தை அடைகிறார்கள். வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும்.

     ஐ.சி.சி


    அங்கு சென்றதும் இந்திய வீரர்கள் நேரடியாக சவுத்தம்டன் மைதான பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்துலை தொடங்குவார்கள். தனிமைப்படுத்தலின் போதும் முறையாக பரிசோதனை நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிமைகாலம் எத்தனை நாட்கள் என்ற விவரத்தை ஐ.சி.சி. குறிப்பிடவில்லை.
    கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார்.

    இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பிசிசிஐ

    இதையடுத்து எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


    ஐ.பி.எல். போட்டியின் அதிகாரபூர்வ தேதி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்குகிறார். இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 4-ந்தேதி இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

    தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர் 18-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதிக்குள் நடத்தி முடித்து விடலாம் என்று திட்டமிட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் அதிகாரபூர்வ தேதி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.

    ஐ.பி.எல். மீண்டும் தொடங்கும் போது அதில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கும் நிலையில் இங்கிலாந்து உள்பட வெளிநாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கும் விஷயத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையம் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பு அதற்கு வழிவிடுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியாமல் போனால் மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. வருகிற 1-ந் தேதி நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட இருக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடாக என்ன தெரிவிக்கலாம் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது. கொரோனா பரவலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை ஜூலை மாதம் வரை பொறுத்திருந்து பார்த்து அதற்கு தகுந்தபடி முடிவு எடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    கொரோனா பயத்தால் கடந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் வீரர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்தபடி இன்னும் வழங்கப்படவில்லை. அந்த தொகையை வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விராட் கோலிக்கு இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

    இந்திய கேப்டன் விராட் கோலி பொறுமையாக பேட்டிங் செய்ய வேண்டும். அதீத ஆக்ரோஷமாக செயல்படக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.

    இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் களம் இறங்கிய உடனே ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் ஆடுவது பலன் அளிக்காது. ஏனெனில் அங்கு பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகும். அதை துல்லியமாக கணித்து பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். ஒவ்வொரு பகுதியாக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்த தனக்குரிய தருணத்துக்காக காத்திருக்க வேண்டும். அப்போது தான் அதிக ரன்கள் சேர்க்க முடியும்.

    சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது கடினம் என்பதை இந்திய அணிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் அங்குள்ள ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவுகள் மாறும். அங்குள்ள மைதானங்களில் பந்து சரமாரியாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால் இந்த வகையில் இந்திய அணியை விட இங்கிலாந்து வீரர்கள் ஒரு படி மேலே இருப்பார்கள் என தெரிவித்தார்.
    டாக்காவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
    டாக்கா:

    வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் , கேப்டனுமான குசால் பெராரா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர்120 ரன்னில் அவுட்டானார். தனஞ்செயா டி சில்வா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். குணதிலகா 39 ரன்னில் வெளியேறினார்.

    வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அஹமது 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்நாயகன் விருது பெற்ற முஷ்பிகுர் ரஹிம்

    இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. இலங்கை அணியினரின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

    இதனால் வங்காளதேசம் அணி 42.3 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் மஹமதுல்லா 53 ரன்னும், மொசாடெக் ஹுசைன் 51 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் இலங்கை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 5 விக்கெட்டும், வனிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது துஷ்மந்தா சமீராவுக்கும், தொடர் நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கும் வழங்கப்பட்டது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது.
    20 ஓவர் உலக கோப்பை போட்டியை வெல்லும் அணி யார்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    லாகூர்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இப்போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வெல்லும் அணி யார்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல 4 அணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுறித்து அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டை பயமின்றி விளையாடும் அணுகு முறையை கொண்டுள்ளனர். இங்கிலாந்து அணியும் கோப்பையை வெல்வதில் முன்னணியில் உள்ளது.அதேபோல் நியூசிலாந்து அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    பாகிஸ்தான் அணி சரியான கலவையை செய்வதற்கு இன்னும் உழைக்க வேண்டும். ஒரு பாகிஸ்தான் வீரராக உலக கோப்பையை எங்கள் அணி வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி வென்றால் எங்களது கனவுகள் நனவாகும். அவர்கள் சரியான வீரர்கள் கலவையை தேர்வு செய்து விட்டால் சிறந்த அணியை பெற்று கடுமையாக போராட முடியும். பாகிஸ்தான் அணியில் 5 மற்றும் 6-வது வரிசையில் உள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவைகளை செய்தால் பாகிஸ்தானுக்கு வலுவான வாய்ப்புகள் இருக்கும்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியை பற்றி கணிக்க முடியாது. அவர்களது முன்னணி வீரர்கள் அப்போட்டித்தொடரில் விளையாடினால் அந்த அணி மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×