என் மலர்
விளையாட்டு


பியூனஸ்அயர்ஸ்:
தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கோபா அமெரிக்க கால்பந்து ஆகும்.உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பைக்கு அடுத்து புகழ் பெற்றது இந்த போட்டி ஆகும்.
47-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூ ன் 12-ந்தேதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அர்ஜென்டினாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14 முதல் ஜூலை 11-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
அர்ஜென்டினாவுடன் இணைந்து கொலம்பியாவும் இந்த போட்டியை நடத்தும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது போட்டியை நடத்தும் வாய்ப்பை கொலம்பியா இழந்துள்ளது. அர்ஜென்டினா மட்டுமே இந்த போட்டியை நடத்துகிறது.
இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கினன்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பெரு, வெனிசுலா ஆகிய நாடுகளும், ‘பி’ பிரிவில் அர்ஜென்டினா, சிலி, பொலிவியா, உருகுவே, பராகுவே ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 2 பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதிபெறும்.
29-ந்தேதியுடன் லீக் ஆட்டம் முடிகிறது. ஜூலை 3 மற்றும் 4-ந்தேதிகளில் கால் இறுதியும், 6 மற்றும் 7-ந்தேதியில் அரை இறுதியும், ஜூலை 11-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் உருகுவே அதிகபட்சமாக 15 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அந்த அணி கடைசியாக 2011-ல் வெற்றி பெற்றது.
அதற்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா 14 தடவை கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி கடைசியாக 1993-ல் வெற்றிபெற்றது.
பிரேசில் 9 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. பராகுவே, சிலி, பெரு ஆகியவை தலா 2 முறையும், கொலம்பியா, பொலிவியா தலா 1 முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளன.
பாரீஸ்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 6-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி ) சக நாட்டைச் சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேயை எதிர்கொண்டார்.
இதில் சுவரேவ் 3-6, 3-6, 6-2, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 49 நிமிடங்கள் தேவைப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் 5-வது வரிசையில் உள்ள ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இதில் சிட்சிபாஸ் 7-6 (8-6), 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் 16-வது வரிசையில் உள்ள டிமிட்ரோவ் (பல்கேரியா) நிஷிகோரி (ஜப்பான்) 11-வது நிலை வீரரான அகுக் (ஸ்பெயின்), பேபியோ பாக்னி (இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
உலகில் 4-ம் நிலை வீரரும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
ஸ்பெயினை சேர்ந்த பேப்லோ 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டொம்னிக்தீம்மை தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 11-வது இடத்தில் இருக்கும் பெட்ரா கிவிட்டோவா (செக் குடியரசு) 6-7 (3-7), 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தை சேர்ந்த கிரிட்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீராங்கனையான சபலென்கா, 15-வது வரிசையில் உள்ள விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), 23-ம் நிலை வீராங்கனையான மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
மும்பை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டியை கால வரையின்றி தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) ஏற்பட்டது.
29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்திவிட வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ. தீவிரமாக உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்த போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.
அதன்படி ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படுகிறது.
இந்தநிலையில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் நடைபெறும் தினத்தில் வெஸ்ட் இண்டீசின் கரிபீயன் பிரிமியர் ‘லீக்’ போட்டி (சி.பி.எல்.) நடைபெறுகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் பங்கேற்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரிபீயன் ‘லீக்’ போட்டி ஆகஸ்டு 28-ந் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 19-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடி விட்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணைய வேண்டும். இதனால் ஒரு சில ஆட்டங்களை விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக கரிபீயன் பிரிமியர் ‘லீக்’ போட்டியை முன்கூட்டியே தொடங்க கோரி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பி.சி.சி.ஐ. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கரீபியன் ‘லீக்’ போட்டியை முன்கூட்டியே முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்படி முன்கூட்டியே முடிக்கும் பட்சத்தில் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஐ.பி.எல். கொரோனா பாதுகாப்பு வளையத்துக்கு மாற உதவும். 3 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் காலமும் முன்கூட்டியே நிறைவடையும்” என்றார்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த முக்கிய வீரர்கள் சிலர் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களின் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.
பிராவோ(சென்னை சூப்பர் கிங்ஸ்), பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்), கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் (பஞ்சாப் கிங்ஸ்), ஹெட்மயர் (டெல்லி கேபிட்டல்ஸ்), ஜேசன் ஹோல்டர் (சன் ரைசஸ் ஐதராபாத்), சுனில் நரீன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்டவர்களால் முதல் சில ஆட்டங்களில் விளையாட முடியாது.
இதேபோல கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கரிபீயன் ‘லீக்’கில் விளையாடும் டிரினிடாட் மற்றும் டொபோகோ அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. களிமண் தரைப் போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா), 68-ம் நிலை வீரரான பாப்லோ அந்துஜாரை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.
அனுபவம் வாய்ந்த டொமினிக் தீம் முதல் இரு செட்டுகளை கைப்பற்றிய நிலையில் எஞ்சிய 3 செட்டுகளை வரிசையாக பறிகொடுத்து அதிர்ந்து போனார்.
சுமார் 4 மணி 28 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 35 வயதான பாப்லோ அந்துஜார் 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் ஆட்டம் ஒன்றில் டொமினிக் முதல் 2 செட்டை வென்று அதன் பிறகு சறுக்குவது இது 2-வது முறையாகும். அத்துடன் 8-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்ற அவர் முதல் சுற்றுடன் நடையை கட்டுவது இதுவே முதல் தடவையாகும்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பூஜாராணி 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் மாவ்லோனோவாவை எளிதில் பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

64 கிலோ பிரிவில் இந்தியாவின் லால்பாட்சாய்ஷி 2-3 என்ற கணக்கில் மிலனா சப்ரோனோவாவிடம் (கஜகஸ்தான்) தோற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.7 லட்சமும், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவர்களுக்கு ரூ.3½ லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரும், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரருமான இந்திய முன்னாள் வீரர் 48 வயதான சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-


இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.







