என் மலர்

  செய்திகள்

  வருங்கால மனைவியுடன் பேட் கம்மின்ஸ்
  X
  வருங்கால மனைவியுடன் பேட் கம்மின்ஸ்

  குடும்பத்துடன் இணைந்த ஆஸி. வீரர்கள்: கர்ப்பமாக உள்ள காதலியை கட்டிப்பிடித்து உணர்ச்சியை வெளிப்படுத்திய பேட் கம்மின்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிட்னியில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று தங்களுடைய குடும்பத்துடன் இணைந்தனர்.
  இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. போட்டி தொடங்குவற்கு 14 நாட்களுக்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வந்து, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, பின்னர் அணியில் இணைந்தனர். மே 4-ந்தேதி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

  இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல அந்நாட்டு அரசு தடைவிதித்திருந்ததால், மாலத்தீவு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல வீரர்கள் முடிவு செய்தனர்.

  கடந்த 15-ந்தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் சிட்னி சென்றடைந்தனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா கொரோனாவிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

  மேக்ஸ்வெல்

  இதனால் வீரர்கள் சிட்னி ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்றுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்திய கெடு முடிவடைந்ததால் இன்று ஆஸ்திரேலிய வீரர்கள் குடும்பத்துடன் இணைந்தனர்.

  ஸ்மித்

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள பேட் கம்மின்ஸ் காதலி கர்ப்பமாக உள்ளார். அவரை கண்டதும் கட்டிப்பிடித்து உணர்ச்சியை வெளிப்படுத்தினார். அவரது பார்ட்னர் பாஸ்டன் கண்ணீர் தழும்ப வரவேற்றார்.
  Next Story
  ×