search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொமினிக் தீம்
    X
    டொமினிக் தீம்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - முதல் சுற்றில் டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. களிமண் தரைப் போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா), 68-ம் நிலை வீரரான பாப்லோ அந்துஜாரை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

    அனுபவம் வாய்ந்த டொமினிக் தீம் முதல் இரு செட்டுகளை கைப்பற்றிய நிலையில் எஞ்சிய 3 செட்டுகளை வரிசையாக பறிகொடுத்து அதிர்ந்து போனார்.

    சுமார் 4 மணி 28 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 35 வயதான பாப்லோ அந்துஜார் 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கிராண்ட்ஸ்லாம் ஆட்டம் ஒன்றில் டொமினிக் முதல் 2 செட்டை வென்று அதன் பிறகு சறுக்குவது இது 2-வது முறையாகும். அத்துடன் 8-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்ற அவர் முதல் சுற்றுடன் நடையை கட்டுவது இதுவே முதல் தடவையாகும்.
    Next Story
    ×