என் மலர்
விளையாட்டு
3 முறை உலக சாம்பியனான 27 வயதான கரோலினா மரினுக்கே இந்த முறையும் ஒலிம்பிக்கில் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு தென்பட்டது.
புதுடெல்லி:
பேட்மிண்டனில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சமீபத்தில் பயிற்சியின் போது இடது கால்முட்டியில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் முட்டியின் தசைநாரில் கிழிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் சில தினங்களில் ஆபரேஷன் செய்ய இருக்கிறார். இதையடுத்து ஜூலை 23-ந்தேதி டோக்கியோவில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

3 முறை உலக சாம்பியனான 27 வயதான கரோலினா மரினுக்கே இந்த முறையும் ஒலிம்பிக்கில் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு தென்பட்டது. அவரது விலகல் இந்தியாவின் பி.வி.சிந்து போன்ற வீராங்கனைகளுக்கு நம்பிக்கை அளிக்கும். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சிந்து, இதே கரோலினா மரினிடம் தான் இறுதிஆட்டத்தில் தோற்று இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
பேட்மிண்டனில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சமீபத்தில் பயிற்சியின் போது இடது கால்முட்டியில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் முட்டியின் தசைநாரில் கிழிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் சில தினங்களில் ஆபரேஷன் செய்ய இருக்கிறார். இதையடுத்து ஜூலை 23-ந்தேதி டோக்கியோவில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (புதன்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த தொடரில் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து துணை கேப்டனாக செயல்படும் ஜோஸ் பட்லருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்து துணை கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. அனுபவத்தைக் கருத்தில் கொண்டு மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.
இந்த நிலையில், வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷி மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.
இங்கிலாந்தில் நான்கு மாதங்கள் தங்க வேண்டியிருப்பதால் குடும்பத்தினரும் இங்கிலாந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என வீரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வீரர்களின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் தற்போது இங்கிலாந்து செல்லவுள்ளார்கள்.
இந்திய ஆடவர், மகளிர் அணியினர் ஒன்றாகச் சேர்ந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள். எனினும் மகளிர் அணியினர் குறுகிய காலம் மட்டுமே இங்கிலாந்தில் இருப்பதால் அவர்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லப் போவதில்லை என்று அறியப்படுகிறது.
நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஆடிய பிறகு வீராட் கோலி அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.
மும்பை:
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடக்கிறது.
இதில் வீராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் விளையாடுவதற்காகவும், இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுவதற்காகவும் இந்திய அணி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
3-ந் தேதி சவுத்தம்டன் சென்றடையும் இந்திய வீரர்கள் அங்குள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஏற்கனவே வீரர்கள் மும்பையில் 14 நாட்கள் தனிமையில் இருந்தனர். இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும்.
இங்கிலாந்து சென்றடைந்ததும் இந்திய வீரர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதோடு தனிமைப்படுத்தலின் போதும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அந்த அணி உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு இங்கிலாந்துடன் 2 டெஸ்டில் ஆடுகிறது. முதல் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் நாட்டிங் காமிலும் (ஆக 4-8), இரண்டாவது டெஸ்ட் லண்டனிலும் (ஆக12-16), மூன்றாவது டெஸ்ட் லீட்சிலும் (ஆக 25-29), நான்காவது டெஸ்ட் லண்டனிலும் ( செப் 2-6), ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டரிலும் (செப் 10-14) நடக்கிறது.
இரு அணிகள் இடையே கடைசியாக கடந்த பிப்ரவரி மார்ச் மாதம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான 20 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் வருமாறு:-
வீராட் கோலி (கேப்டன்), ரகானே ( துணை கேப்டன்), ரோகித்சர்மா , சுப்மன் கில், புஜாரா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், விகாரி, விருத்திமான் சகா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர்.

உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் எத்தனை நாட்கள் தனிமையில் இருப்பார்கள் என்பது தெரியவில்லை. நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்து விட்டது.

அந்த அணி உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கு முன்பு இங்கிலாந்துடன் 2 டெஸ்டில் ஆடுகிறது. முதல் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.
நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஆடிய பிறகு வீராட் கோலி அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.
முதல் டெஸ்ட் நாட்டிங் காமிலும் (ஆக 4-8), இரண்டாவது டெஸ்ட் லண்டனிலும் (ஆக12-16), மூன்றாவது டெஸ்ட் லீட்சிலும் (ஆக 25-29), நான்காவது டெஸ்ட் லண்டனிலும் ( செப் 2-6), ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டரிலும் (செப் 10-14) நடக்கிறது.
இரு அணிகள் இடையே கடைசியாக கடந்த பிப்ரவரி மார்ச் மாதம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான 20 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் வருமாறு:-
வீராட் கோலி (கேப்டன்), ரகானே ( துணை கேப்டன்), ரோகித்சர்மா , சுப்மன் கில், புஜாரா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், விகாரி, விருத்திமான் சகா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர்.
ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளில் விளையாட உள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களது ஒரே நோக்கம் ஐ.பி.எல். போட்டியை நடத்தி முடிப்பது தான்.
மும்பை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.
ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய 31 ஆட்டங்களை செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

கரிபீயன் லீக் போட்டி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்கத்தில் சில ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம். ஆஸ்திரேலிய வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐ.பி.எல்.லில் ஆடுவதை விரும்பவில்லை. வீரர்கள் ஆடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
வங்காள தேசத்தை சேர்ந்த ஷகிப்-அல்-ஹசன், முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் பங்கேற்க அந்நாடு அனுமதிக்கவில்லை.
இந்தநிலையில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்காவிட்டாலும் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளில் விளையாட உள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களது ஒரே நோக்கம் ஐ.பி.எல். போட்டியை நடத்தி முடிப்பது தான். வெளிநாட்டு வீரர்கள் முழுமையாக பங்கேற்காவிட்டாலும் போட்டியை நிறுத்த மாட்டோம். திட்டமிட்டப்படி நடைபெறும்.
விளையாடக்கூடிய இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்களை வைத்து போட்டியை நடத்துவோம். இதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருக்கும். ஐ.பி.எல். போட்டிகளை நடத்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று விட்டனர்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.

ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

கரிபீயன் லீக் போட்டி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்கத்தில் சில ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம். ஆஸ்திரேலிய வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐ.பி.எல்.லில் ஆடுவதை விரும்பவில்லை. வீரர்கள் ஆடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
வங்காள தேசத்தை சேர்ந்த ஷகிப்-அல்-ஹசன், முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் பங்கேற்க அந்நாடு அனுமதிக்கவில்லை.
இந்தநிலையில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்காவிட்டாலும் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளில் விளையாட உள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களது ஒரே நோக்கம் ஐ.பி.எல். போட்டியை நடத்தி முடிப்பது தான். வெளிநாட்டு வீரர்கள் முழுமையாக பங்கேற்காவிட்டாலும் போட்டியை நிறுத்த மாட்டோம். திட்டமிட்டப்படி நடைபெறும்.
விளையாடக்கூடிய இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்களை வைத்து போட்டியை நடத்துவோம். இதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருக்கும். ஐ.பி.எல். போட்டிகளை நடத்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று விட்டனர்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டம் காணொலி வாயிலாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி கலந்து கொள்கிறார். இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக எழுந்துள்ளது. இந்த போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக இருக்கிறது. எனவே கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வர ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்று தெரிகிறது.
இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து இறுதி முடிவு எட்டப்பட வாய்ப்பில்லை. ஜூலை 18-ந் தேதி தொடங்கும் ஐ.சி.சி.யின் வருடாந்திர கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு சாத்தியம் இருக்கிறதா? என்பது குறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகிகள், மத்திய அரசின் கருத்தை கேட்பதுடன், தங்களது சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் ஒருமுறை கூட்டி விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவில் நடத்தப்படும் உலக போட்டிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து வரிவிலக்கு பெற்று தர வேண்டும் என்று ஐ.சி.சி. வற்புறுத்தி வருகிறது. சிக்கலான இந்த பிரச்சினையை தீர்க்க பி.சி.சி.ஐ., மத்திய அரசின் உயர் மட்டத்தினரை சந்தித்து முயற்சித்து வருகிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் இன்னும் முடிவு எதுவும் காண முடியவில்லை. இந்த பிரச்சினை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார பிரச்சினை நிலவும் இந்த சூழ்நிலையில் அரசிடம் இருந்து வரிவிலக்கு பெறுவது என்பது கடினமான காரியமாகும். வரிவிலக்கு பெற முடியாவிட்டாலும், உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க பி.சி.சி.ஐ. தயாராக இல்லை. வரிவிலக்கு கிடைக்காத பட்சத்தில் உலக கோப்பை போட்டியின் மூலம் பி.சி.சி.ஐ.க்கு வரவேண்டிய வருவாயில் சுமார் ரூ.900 கோடியை ஐ.சி.சி. பிடித்தம் செய்யும் என்று தெரிகிறது.

அடுத்த 8 ஆண்டுகளுக்கான (2023-2031) வருங்கால போட்டி அட்டவணையை தீர்மானிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டதால் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை எப்போது தொடங்கி நடத்தலாம் என்றும் யோசனை செய்யப்படுகிறது.
கிரிக்கெட் போட்டியை உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் வளர்ப்பது குறித்தும், குறிப்பாக பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிரபலப்படுத்துவது பற்றியும் கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளது..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டம் காணொலி வாயிலாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் அதன் தலைவர் சவுரவ் கங்குலி கலந்து கொள்கிறார். இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக எழுந்துள்ளது. இந்த போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக இருக்கிறது. எனவே கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வர ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்று தெரிகிறது.
இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து இறுதி முடிவு எட்டப்பட வாய்ப்பில்லை. ஜூலை 18-ந் தேதி தொடங்கும் ஐ.சி.சி.யின் வருடாந்திர கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு சாத்தியம் இருக்கிறதா? என்பது குறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகிகள், மத்திய அரசின் கருத்தை கேட்பதுடன், தங்களது சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை மீண்டும் ஒருமுறை கூட்டி விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவில் நடத்தப்படும் உலக போட்டிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து வரிவிலக்கு பெற்று தர வேண்டும் என்று ஐ.சி.சி. வற்புறுத்தி வருகிறது. சிக்கலான இந்த பிரச்சினையை தீர்க்க பி.சி.சி.ஐ., மத்திய அரசின் உயர் மட்டத்தினரை சந்தித்து முயற்சித்து வருகிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் இன்னும் முடிவு எதுவும் காண முடியவில்லை. இந்த பிரச்சினை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார பிரச்சினை நிலவும் இந்த சூழ்நிலையில் அரசிடம் இருந்து வரிவிலக்கு பெறுவது என்பது கடினமான காரியமாகும். வரிவிலக்கு பெற முடியாவிட்டாலும், உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க பி.சி.சி.ஐ. தயாராக இல்லை. வரிவிலக்கு கிடைக்காத பட்சத்தில் உலக கோப்பை போட்டியின் மூலம் பி.சி.சி.ஐ.க்கு வரவேண்டிய வருவாயில் சுமார் ரூ.900 கோடியை ஐ.சி.சி. பிடித்தம் செய்யும் என்று தெரிகிறது.

கிரிக்கெட் போட்டியை உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் வளர்ப்பது குறித்தும், குறிப்பாக பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிரபலப்படுத்துவது பற்றியும் கருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளது..
உலக கோப்பை செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை:
உலக கோப்பை செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கு ஆசிய செஸ் போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கொரோனா பரவல் காரணமாக ஆசிய செஸ் போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் உலக செஸ் போட்டியில் இந்தியாவில் இருந்து ஒருவர் மட்டும் பங்கேற்க இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க அகில இந்திய செஸ் சம்மேளனம் தங்களுடைய வீரர்களுக்கு போட்டியை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரரை தேர்வு செய்ய அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் ஆன்லைன் மூலம் செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் 8 கிராண்ட்மாஸ்டர்கள், 7 சர்வதேச மாஸ்டர்கள், 2 பிடே மாஸ்டர் என மொத்தம் 17 வீரர்கள் கலந்து கொண்டனர். 16 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஈரோட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனியன் 12 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 12½ புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன், உலக கோப்பை செஸ் போட்டிக்கும் தேர்வானார்.

போட்டிக்கு பிறகு பத்திரிகையாளரை சந்திக்க மறுத்ததால் ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் நவோமி ஒசாகா போட்டியில் இருந்து நீக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
பாரிஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனை அடுத்து போட்டி அமைப்பு குழுவின் விதிமுறையை மதிக்காமல் நடந்து கொண்ட நவோமி ஒசாகாவுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் அவர் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என பிரெஞ்சு ஓபன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து நவோமி ஒசாகா விலகுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 91 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் வாசிலி லிவிட்டை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
துபாய்:
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 91 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வாசிலி லிவிட்டை (கஜகஸ்தான்) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிசுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால் 2-3 என்ற கணக்கில் நடப்பு உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஷகோபிடின் ஜோய்ரோவிடம் (உஸ்பெகிஸ்தான்) தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
இந்த முடிவை எதிர்த்து இந்திய அணி தரப்பில் செய்யப்பட்ட அப்பீல் நிராகரிக்கப்பட்டது. 64 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா 2-3 என்ற கணக்கில் மங்கோலியாவின் பாதர்சுக் சின்ஜோரிக்கிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். ஆசிய போட்டியில் ஷிவ தபா தொடர்ந்து வென்ற 5-வது பதக்கம் இதுவாகும். இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 15 பதக்கம் வென்றது. ஆசிய போட்டியில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடு இதுவாகும்.
ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்க வங்கதேச வீரர்கள் ஷாகிப் அல் ஹசன், முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு தடையில்லாச் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர்- அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள ஆட்டங்களை நடத்த பிசிசிஐ சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்க தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இருப்பதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இருவருக்கும் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவது சாத்தியமற்றது. அதற்கான வாய்ப்புகளே இல்லை. டி20 உலகக் கோப்பை வருவதால், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது.
மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ள அதே காலகட்டத்தில் வங்கதேச அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது. முன்னதாக, ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்களை அனுமதிக்க முடியாது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் தெரிவித்தது.
இவ்வாறு நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்பது குறித்து வீரர்களுடன் தற்போதைக்குப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் தற்போது கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் 2010-ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனவர் சுழற்பந்து வீச்சாளர் சேவியர் டொஹார்ட்டி. அதே ஆண்டு ஆஷஸ் தொடரில் இடம் பிடித்து டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனா். 2015-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருந்தார். இதில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2016-17 சீசனோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க சில காலங்கள் எடுத்துக் கொண்டார்.
தற்போது அவர் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார். அவர் வேலை பார்க்கும் வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது.
Test bowler turned carpenter 👷🔨
— Australian Cricketers' Association (@ACA_Players) May 18, 2021
Xavier Doherty took some time to find what was right for him following his retirement from cricket, but he's now building his future with an apprenticeship in carpentry.#NationalCareersWeekpic.twitter.com/iYRq2m39jt
தற்போது நான் கார்பெண்டர் வேலை பயிற்சியில் முக்கால்வாசி முடித்துள்ளேன். கட்டிடம் கட்டுமான பகுதியில் சந்தோசமாக வேலை பார்த்து வருகிறேன். வெளியிடத்தில் எனக்கு வேலை கொடுக்கும்போது, நான் புதிய விசயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன். இது கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது’’ எனத் தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்து விளையாடும்போது, விராட் கோலியின் விருப்பத்தை கைல் ஜேமிசன் புறக்கணித்ததை டிம் சவுத்தி பாராட்டியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி தொடங்குகிறது.
இதில் நியூசிலாந்து பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா. விராட் கோலி, புஜாரா, ரகானே எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதே கேள்வி. நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய நான்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இதில் கைல் ஜேமிசன் ஆர்சிபி அணியில் இடம் பிடித்து விளையாடினார். சிறப்பாக பந்து வீசி அசத்தினார். பயிற்சியின்போது அவரிடம் இந்திய அணி கேப்டன் டியூக் பந்தை கொண்டு தனக்கு பந்து வீச முடியுமா? என்று கேட்டார். அதற்கு ஜேமிசன், நான் பந்து வீசினால் நீங்கள் என்னுடைய பந்து வீச்சு முறையை புரிந்துகொள்வீர்கள். அதனால் வீசமாட்டேன் என மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் விராட் கோலி விரித்த வலையில் கைல் ஜேமிசன் சிக்காததற்கு டிம் சவுத்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிம் சவுத்தி இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி கைல் ஜேமிசனிடம் கேட்ட சம்பவம் உண்மை. ஆனால், அந்த பதில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கானது. ஏன் அவர்கள் பந்து வீச்சை கவனிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார்.
ஆனால், இறுதிப் போட்டியில் விராட் கோலி பந்து வீச்சை எதிர்கொள்ள இருப்பார். அவருக்கு பந்து வீசக்கூடாது என்பதை தெரிந்துள்ள கைல் ஜேமிசன் மிகப்பெரிய அறிவு தேவையில்லை’’ என்றார்.