என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவியர்
    X
    முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவியர்

    கார்பெண்டராக மாறிய உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்த கிரிக்கெட் வீரர்

    உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் தற்போது கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார்.
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் 2010-ம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனவர் சுழற்பந்து வீச்சாளர் சேவியர் டொஹார்ட்டி. அதே ஆண்டு ஆஷஸ் தொடரில் இடம் பிடித்து டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனா். 2015-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருந்தார். இதில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    2016-17 சீசனோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க சில காலங்கள் எடுத்துக் கொண்டார்.

    தற்போது அவர் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார். அவர் வேலை பார்க்கும் வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது.

    தற்போது நான் கார்பெண்டர் வேலை பயிற்சியில் முக்கால்வாசி முடித்துள்ளேன். கட்டிடம் கட்டுமான பகுதியில் சந்தோசமாக வேலை பார்த்து வருகிறேன். வெளியிடத்தில் எனக்கு வேலை கொடுக்கும்போது, நான் புதிய விசயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன். இது கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×