என் மலர்

  செய்திகள்

  விராட் கோலி- கைல் ஜேமிசன்
  X
  விராட் கோலி- கைல் ஜேமிசன்

  விராட் கோலி விரித்த வலையில் சிக்கவில்லை: கைல் ஜேமிசனுக்கு டிம் சவுத்தி பாராட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்து விளையாடும்போது, விராட் கோலியின் விருப்பத்தை கைல் ஜேமிசன் புறக்கணித்ததை டிம் சவுத்தி பாராட்டியுள்ளார்.
  இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி தொடங்குகிறது.

  இதில் நியூசிலாந்து பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா. விராட் கோலி, புஜாரா, ரகானே எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதே கேள்வி. நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, கைல் ஜேமிசன், நீல் வாக்னர் ஆகிய நான்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

  இதில் கைல் ஜேமிசன் ஆர்சிபி அணியில் இடம் பிடித்து விளையாடினார். சிறப்பாக பந்து வீசி அசத்தினார். பயிற்சியின்போது அவரிடம் இந்திய அணி கேப்டன் டியூக் பந்தை கொண்டு தனக்கு பந்து வீச முடியுமா? என்று கேட்டார். அதற்கு ஜேமிசன், நான் பந்து வீசினால் நீங்கள் என்னுடைய பந்து வீச்சு முறையை புரிந்துகொள்வீர்கள். அதனால் வீசமாட்டேன் என மறுத்துவிட்டார்.

  டிம் சவுத்தி

  இந்த நிலையில் விராட் கோலி விரித்த வலையில் கைல் ஜேமிசன் சிக்காததற்கு டிம் சவுத்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

  டிம் சவுத்தி இதுகுறித்து கூறுகையில் ‘‘விராட் கோலி கைல் ஜேமிசனிடம் கேட்ட சம்பவம் உண்மை. ஆனால், அந்த பதில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கானது. ஏன் அவர்கள் பந்து வீச்சை கவனிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். விராட் கோலி புத்திசாலித்தனமாக வலைவிரித்தார். 

  ஆனால், இறுதிப் போட்டியில் விராட் கோலி பந்து வீச்சை எதிர்கொள்ள இருப்பார். அவருக்கு பந்து வீசக்கூடாது என்பதை தெரிந்துள்ள கைல் ஜேமிசன் மிகப்பெரிய அறிவு தேவையில்லை’’ என்றார்.
  Next Story
  ×