என் மலர்
விளையாட்டு
ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில், வாய்ப்பு கிடைக்கும்போது மறு அட்டவணை தயார் செய்து போட்டியை நடத்தலாம் என பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கடுமையான வகையில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்திய வீரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காகத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என விமர்சனம் வைத்தார். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு இந்த விமர்சனத்தை மறுத்துள்ளது. இந்தியாவும் அடுத்த வருடம் மற்றொரு அட்டவணை தயார் செய்து போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த போட்டியை பிறகு நடத்திக் கொள்ள பி.சி.சி.ஐ. விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மைக்கேல் வாகன் மீண்டும் விமர்சனம் யெ்துள்ளார்.
மீண்டும் போட்டியை நடத்துவது குறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘அடுத்த வருடம் ரத்து செய்யப்பட்ட போட்டிக்கான மறு அட்டவணை என்பது கேலிக்கூத்தானது. இது கிரிக்கெட்டின் வெற்று போட்டியாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஏன் சிறந்தது என்றால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் ஆறு வாரத்திற்குமேல் விளையாடப்படும். வெற்றிக்காக வீரர்கள் வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை ஏற்படும். எமோசன் மற்றும் ஆவேசம் கொண்டதாக இருக்கும் என்பதால் சிறந்த ஆட்டமாக கருதப்படுகிறது.
எப்படி ரன்கள் அடிக்கப் போகிறோம், எப்படி விக்கெட் வீழ்த்தப் போகிறோம் என்ற கவலையிலேயே வீரர்கள் ஆட்டமிழந்து விடுவார்கள். மீண்டும் ஒரு போட்டிக்கு திரும்ப முடியும் என் நினைத்தால், அது கேலிக்கூத்தானது. தொலைக்காட்சி உரிமத்தை நிறைவேற்றுவதற்கான போட்டியாக இருக்கும். அர்த்தமில்லாதது. இந்த தொடர் முடிந்து விட்டது’’ என்றார்.
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதான் காரணமாக ரவி சாஸ்திரி கொரோனாவை அணிக்குள் கொண்டு வந்துவிட்டார் என்ற விமர்சனம் கடுமையாக வைக்கப்படுகிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 4-வது டெஸ்ட் போட்டியின்போது ரவி சாஸ்திரிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்தது.
பின்னர் மேலும் மூன்று பயிற்சியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடுமையான பாதுகாப்பு வளையத்தை கடந்து கொரோனா வைரஸ் பயிற்சியாளர்களை தாக்கியது எப்படி? என விசாரிக்கும்போது, ரவி சாஸ்திரி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதுதான் காரணம் என தெரியவந்தது.
இதனால் ரவி சாஸ்திரிக்கு எதிராக விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது. அவர் இன்னும் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் விமர்சனத்திற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். விமர்சனம் குறித்து பதில் அளித்த ரவி சாஸ்திரி ‘‘ஒட்டுமொத்த நாடே (பிரிட்டன்) திறந்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே எதுவேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம்’’ என்றார்.
மேலும், இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடியதன் மூலம் சிறந்த கோடைக்கால கிரிக்கெட்டை பார்க்க முடிந்தது. கொரோனா காலத்திலும் சிறந்த தொடராக இருந்தது. இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா காலத்தில் இந்திய அணி செயல்பட்டது போன்று எந்த அணியும் செயல்பட்டிருக்காது என்றார்.
அமெரிக்க ஓபனை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 18 வயதான இளம் வீராங்கனை எம்மா ராடுகானு பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கியுள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடந்தது. சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் இளம் வீராங்கனைகளான இங்கிலாந்தின் எம்மா ராடுகானு- கனடாவின் லேலா பெர்னாண்டஸ் இடையே பலப்பரீட்சை நடந்தது.
இருவரும் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இதில் எம்மா ராடுகானு 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி 51 நிமிடங்கள் நடந்தது. பட்டத்தை வென்றுள்ள 18 வயதான எம்மா ராடுகானு, தகுதி சுற்றில் விளையாடி முதன்மை சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
இதன் மூலம் தகுதி சுற்றில் விளையாடி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய முதல்நபர் என்ற பெருமையை எம்மா ராடுகானு பெற்றார்.
62 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து இளம் வீராங்கனை என்ற சிறப்பை பெற்று இருந்தார். மேலும் 44 ஆண்டுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற இங்கிலாந்து வீராங்கனை இவர் ஆவார்.
இறுதிப் போட்டியில் தோல்வி இடைந்த லேலா பெர்னாண்டசுக்கு 19 வயதுதான் ஆகிறது. அவர் முந்தைய ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஒசாகா (ஜப்பான்) மற்றும் முன்னணி நம்பர்ஒன் வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி) 5-ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோவினா (உக்ரைன்) ஆகியோரை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டம் வென்ற எம்மா ராடுகானு கூறும்போது, இது நம்ப முடியாத கடினமான போட்டி. ஆனால் எனது நிலை மிகவும் அதிகமாக இருப்பதாக நினைத்தேன்.
நான் எனது சிறந்த டென்னிசை விளையாட வேண்டியிருந்தது என்றார். அவருக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இளம் வயதில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. இது உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த சான்று என்று பாராட்டி உள்ளார். எம்மா ராடுகானுக்கு பரிசுத்தொகையாக ரூ. 18.38 கோடி வழங்கப்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்டில் இந்தியா விளையாட மறுத்ததற்கு ஐ.பி.எல். போட்டிதான் முக்கிய காரணம் என முன்னாள் வீரர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் மான்செஸ்டரில் தொடங்க இருந்தது. ஆனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதரபிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியமும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஆலோசித்து எடுத்தன.
வருகிற 19-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்களான நாசர் உசேன், மைக்கேல் வாகன் ஆகியோர் விமர்சித்து உள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் டாம் ஹாரிசன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதில் ஐ.பி.எல். போட்டி தொடர் எந்த பங்கையும் கொண்டிருக்கவில்லை. நான் தெளிவாக கூறுவது இதற்கும் ஐ.பி.எல். போட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இது ஒரு கொரோனா காரணமான ரத்து அல்ல. இது ஒரு அணியின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றிய தீவிர கவலை காரணமாக ரத்து செய்யப்பட்ட போட்டி.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் 5-வது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டதில் போட்டி தொடரின் முடிவு பற்றி ஆலோசித்து தீர்ப்பு அளிக்கும்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதி உள்ளது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 109 ரன்கள் மட்டுமே அடித்த ரஹானேவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரஹானே. இந்திய ஆடுகளத்தில் விளையாடுவதைவிட வெளிநாட்டு ஆடுகளத்தில் விளையாடுவதில் சிறந்தவர். ஆஸ்திரேலியா மண்ணில் இவர் தலைமையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு டெஸ்டில் ஏழு இன்னிங்சில் பேட்டிங் செய்தார். அதில் அவரால் 109 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. சராசரி 15.57 ஆகும். மேலும் இந்த ஆண்டில் 19 டெஸ்ட் இன்னிங்சில் 372 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இதனால் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் இருந்து ரஹானேவை நீக்க வேண்டும் என விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் உள்நாட்டு தொடரில் ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதில் சரியாக விளையாடவில்லை என்றால், அவரை அணியில் இருந்து நீக்கலாம் என சேவாக் தெரிவித்துள்ளார்.
சேவாக் இதுகுறித்து கூறுகையில் ‘‘ஒரு பேட்ஸ்மேனின் வெளிநாட்டு தொடர் மோசமான முடிவடைந்தால், அவர்களுக்கு உள்நாட்டு தொடரில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனென்றால், வெளிநாட்டு தொடர் நான்கு வருடத்திற்கு ஒருமுறைதான் வரும். ஆனால் இந்திய வீரர்கள் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் விளையாட முடியும்.
இந்தியாவிலும் மோசமான தொடராக முடிவடைந்தால், அதன்பின் அவருடைய ஆட்டம் குறித்து ஆலோசனை நடத்தி அணியில் இருந்து நீக்க முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கூட 8 முதல் 9 டெஸ்ட் போட்டிகள் வரை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அரைசதம் கூட அடித்திருக்கமாட்டார்கள். அதன்பின் விடா முயற்சியின் காரணமாக மீண்டும் நல்ல நிலைக்கு வந்து 1200 முதல் 1500 ரன்கள் வரை ஒரே வருடத்தில் அடித்திருக்கிறார்கள்.
ரஹானேவுக்கு இந்தியாவில் நடைபெறும் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால், அதன்பின் உங்களுடைய பங்களிப்பிற்கு நன்றி என்று நீங்கள் சொல்ல முடியும்’’ என்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்தன. இதில், இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் விளையாடினர்.
இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி ராடுகானு வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டி ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்தது.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.
போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அதன்பின் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். அந்த அணிக்காக சுமார் 9 ஆண்டுகள் விளையாடினார். அதன்பின் யுவான்டஸ் அணிக்கு சென்றார்.

தற்போது மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பியுள்ளார். இன்று நியூகேஸ்டில் அணிக்கெதிராக முதன்முறையாக களம் இறங்கினார். முதல் போட்டியிலேயே இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். மான்செஸ்டர் யுனைடெட் 4-1 என வெற்றி பெற்றது. இதில் ரொனால்டோ (45+2), 62 நிமிடங்களில் கோல்கள் அடித்தார். இதன்மூலம் தனது திறமை இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பேர்ஸ்டோவ் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளதால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மாற்று ஏற்பாட்டை செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனாவின் 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டது. மே மாதம் முதல் வாரத்தில் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடரின் முதல் பகுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 2-வது பகுதி ஆட்டங்கள் வருகிற 19-ந்தேதி தொடங்குகின்றன.
கொரோனா மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் வருவதால் பெரும்பாலான சர்வதேச முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளனர். இங்கிலாந்து அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பேர்ஸ்டோவ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
முதல் பகுதியின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிய நிலையில், தற்போது 2-வது பகுதி ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ரூதர்போர்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து பாதுகாப்பாக விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை அழைத்து வர சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது ஆர்சிபி.
மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருந்த இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அணி வீரர்கள் அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற இந்திய வீரர்களைத்தவிர மற்றவர்கள் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களை அமீரகம் அழைத்துவர அனைத்து ஐ.பி.எல். அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன. ஆர்.சி.பி. அணி கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை தனி விமானம் மூலம் இங்கிலாந்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர ஆர்சிபி அணி முடிவு செய்துள்ளது.
ஆர்.சி.பி. ஏற்பாடு செய்துள்ள தனி விமானம் மூலம் இருவரும் நாளை அமீரகம் சென்றடைகிறார்கள். ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தனி விமானம் மூலம் அமீரகம் சென்றடைந்துள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற அக்டோபர் 17 முதல் நவம்பர் 14-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டன.
கடந்த 8-ந்தேதி இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்கவில்லை. மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார்.
இதற்கிடையே ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் வருகிற 19-ந்தேதி தொடங்ககிறது. இதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தீவிர பயிற்சிக்கிடையே ஷ்ரேயாஸ் அய்யர் சக வீரர்களுடன் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வரும் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நடனமாடி ரிலாக்ஸ் செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Come for the Dumb Charades fun, stay for Karaoke and a masterful #VaathiComing performance 💙🕺🏼
— Delhi Capitals (@DelhiCapitals) September 11, 2021
An unforgettable night of laughter and camaraderie, watch the full Team Bonding session here 👉🏼 https://t.co/k932jm2x6v#YehHaiNayiDilli#CapitalsUnplugged@OctaFX@SofitelDXBPalmpic.twitter.com/1TEbOQHtPc
ஐ.பி.எல். புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து தொடரின்போது ஷ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் பாதி பகுதி ஐ.பி.எல். போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைசி டெஸ்ட் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்படியாவது அந்த போட்டியில் இந்தியா விளையாட வேணடும் என கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று தொடங்குவதாக இருந்தது.
இந்திய பயிற்சியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் கடைசி நேரத்தில் போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் உறுதியாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் என இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டுகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
ஆனால், 2008-ம் ஆண்டு இந்தியாவில் மும்பை தாக்குதல் நடைபெற்ற பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவில் விளையாடியதை மறந்து விடக்கூடாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டிக்கான மறு அட்டவணை வெளியிடப்படும் என்றால் அது சரியான விசயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இந்தியாவில் 2008-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றபோது, இங்கிலாந்து கிரிக்கெட் அணி செய்தது நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்து விளையாடினார்கள்.
நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. அதனால் மீண்டும் இந்தியாவுக்கு வந்து விளையாட இயலாது எனக் கூறுவதற்கு தகுதியானவர்களாக இருந்திருப்பார்கள். கெவின் பீட்டர்சன் அணியை வழிநடத்தியதை மறந்து விடக்கூடாது. அவர்தான் அணிக்கு முக்கியமான நபராக இருந்தார். கெவின் பீட்டர்சன் இந்தியாவுக்குச் செல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தால், ஒட்டுமொத்த விவகாரமும் முடிந்திருக்கும்.
கெவின் பீட்டர்சன் இந்தியா வருவதற்கு தயாராக இருந்தார். அவர் மற்ற வீரர்களை மனமாற்றம் செய்தார். அதனால் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
அவர்களின் செயல்பாட்டை மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பி.சி.சி.ஐ. அடுத்த வருடம் போட்டியை நடத்தலாம் எனச் சொல்கிறது. நாம் இன்னும் இங்கிலாந்து செல்ல வேண்டியுள்ளது. அடுத்த வருடம் ஐ.பி.எல். ஜூன் மாதத்தில் முன்னதாக முடிந்துவிடும். அதன்பின் போதுமான நேரம் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை சார்ந்திருக்கும்.
பி.சி.சி.ஐ. இந்த டெஸ்ட் போட்டியை ஈடு செய்வது சிறந்த செய்தியாக இருக்கும். அது இரண்டு நாட்டின் கிரிக்கெட் உறவுக்கு சரியானதாக இருக்கும்’’ என்றார்.
இதையும் படியுங்கள்... சரித்திர சாதனை படைக்க இருக்கும் ஜோகோவிச்
அமெரிக்க ஓபனை வென்று டென்னிஸில் இரண்டு சரித்திர சாதனையை பதிவு செய்யும் ஆர்வத்தில் உள்ளார் செர்பிய வீரர் ஜோகோவிச்.
டென்னிஸில் ஆண்டுதோறும் நான்கு (ஆஸ்திரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச், அமெரிக்கா) கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். இந்த வருடம் நடைபெற்ற முதல் மூன்று கிராண்ட் ஸ்லாம் (ஆஸ்திரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச்) போட்டிகளிலும் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
தற்போது அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்.
இறுதிப் போட்டியில் டெனில் மெட்வதேவ்-ஐ நாளை எதிர்கொள்கிறார். இதில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றால், ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்ற ஒரே வீரர் என்ற சரித்திர சாதனை படைப்பார் ஜோகோவிச். அத்துடன் தற்போது வரை 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், 21-வது பட்டத்தை கைப்பற்றி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.

இறுதிப் போட்டி குறித்து ஜோகோவிச் கூறுகையில் ‘‘இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே இருக்கிறது. அதை செய்வோம். என்னுடைய இதயம், ஆத்மா, உடல், தலை என அனைத்தும் ஒரு போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இது என்னுடைய டென்னிஸ் வரலாற்றில் கடைசி போட்டி என்ற நோக்கத்தில் செயல்படுவேன்’’ என்றார்.






