என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது.
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது.
இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் பயிற்சியை மேற்கொள்ளும் புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற அயர்லாந்து- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை அயர்லாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
பெல்பாஸ்ட்:
ஜிம்பாப்வே-அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே 34 ஓவரில் 134 ரன்னில் சுருண்டது. டக்வொர்த் விதிப்படி அயர்லாந்துக்கு 32 ஓவரில் 118 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 22.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. 2-வது போட்டி முடிவில்லை. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை அயர்லாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
ஜிம்பாப்வே-அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே 34 ஓவரில் 134 ரன்னில் சுருண்டது. டக்வொர்த் விதிப்படி அயர்லாந்துக்கு 32 ஓவரில் 118 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 22.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. 2-வது போட்டி முடிவில்லை. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை அயர்லாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று வீரர்கள் சிறந்த திறனுடையவர்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐ.பி.எல். 2-வது பகுதி ஆட்டத்தில் விளையாட சில வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், ஜாஃப்ரா பின் ஆலன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, டிம் டேவிட், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து ஆர்.சி.பி. அணி கேப்டன் விராட் கோலி துபாய் வந்தடைந்துள்ளார். தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் அணியுடன் இணைய இருக்கிறார்.
இந்த நிலையில் மாற்று வீரர்கள் சிறந்த திறன் கொண்டவர்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருந்தேன். நாங்கள் கடந்த மாதத்தில் யார் அணியில் இணைகிறார்கள், வெளியேறுகிறார்கள் என்பதை குறித்து ஆலோசனை நடத்தினோம்.
எங்களுடைய முக்கிய வீரர்கள் வெளியேறிய நிலையில், தரம் வாய்ந்த மாற்று வீரர்களை தேர்வு செய்துள்ளோம். முக்கிய வீரர்களை தவற விடுகிறோம். அவர்கள் எங்கள் ஆர்.சி.பி. குடும்பத்தின் ஒரு பகுதி. ஆனால், புதிதாக அணியில் இணைந்தவர்கள் சிறந்த திறன் கொண்டவர்கள். குறிப்பாக இங்குள்ள சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட கூடியவர்கள்.
அவர்கள் மொத்த அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இருப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அதேபோல் முதல் பகுதியில் சிறப்பாக செயல்பட்டதை போன்று 2-வது பகுதியையும் சிறப்பாக தொடங்க ஆர்வமாக இருக்கிறேன்’’ என்றார்.
தொடரை 2-2 என சமன் செய்யவோ அல்லது சாம்பியன்ஷிப் புள்ளிகளை பெறவோ விரும்பவில்லை என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் விளையாட விரும்பவில்லை. ஐ.பி.எல். போட்டியால்தான் பி.சி.சி.ஐ. ரத்து செய்ய விரும்பியது என விமர்சனம் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இங்கிலாந்து மீது விமர்சனம் செய்துள்ளார். அவர் ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது குறித்து கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி தொடரை 2-2 என சமன் செய்யவோ அல்லது சாம்பியன்ஷிப் புள்ளிகளை பெறவோ விரும்பவில்லை. போட்டி குறித்து கூட பேச விரும்பவில்லை. இங்கிலாந்து இன்சூரன்ஸ் பணத்தை (40 மில்லியன் பவுண்டு இழப்பு) பற்றிதான் கவலைப்படுகிறது’’ என்றார்.
17 வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னணி வீரர் பிரெண்டன் டெய்லர் இன்று ஓய்வு பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வே அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பிரெண்டன் டெய்லர். 35 வயதான இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதன்முறையாக ஜிம்பாப்வே அணியில் அறிமுகம் ஆனார். தற்போது வரை 34 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 6 சதங்களுடன் 2320 ரன்களும், ஒருநாள் போட்டியில் 11 சதங்களுடன் 6677 ரன்களும், டி20-யில் 934 ரன்களும் அடித்துள்ளார்.
தற்போது அயர்லாந்து- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஓய்வு பெறும் கடைசி போட்டியில் சிறப்பான வகையில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தொடக்க வீரராக களம் இறங்கிய டெய்லர் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இதன்மூலம் ஏமாற்றத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த பயணத்திற்காக எப்போதும் நன்றிக்குரியவனாக இருப்பேன். நன்றி. என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்குப் பிறகு விளையாடாமல் இருக்கும் முன்னணி வீரரான ரபேல் நடால், தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
டென்னிஸ் உலகில் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் ரபேல் நடால். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
அதில் இருந்து தற்போது வரை ரபேல் நடால் டென்னிஸ் போட்டியில் களம் இறங்காமல் உள்ளார். இதனால் உலக டென்னிஸ் தரவரிசையில் 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டாலும், ஜோகோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்கள். டொமினிக் தீம் 6-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
அமெரிக்க ஓபனை வென்ற ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் 2-வது இடத்திலும், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 3-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4-வது இடத்திலும் உள்ளனர்.
ரவி சாஸ்திரியும், இந்திய அணி வீரர்களும்தான் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என்ற விமர்சனத்தை சுனில் கவாஸ்கர் மறுத்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.
இந்திய பயிற்சியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் கடைசி நேரத்தில் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், உறுதியாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் என இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டுகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நடந்து என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், சமூக வலைத்தளங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
அதன்பிறகு, இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அனைவருக்கும் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. ஆனால், இந்திய வீரர்கள் போட்டியில் விளையாட மறுத்துவிட்டார்கள் என்று ஆங்கில நாளிதழ்களில் மட்டுமே உள்ளன. ஆங்கில நாளிதழ்கள் இந்திய அணியைப் பற்றி ஒருபோதும் நல்லவிதமாக எழுத மாட்டார்கள். இந்திய வீரர்களையே பொறுப்பேற்கச் செய்வார்கள். உண்மை என்னவென்று தெரியாமல் வீரர்களை பற்றி பேசவேண்டாம் ’’ என்றார்.
மேத்யூ ஹெய்டன் சிறந்த இடது கை தொடக்க பேட்ஸ்மேனாகவும் பிலாண்டர் ஸ்விங் மற்றும் சீம் பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய சேர்மனாக ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட உடனேயே ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஹெய்டன், தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் வெளியேறிய நிலையில் ஹெய்டன் மற்றும் பிலாண்டர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சக்லைன் முஷ்டாக், அப்துல் ரசாக் ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த நிலையில் ஹெய்டன், பிலாண்டர் பணிக்குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
மேத்யூ ஹெய்டன் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்த அனுபவம் பெற்றவர். வீரர்கள் அறையில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் இருப்பது அணிக்கு பலன் கொடுக்கும். பாகிஸ்தான் வீரர்கள் கூடுதலாக 10 சதவீதம் சிறப்பாக செயல்பட்டால் உலகக் கோப்பையை வெல்ல முடியும்.
பிலாண்டரை பற்றி எனக்குத் தெரியும். அவர் பந்து வீச்சை புரிந்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார் என ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
தசுன் ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தினேஷ் சண்டிமல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அகிலா தனஞ்ஜெயாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் மொத்தம் 15 வீரர்கள் கொண்ட அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா (21) இடம் பிடித்துள்ளார். மேலும், ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் குசால் பெரேரா அணிக்கு திரும்பியுள்ளார். கொரோனா விதிமீறல் காரணமாக ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா தேர்வு செய்யப்படவில்லை.
தற்போது இலங்கை அணியில் தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்ஜெயா டி சில்வா, குசால் பெரேரா, தினேஷ் சண்டிமல், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ், சமிகா கருணரத்னே, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லகிரு மதுஷங்கா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
லகிரு குமாரா, புலினா தரங்கா, பினுரு பெர்னாண்டோ, அகிலா தனஞ்ஜெயா ரிசர்வ் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பெருமைக்குரிய விருதை வென்றுள்ளார்.
ஐ.சி.சி. மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆண்களுக்கான கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதம் சிறந்த வீரராக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் போட்டியில் இருந்தார். இருவரையும் பின்னுக்குத்தள்ளி ஜோ ரூட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பெண்களுக்கான கிரிக்கெட்டில் அயர்லாந்து ஆல்-ரவுண்டர் எய்மியர் ரிச்சார்ட்சன் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜோ ரூட் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்களுடன் 507 ரன்கள் விளாசினார். அத்துடன் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நான் பந்து வீசியதில் கடினமான பேட்ஸ்மேன்கள் இவர்கள் மூவர்தான் என்று நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட். இவர் 2011-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணியில் விளையாடி வருகிறார். போல்ட், 73 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், 93 ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளையும், 34 டி20 போட்டிகளில் 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், ஐ.சி.சி. ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் கடந்த ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு மும்பை அணி 5-வது முறையாக கோப்பையை வென்றபோது டிரென்ட் போல்ட் அணியில் முக்கிய பங்காற்றினார்.
ஐ.பி.எல். 2021 தொடரின் 2-வது பகுதி ஆட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்ககிறது. இதில் விளையாட இருக்கும் டிரென்ட் போல்ட் போட்டி குறித்து கூறியதாவது:-
வருகிற ஐபிஎல் போட்டியில் விளையாட நான் தயாராக இருக்கிறேன். இதுவரை நான் பந்து வீசியதில் கடினமான பேட்ஸ்மேன்கள் கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகிய மூவரும்தான்.
இதில், கிறிஸ் கெய்லுக்கு பந்துவீச எனக்கு ரொம்ப பிடிக்கும். இருந்தாலும், அவருக்கு பந்து வீசுவது மிகக் கடினம்.
ரோஹித் சர்மாவுக்கு பந்து வீசுவதும் மிகக்கடினமாக இருக்கும். அதேபோல, கே.எல். ராகுலும் அருமையான வீரர்.
இவ்வாறு டிரென்ட் போல்ட் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால் ரோகித் சர்மாவிடம் ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். இந்த 3 போட்டிகளிலும் அவர் வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார். 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது விராட் கோலி டெஸ்ட் கேப்டன் ஆனார்.
2017-ம் ஆண்டு டோனி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து விராட் கோலி 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
இதற்கிடையே 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருப்பதால் தனது பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக கோலி உணர்கிறார். உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதே சரியானது என்று அவர் கருதுகிறார்.
இதனால் ஒயிட் பால் (ஒருநாள் போட்டி, 20 ஓவர்) போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை அவர் ரோகித் சர்மாவிடம் கொடுக்கிறார். இதுதொடர்பாக அவர் அணி நிர்வாகம் மற்றும் ரோகித் சர்மாவிடம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் இந்தியா பெற்ற வெற்றிக்கு பிறகும், தந்தையான பிறகும் அவர் இந்த முடிவை தெரிவித்து இருக்கிறார்.
இதனால் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்துக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுகிறார். 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது.
இந்தப்போட்டி முடிந்த பிறகு ரோகித்சர்மா ஒயிட் பால் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக நீடிப்பார்
விராட் கோலி 95 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 65-ல் வெற்றி கிடைத்துள்ளது. 27 போட்டிகளில் தோற்றது. 2 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது. 45 இருபது ஓவர் போட்டியில் 29-ல் இந்தியா வெற்றி பெற்றது. 14-ல் தோல்வி ஏற்பட்டது. 2 போட்டி முடிவு இல்லை.
ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை விராட் கோலி 132 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 62-ல் வெற்றி பெற்றார். 66 போட்டிகளில் தோற்றார். 4 ஆட்டங்கள் முடிவு இல்லை. ஆனால் ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக்கொடுக்கவில்லை.
ரோகித் சர்மா உலகின் தலைசிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் ஒருநாள் போட்டியில் 10 ஆட்டங்களுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 8 வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது. 19 இருபது ஓவர் போட்டியில் 15-ல் வெற்றி கிடைத்தது. 4-ல் தோல்வி ஏற்பட்டது.
ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 2018-ல் இலங்கையில் நடந்த 3 நாடுகள் போட்டியிலும், ஆசிய கோப்பையிலும் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை 123 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்து உள்ளார். இதில் 74 போட்டியில் வெற்றி பெற்றார். 49-ல் தோல்வி ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 5 முறை (2013, 2015, 2017, 2019, 2020) ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி காட்டுத்தீ போன்று வேகமாக பரவி வரும் நிலையில், பி.சி.சி.ஐ. இந்த செய்தி எந்த உண்மையும் இல்லை என திட்டவட்டாக மறுத்துள்ளது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமல் கூறுகையில் ‘‘இது எல்லாம் பொய்யான செய்தி. இதுகுறித்து எதுவும் நடக்கவில்லை. மீடியாக்கள்தான் இதுபற்றி பேசிக் கொண்டிருக்கின்றன. பி.சி.சி.ஐ. ஆலோசனை நடத்தவில்லை. கேப்டன் பதவியை பிரித்து வழங்குவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை’’ என்றார்.






